சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில் கலைநயத்துடன் அரங்கேறிய காதலர் தினக் கொண்டாட்டம்

கொழும்பு, 23 பெப்ரவரி 2026: காதலின் உன்னதத்தையும், கலைநயத்தையும் பறைசாற்றும் வகையில், சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa விடுதியில் இவ்வாண்டு காதலர் தினம் மிகுந்த நேர்த்தியுடன் கொண்டாடப்பட்டது. மனதைக் கவரும் நுணுக்கமான கலைவண்ணத்தில் உருவான இனிப்பு வகைகள் இந்த கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தன. பளபளப்பான இதய வடிவிலான பிராலின்கள் (Pralines), புத்தம் புதிய ஸ்ட்ராபெர்ரி பழங்களால் அலங்கரிக்கப்பட்ட இனிப்புகள் மற்றும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ‘பெட்டிட் ஃபோர்ஸ்’ (Petit Fours) என ஒவ்வொன்றும் அன்பின் அடையாளமாக […]
The Selvern Trust புதிய மொழி app ஐ அறிமுகம் செய்துள்ளது

ஆங்கில மொழி தொடர்பாடலை இலகுவாக்கும் வகையில் real-time AI ஆதரவுடன் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்தும் புத்தாக்கமான app ஆக SELVE அமைந்துள்ளது. ஆங்கிலம் பேச்சுத்திறனில் போதியளவு முன்னேற்றமின்மையால் தமது தொழில்நிலைகளில் மேம்பட முடியாதவர்களுக்கு உதவும் வகையில் Selvern Trust இனால் இந்த app வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற மொழிசார் தடைகளை தீர்ப்பதற்கு உதவும் வகையில் SELVE செயலாற்றும். 2026 மார்ச் மாதத்தில் உபயோகிப்பதற்கு இலவச பரீட்சார்த்த காலத்தை வழங்கும் SELVE, ஆங்கிலப் பேச்சுத் திறன் குறைபாட்டினால் பல்வேறு […]
தனியார் சுகாதார சேவைத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒரே மேடைக்கு அழைக்கும் APHNH சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கம் முதல் முறையாக ஏற்பாடு செய்த சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026, மார்ச் 9ஆம் திகதி வோட்டர்ஸ் ஏஜ் வளாகத்தில் மிகவும் வெற்றிகரமான முறையில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் தனியார் வைத்தியசாலைத் துறையின் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குபடுத்துனர்கள், காப்புறுதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கையின் சுகாதார சேவைத் துறையில் நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு அவை கலந்துரையாடப்பட்டன. தனியார் வைத்தியசாலைகள் மற்றும் […]
எரிசக்தி மாற்றத்திற்கான புதிய வழிகாட்டி: 2026-ஆம் ஆண்டிற்கான முக்கிய போக்குகளை வெளியிட்டது Huawei

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையானது தற்போது அதிவேக வளர்ச்சிக் கட்டத்தைக் கடந்து, ஒட்டுமொத்த மின் விநியோகக் கட்டமைப்புடன் முழுமையாக ஒன்றிணையும் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இந்த மாற்றத்தினால், மின் விநியோகக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை, செலவுத் திறன் மற்றும் பெருமளவிலான பெருமளவிலான நுண்ணறிவு ஒருங்கிணைப்பு போன்ற புதிய சவால்களை இத்துறை எதிர்கொண்டு வருகின்றது. இந்தச் சவால்களுக்குத் தீர்வாக, சூரிய சக்தி, காற்று மற்றும் எரிசக்தி சேமிப்பு (ESS) நம்பகமான மற்றும் முதன்மையான எரிசக்தி ஆதாரங்களாக மாற்றலாம் என்பது குறித்த […]
உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், கிரிக்கெட் வரலாற்றில் இது பல புதிய விடயங்களை இணைத்துள்ளது. இலங்கையில் வயது வேறுபாடின்றி அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே, இம்முறை நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்ப்பதில் இலங்கை ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். போட்டிகளைப் பார்ப்பதுடன் மட்டுமன்றி, கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யமான விடயங்கள் மற்றும் கலந்துரையாடல்களைக் கேட்பதற்கு ரசிகர்கள் பழகிவிட்டனர். ஏனெனில், இது போட்டியைப் […]
இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் இலங்கை பொருந் தோட்ட உரிமையாளர்களின் வருங்கால வைப்பு நிதிச் சங்கம்

