ஆசியாவின் சிறந்த வளர்ந்துவரும் Podcast விருதை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த Stefan de Alwis-இன் The 3i Show

கொழும்பு, புதன்கிழமை 07 ஜனவரி 2026: ஸ்டீபன் டி அல்விஸ் வழங்கும் தி 3ஐ ஷோ (The 3i Show), மதிப்புமிக்க ஏஷியா விருதுகள் நிகழ்வில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த வளர்ந்துவரும் Podcast நிகழ்ச்சி விருதை வென்றுள்ளது. இதன் மூலம், ஆசியாவின் டிஜிட்டல் ஊடகம் மற்றும் சிந்தனைத் தலைமைத்துவ துறையில் இலங்கையின் வளர்ந்துவரும் செல்வாக்கு பிராந்திய அரங்கில் சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம் Podcast-ஐ ஒரு வளர்ந்துவரும் பிராந்திய மேடையாக மட்டுமல்லாமல், தேசிய பெருமையின் […]
2026 FIFA உலகக் கிண்ணத்தின் முதல் முன்னுரிமை பெற்ற சமூக ஊடகத் தளமாக TikTok அறிவிப்பு

2026 FIFA உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம் புதிய பரிமாணத்தில் கொண்டு செல்லும் நோக்கில், TikTok நிறுவனத்துடன் FIFA வரலாற்றுச் சிறப்புமிக்க உலகளாவிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், FIFA உலகக் கிண்ண வரலாற்றிலேயே முதல்முறையாக அதன் ‘முன்னுரிமை பெற்ற தளம்’ (Preferred Platform) என்ற அந்தஸ்தை TikTok பெறுகிறது. இதன் விளைவாக, உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பான விரிவான அதிகாரப்பூர்வத் தகவல்கள், மைதானத்திற்குப் பின்னால் நடக்கும் சுவாரஸ்யமான பிரத்யேகக் காட்சிகள் […]
S&P Sri Lanka சுட்டெண்ணில் இணையும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி

கொழும்பு பங்குச் சந்தை (CSE) மற்றும் S&P Dow Jones Indices ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டு இறுதி மறுசீரமைப்பைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் இயங்கிவரும் முன்னணி நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ‘S&P Sri Lanka 20’ சுட்டெண்ணில் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பானது, 2025 டிசம்பர் 19 அன்று பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவடைந்த பின்னர், 2025 டிசம்பர் 22 முதல் அமுலுக்கு வந்துள்ளது. S&P Sri Lanka 20 சுட்டெண்ணானது, கொழும்பு பங்குச் […]
இலங்கையர்களின் முதன்மையான தேடல் தளமாக உருவெடுக்கும் TikTok

தகவல்களைத் தேடும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக TikTok இன் தேடல் (search) வசதி இன்று உருவெடுத்துள்ளது. புதிய சிந்தனைகளை ஆராய்வதற்கும், அன்றாட வாழ்வியல் திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், தங்களுக்குத் தேவையான உத்வேகத்தைப் பெறுவதற்கும் மில்லியன் கணக்கானோர் இத்தளத்தை நாடுகின்றனர். குறிப்பாக, தங்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையை முறையைப் பிரதிபலிக்கும் உள்ளடக்கங்களோடு தங்களை இணைத்துக்கொள்ளும் ஒரு முக்கிய மையமாக இன்று TikTok மாறியுள்ளது. தகவல்களைத் தேடுவதில் ஏற்பட்டுள்ள உலகளாவிய மாற்றத்தின் பிரதிபலிப்பாக, TikTok இன்று ஒரு ‘வீடியோ […]
வாடிக்கையாளர் மின்னணு சாதனங்களில் Samsung நிறுவனத்திற்கு Sri Lanka’s Choice 2025 விருது

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் விரும்பத்தக்க தொழில்நுட்ப வர்த்தக நாமங்களில் ஒன்றாக Samsung நிறுவனத்தின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், மதிப்புமிக்க Superbrands – Sri Lanka’s Choice 2025 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் வலுவான விருப்பம், தொடர்ச்சியான வர்த்தக நாம தலைமைத்துவம் மற்றும் இலங்கை வீடுகளுக்கு அர்த்தமுள்ள புத்தாக்கங்களை வழங்குவதற்கான Samsung இன் நிலையான அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த விருது பிரதிபலிக்கிறது. Superbrands என்பது வர்த்தகநாம சிறப்பு தொடர்பான உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுதந்திரமான மற்றும் […]
இலங்கையின் தேயிலைத் தோட்டப் பகுதியிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாத்தல்

