இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE நிறுவனம், “BestWeb.lk – 2025” விருது வழங்கும் நிகழ்வில் நிதி மற்றும் காப்புறுதித் துறையின் ஒட்டுமொத்த வெண்கல விருதைப் பெற்றுள்ளது. இலங்கையின் சிறந்த வலைத்தளங்களை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்யும் BestWeb.lk விருது வழங்குமு; நிகழ்வில், HNB FINANCE நிறுவனத்தின் www.hnbfinance.lk வலைத்தளம் இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிறுவனம் டிஜிட்டல் நிதிச் சேவைத் துறையில் பெற்றுள்ள வாடிக்கையாளர் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், நிதி மற்றும் காப்புறுதித் துறையின் அதிக வரவேற்புப் பெற்ற வலைத்தளத்திற்கான விருதையும் வெல்ல முடிந்துள்ளது.
LK Domain Registry ஆல் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்த விருதுகளுக்கு நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பல விண்ணப்பிக்கின்றன, மேலும் HNB FINANCE PLCஇன் வலைத்தளமும் கடந்த காலங்களில் மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில், விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் வலைத்தளங்களின் ஆக்கப்பூர்வமான விளக்கக்காட்சி, வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் சேவைகளை எளிதாக அணுகும் திறன் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற காரணிகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
“எங்கள் வலைத்தளம், அதிகரித்து வரும் பல்வேறு வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மட்டுமல்லாமல், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சேவைகளை வழங்குவதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேம்பட்ட தொழில்நுட்ப முறைகள் மற்றும் வாடிக்கையாளர் நட்பு முறையில் அதன் வடிவமைப்பின் எளிமை ஆகியவற்றின் அடிப்படையில் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. இவை அனைத்தின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் நம்பகமான தரமான சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். நிதித் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கு பங்களிக்கும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொள்வதற்கான எங்கள் முயற்சிகளை இந்த விருது உறுதிப்படுத்துகிறது. அத்தகைய அங்கீகாரம் நிதித் துறையில் தரத்தின் அடிப்படையில் இன்னும் உயர்ந்த பதவிகளை அடைய தேவையான ஊக்கத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று HNB FINANCEஇன் சந்தைப்படுத்தல் தலைவர் திரு. உதார குணசிங்க கூறினார்.
இந்த விருது வழங்கும் நிகழ்விற்கான நடுவர் குழுவில் நிதித்துறையில் சிறந்த நிபுணர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் அடங்கிய குழு இருந்தது. விருதுகளுக்கு சமர்ப்பித்த நிறுவனங்களின் வலைத்தளங்கள் கடுமையான மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றின் தொழில்நுட்ப கட்டமைப்பு, தகவல் விளக்கக்காட்சி, வடிவமைப்பு தரம் மற்றும் வாடிக்கையாளர் பயன்பாடு போன்ற காரணிகள் பரிசீலிக்கப்பட்டன.
தொழில்நுட்ப பின்னணியில் தொழில்நுட்ப வடிவமைப்பு, வலைத்தளத்தின் பல்வேறு அம்சங்களுக்கான அணுகல் எளிமை, தொழில்நுட்ப தரநிலைகள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றைக் கடைப்பிடித்தல் ஆகியவை அடங்கும். படைப்பு மதிப்பீட்டில் வலைப்பக்கங்களின் கட்டமைப்பு, பக்க அமைப்பு, நிலை மற்றும் தகவலின் அளவு போன்ற காரணிகள் அடங்கும்.