BYD இன் முதல் பயணிகள் வாகனத் தொகுதி இலங்கையை வந்தடைந்தது: நிலைபேறான போக்குவரத்தை ஊக்குவிப்பதில் John Keells CG Auto புதிய மைல்கல்

Share

Share

Share

Share

ஹம்பாந்தோட்டை, இலங்கை – இலங்கையின் வாகனத் துறையில் ஒரு முக்கியமான நிகழ்வாக, BYD நிறுவனத்தினால் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிநவீன புதிய ஆற்றல் வாகனங்களின் (NEV) முதல் தொகுதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கையில் BYD வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்தின் மூலம் சாத்தியமான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல், இலங்கையின் வாகனத் துறையில் புத்தாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து தீர்வுகளை ஊக்குவிப்பதில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.

இலங்கையை வந்தடைந்த இந்த வாகனத் தொகுதியில் BYD SEALION 6, BYD ATTO 3, BYD DOLPHIN மற்றும் பல்வேறு அதிநவீன புதிய ஆற்றல் வாகனங்கள் உள்ளிட்ட BYD நிறுவனத்தின் உலகளவில் பிரபலமான மாதிரிகளின் புதிய தொகுப்பு அடங்கியுள்ளது. இந்த அதிநவீன ஆற்றல் வாகனங்கள் இலங்கையின் வாகன ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான இறக்குமதி கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இலங்கை சந்தைக்குள் முதலில் நுழையும் வாகனங்களில் ஒன்றாக BYD இடம்பிடித்துள்ளது. இதன்படி, வாகனங்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கான முதல் விநியோகம் அடுத்த சில வாரங்களில் ஆரம்பமாகவுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த John Keells CG Auto நிறுவனத்தின் பொது முகாமையாளர் சரித் பண்டிதரதட்ன, “BYD உடனான எங்கள் கூட்டாண்மை சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து தீர்வுகளை ஊக்குவிப்பதில் எங்கள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது, மேலும் இது இலங்கையில் தூய்மையான, நிலைபேறான எதிர்காலத்திற்கான தொலைநோக்கு பார்வைக்கு ஆதரவளிக்கிறது. இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு இப் புதிய எரிசக்தி வாகனங்களை இலங்கைக்குக் கொண்டு வந்த முதல் நிறுவனமாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். John Keells குழுமத்திற்குள் உள்ள ஒருங்கிணைந்த சக்திகளைப் பயன்படுத்தி, இலங்கை நிலைபேறான போக்குவரத்தை நோக்கி பயணிக்க உயர்தர வாகனங்கள், உள்கட்டமைப்பு மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சிறந்த சேவைகளை வழங்கி, இலங்கையை நிலைபேறான மாற்றத்தை நோக்கி வழிநடத்த உதவுவதே எங்கள் குறிக்கோள்” என்றார்.

BYD நிறுவனத்தின் புத்தாக்க தொழில்நுட்பம் மற்றும் உயர்தரமான செயல்திறனை நாட்டின் நெடுஞ்சாலைகளுக்குக் கொண்டு வரும் நோக்கில் JKCG Auto நிறுவனம் அடுத்த சில வாரங்களில் இலங்கை வாடிக்கையாளர்களுக்கு BYD வாகனங்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மேலும் பல நவீன வாகனங்களை அறிமுகப்படுத்தி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கொண்ட வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், இலங்கையின் நிலைபேறான போக்குவரத்து புரட்சியின் முன்னோடியாக தனது பங்கை வலுப்படுத்தவும் JKCG Auto நிறுவனம் தயாராகி வருகிறது.

BYD தொடர்பில்
BYD என்பது ஒரு பல்தேசிய உயர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது இந் நிறுவனமானது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் தொழில்நுட்ப புத்தாக்கங்களையும், கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்த தன்னை அர்ப்பணித்துள்ளது. 1995 ஆம் ஆண்டில் Recharge செய்யக்கூடிய பேட்டரி தயாரிப்பாளராக நிறுவப்பட்ட BYD நிறுவனம், தற்போது மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து, புதிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வணிக துறைகளில் இயங்கி வருகிறது. BYD ஆனது, சீனா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், பிரேசில், ஹங்கேரி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 30 க்கும் மேற்பட்ட தொழில்துறை பூங்காக்களை கொண்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் சேமிப்பகம் முதல் அதன் பயன்பாடுகள் வரை, zero-emission energy solutions வழங்குவதற்கு BYD அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது. அதன் புதிய மின்சாரவாகனமானது இப்போது 6 கண்டங்களில், 70 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட நகரங்களில் காணப்படுகின்றது. ஹொங்கொங் மற்றும் ஷென்ஜென் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், பசுமையான உலகத்தை நோக்கிய புத்தாக்கங்களை வழங்கும் Fortune Global 500 நிறுவனமாக அறியப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து www.bydglobal.com ஐப் பார்வையிடவும்.

JKCG Auto தொடர்பில்
John Keells CG Auto Private Limited (JKCG) ஆனது John Keells Holdings PLC இன் துணை நிறுவனமாகும். 2023 இல் வாகனத் துறையில் பிரவேசித்த JKCG Auto நிறுவனம் இலங்கையில் BYD பயணிகள் வாகனங்கள், உதிரிப் பாகங்கள் மற்றும் சேவைகளின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகும். புதிய மின்சார வாகனங்களில் (NEV) வாடிக்கையாளர் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், NEVகளுக்கான புதிய தரநிலைகளை அமைப்பதற்கும் மற்றும் இலங்கையில் EVகளுக்கான உட்கட்டமைப்பு அமைப்பை மேம்படுத்துவதற்கும் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து www.johnkeellscgauto.com ஐப் பார்வையிடவும்.

CG Corp Global தொடர்பில்
CG Corp Global என்பது 140 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட பன்னாட்டு நிறுவனமாகும். இது விருந்தோம்பல், வங்கி, உணவு, குளிர்பானம், அசையாச் சொத்து (real estate) மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்வகைப்பட்ட தொழில்களைக் கொண்டுள்ளது. நேபாளத்தின் முதல் பில்லியன் டொலர் பன்னாட்டு நிறுவனமாக, CG Corp Global 35க்கும் மேற்பட்ட நாடுகளில் 160க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் செயல்படுகிறது. இந்தக் குழுமம் வளர்ந்து வரும் சந்தைகளில் புத்தாக்கம், நிலைபேறாண்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து www.cgcorpglobal.com ஐப் பார்வையிடவும்

உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடரும் HBO MAX,...
HBO Max continues global expansion,...
Rockland Group Commemorates 101 Years...
City of Dreams Sri Lanka-வின்”Signature...
அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
Evolution Auto மற்றும் Ather Energy...