இலங்கையின் தேயிலைத் தோட்டப் பகுதி பல்லுயிர் பெருக்கத்திற்கான ஒரு வாழும் புகலிடமாக உள்ளது. பல பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) தீவிரமாகச் செயற்பட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மீட்டெடுக்கின்றன. இதன் மூலம், தோட்டப் பயிர்களுடன் செழித்து வளரும் செழுமையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாக்கின்றன. இயற்கை வனங்கள் மற்றும் அருகிவரும் உயிரினங்களைப் பாதுகாப்பது முதல், வனவிலங்கு வழித்தடங்களை உருவாக்குவது மற்றும் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துவது வரை, இந்தப் பெருந்தோட்டங்கள் பல்லுயிர்ப் பெருக்கமும் தேயிலையும் இணைந்து செழிக்கக்கூடிய சூழலை வழங்குகின்றன. […]
E-மோட்டார் அட்டை அறிமுகத்துடன், இலங்கை பொலிஸுக்கு 500 டேப்லெட்களை வழங்கிய இலங்கை காப்புறுதி சங்கம்

இலங்கை காப்புறுதி சங்கம் (IASL) E-Motor காப்புறுதி டிஜிட்டல் அட்டையின் உத்தியோகப்பூர்வ வெளியீட்டு விழா மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 500 டேப்லெட் கணினிகளை வழங்கும் நிகழ்வு பத்தரமுல்ல சுஹுருபாயவில் உள்ள பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சக கேட்போரியக் கூடத்தில் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஜனவரி 7ஆம் திகதி நடைபெற்ற இந்த நிகழ்வில் IASL அலுவலக பொறுப்பாளர்கள், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணையம் (IRCSL), அனைத்து பொது காப்புறுதி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், […]
உலகளவில் STEM வேகமாக வளர்ந்து வரும் நிலையில், உள்ளூர் உருவாக்குநர்களின் பற்றாக்குறையால் ஆபத்தை எதிர்கொள்ளும் இலங்கை

இலங்கை நீண்டகாலமாக இப்பிராந்தியத்தில் கல்வித் துறையில் முன்னணி உள்ள நாடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நாட்டில் நடைபெறுகின்ற பரீட்சைகளில் சித்தியடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாட்டின் கல்வி முறைமையும் காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபட வேண்டும் என்றாலும், இலங்கையில் அந்த மாற்றம் மிகவும் மெதுவாகவே நடைபெறுகிறது. இதன் காரணமாக, தற்போதைய இளைஞர்கள் எதிர்கால உலகத்தை எதிர்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பது தவிர்க்க முடியாதது. இந்தச் சூழலில் STEM கல்வி மிக […]
டிட்வா புயல் நிவாரணப் பணிகளுக்காக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்த HNB

டிட்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீட்டியெடுக்கும் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், ‘Rebuild Sri Lanka’ நிதியத்திற்காக HNB PLC நிறுவனம் 100 மில்லியன் ரூபாயை பங்களிப்பாக வழங்கியுள்ளது. “HNB வங்கியின் சார்பாக, எமது சக நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக டிட்வா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது ஒற்றுமையையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உள்நாட்டில் உருவான ஒரு நிறுவனம் என்ற வகையில், நாம் சேவை செய்யும் சமூகங்களுடன் எமக்கு ஆழமான பிணைப்பு உள்ளது. எமது […]
Healthguard Distribution நிறுவனத்தின் அனைத்து பிராந்திய மருந்து விநியோக அலகுகளுக்கும் ISO 9001:2015 மற்றும் GDP சான்றிதழ்

சன்ஷைன் ஹோல்டிங்ஸின் மருந்து விநியோகப் பிரிவான Healthguard Distribution, அண்மையில் அதன் ஏழு பிராந்திய மருந்து விநியோக அலகுகளுக்கு ISO 9001:2015 மற்றும் Good Distribution Practice (GDP) சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. இந்த சான்றிதழ்களை பியூரோ வெரிடாஸ் இலங்கை வழங்கியுள்ளது. மருந்து இறக்குமதி, சேமிப்பு மற்றும் விநியோகம் தொடர்பான உயர்தர தரநிலைகளை பேணுவதற்கான Healthguard Distributionஇன் உறுதியான அர்ப்பணிப்பை இந்த கௌரவமான சான்றிதழ்கள் சிறந்த முறையில் நிரூபிக்கின்றன. ISO 9001:2015 என்பது, சர்வதேச தர நிர்ணய அமைப்பு […]