பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (CA Sri Lanka) 44வது பட்டயக் கணக்காளர்களின் தேசிய மாநாட்டிற்கான மதிப்புமிக்க தங்க விருதிற்கான அனுசரணையாளராக அறிவித்தது.
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிதி அதிகாரி அருண தீப்திகுமார் மற்றும் சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா லிமிடெட்டின் பிரதி நிதிக் கட்டுப்பாட்டாளர் சாமர விஜேசூரிய ஆகியோர் அண்மையில் CA ஸ்ரீலங்கா பிரதிநிதிகளிடம் தங்க விருது அனுசரணைக்கான உத்தியோகபூர்வ காசோலையை கையளித்தது. இலங்கையில் கணக்கியல் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.
இந்த அனுசரணை குறித்து கருத்து தெரிவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிதி அதிகாரி அருண தீப்திகுமார், “44வது தேசிய பட்டய கணக்காளர் மாநாட்டிற்கு தங்க விருது அனுசரணையாளராக முன்வந்திருப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். இந்த நிகழ்வு தொழில்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கியமான விஷயங்களை விவாதிக்க ஒரு விதிவிலக்கான தளத்தை முன்வைக்கிறது, மேலும் தேசத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு உறுதியளிக்கும் ஒரு நிறுவனமாக இந்த நடவடிக்கை முக்கிய தேசிய உரையாடலுக்கு பங்களிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.” என தெரிவித்தார்.
மதிப்புமிக்க இந்த மாநாடு இலங்கை முழுவதும் உள்ள பட்டயக் கணக்காளர்களின் வருடாந்த நாட்காட்டியில் ஒரு முக்கிய அங்கமாகும். “சரியான புயலுக்கு அப்பால், வாய்ப்பைப் பிடிப்பது” என்ற தொனிப்பொருளின் கீழ், இது அக்டோபர் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறும். மாற்றத்தின் போது கணக்கியல் தொழில் எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி, அனுசரிப்பு மற்றும் புத்தாக்கமான உணர்வை உள்ளடக்கியது.
பட்டயக் கணக்காளர்களின் தேசிய மாநாடு, நிபுணர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கணக்கியல் தொடர்பான துறைசார் நிபுணர்களுக்கு வணிக மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கு அவசியமான தந்திரோபயம் பற்றி விவாதிக்க ஒரு குறிப்பிடத்தக்க தளமாக செயல்படுகிறது. புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் கணக்கியல் வல்லுநர்களின் கூட்டத்துடன், இலங்கையின் பொருளாதார நிலைமையை சீர்செய்து சரியான திசையில் கொண்டு செல்ல வழியமைக்கும் என கூறலாம்.