Business Today 2022 விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையின் சிறந்த 5 நிறுவனங்கள் வரிசையில் HNB இடம்பிடித்துள்ளது

Share

Share

Share

Share

இலங்கையின் மிகவும் புத்தாக்கமான வங்கியான HNB, கடந்த ஆண்டு வங்கித் துறையில் கடுமையான சவால்களுக்கு மத்தியில் வலுவான மற்றும் சிறந்த செயல்திறன் வெளிப்படுத்தியன் காரணமாக 2022 ஆம் ஆண்டிற்கான Business Today சஞ்சிகையின் BT Top 40 இல் முதல் 5 நிறுவனங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொனதன் அலஸ் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த நான்கு வருடங்களில் இலங்கை முன்னெப்போதையும் விட அதிகமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் HNB வெளிப்படுத்திய சிறப்பான செயல்திறன் அதன் மாற்றியமைக்கும் திறனுக்கு சரியான சான்றாகும். இந்த நெருக்கடிக்கு தீர்வை முன்வைக்கும் வகையில், வங்கியின் அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகளை விஸ்தரித்து, SMEகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு எங்கள் வங்கி முன்னுரிமை அளித்தது.

“இந்த ஆண்டுக்கான Business Today தரவரிசையில் எங்கள் செயல்திறன் எங்கள் பயணத்தின் வெற்றிக்கு வலுவான உத்தரவாதமாகும். இத்தகைய இக்கட்டான நேரத்தில் எங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த HNB குழுவிற்கும் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். தடையற்ற மற்றும் வசதியான வங்கி அனுபவத்தை வழங்க நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம் மற்றும் நமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குகிறோம்.” என தெரிவித்தார்.

1997 இல் Business Today தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, HNB BT Top 10ல் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. Business Todayன் சிறந்த 40 நிறுவனங்கள் அனைத்து விண்ணப்பதாரர்களும் தொழில்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் குழுவால் துல்லியமாக மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தரவரிசைப்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டு தரவரிசைக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் அவற்றின் வளர்ச்சியின் தரம், பெருநிறுவன நிர்வாகம் மற்றும் நீண்ட கால உட்பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது.

அதன் சிறப்பை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில், Asian Banker சஞ்சிகை நடத்திய மதிப்புமிக்க சர்வதேச வாடிக்கையாளர் நிதிச் சேவைகள் 2023 விருது வழங்கும் நிகழ்வில் 13வது முறையாக HNB இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

HNB සමූහය 2025 වසරේ පළමු...
Samsung Sri Lanka Ushers in...
සන්ෂයින් හෝල්ඩින්ග්ස් සිංහල හා හින්දු...
Samsung Unveils Vision AI for...
Sunshine Holdings ushers in Sinhala...
විශේෂ වාහන ලීසිං විසඳුම් ලබා...
From Singapore to Colombo: MasterChef...
පෑන් ඒෂියා බැංකුව, IBM හි...
විශේෂ වාහන ලීසිං විසඳුම් ලබා...
From Singapore to Colombo: MasterChef...
පෑන් ඒෂියා බැංකුව, IBM හි...
HNB Financeஇன் “வெசக் சிரிசர” கொண்டாட்டம்...