இலங்கையில் முதலில் நிறுவப்பட்ட நலன்புரி நிதிகளில் ஒன்றான இலங்கைத் பெருந்தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம், 2026 மார்ச் 10ஆம் திகதியன்று தனது நூற்றாண்டு விழாவை மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. இச்சங்கம் உத்தியோகப்பூர்வமாக இன்றிலிருந்து நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டது. தொழில் ரீதியாக தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட உரிமையாளர்களின் ஓய்வூதியத்தை பாதுகாப்பதே இந்நிதியின் நோக்கமாகும். தன்னார்வ ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாக 331 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியமானது, ஆண்டுக்காண்டு பலமாக வளர்ச்சியடைந்து இன்று 1700க்கும் மேற்பட்ட […]
Prime Group இளைஞர்களின் விருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் Battle of the Blues மற்றும் Maroons சமர் போட்டிகளின் உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளராக தொடர்ந்தும் அனுசரணை

Prime Group, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் 30 வருட கால சிறப்பைக் கொண்டாடும் தருணத்தில், சமூக மற்றும் இளைஞர் அபிவிருத்திக்கான தனது அர்ப்பணிப்பை வெறும் கட்டுமானத் துறையில் மாத்திரம் மட்டுப்படுத்தாது அதற்கும் அப்பால் விஸ்தரித்துள்ளது. இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நிறுவனங்கள், பாரம்பரியங்கள் மற்றும் சமூகங்களில் முதலீடு செய்யும் விரிவான நோக்கத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பாடசாலை கிரிக்கெட் சமர்களுக்கான உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளராக இம்முறை Prime Group இணைந்துள்ளது. […]
தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த சொகுசு விடுதி City of Dreams Sri Lanka-இற்கு வலுச்சேர்க்கும் பெண்கள்

இந்தச் சர்வதேச மகளிர் தினத்தில் உள்ளடக்கம், தலைமைத்துவம் மற்றும் வாய்ப்புகள் குறித்து City of Dreams Sri Lanka பெருமிதம் கொள்கிறது. கொழும்பு, 2026 மார்ச் 04: தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த சொகுசு விடுதியான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka), நாட்டின் சுற்றுலாத்துறையில் பிரம்மாண்டம், நவீனத்துவம் மற்றும் சர்வதேச தரத்துடன் கூடிய ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு விருந்தோம்பல், கேமிங், சில்லறை வர்த்தகம், பொழுதுபோக்கு போன்ற பல்வேறு […]
டிஜிட்டல் யுகத்தை ஆதரிக்கும் வகையில் புதிய மனித வள முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தும் சன்ஸைன் ஹோல்டிங்ஸ்

பன்முகத்தன்மை கொண்ட நிறுவனங்களின் குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், முழு குழுமத்திற்கும் புதிய மனித வள முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, குழுமத்தின் விரிவான டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிர்வாக முயற்சிகளில் ஒரு முக்கிய படியாகும். இந்த புதிய அமைப்பு அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், சிரேஷ்ட தலைமைத்துவ குழுக்கள், திட்டத்திற்கு பொறுப்பான குழுக்கள், சன்ஷைன் உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு குழுக்கள் / […]
இலங்கையில் முதலீடுகளைத் தக்கவைக்க நிலையான கொள்கை அவசியம் என்கிறது ‘ஓனிவர்ஸ்’ குழுமம்

இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களும் தொழில்துறை தலைவர்களும், குறிப்பாக நிதி மற்றும் செயல்பாட்டு விதிகளில் நிலையான ஒழுங்குமுறைகளை வழங்க வேண்டும். முன்னர் Calzedonia Group என்று அழைக்கப்பட்ட ஓனிவர்ஸ் குழுமத்தின் தலைவர் டொக்டர் சாண்ட்ரோ வெரோனேசி இது குறித்துக் கூறுகையில்: “முதலீட்டுச் சுழற்சியின் போதோ அல்லது நீண்டகால செயல்பாடுகளை முன்னெடுக்கும் போதோ ஒழுங்குமுறைகள் மாற்றமடையும் போது, அது முதலீட்டாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. நிறுவனங்கள் எப்போதும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய சூழல்களை அடிப்படையாகக் கொண்டே தமது திட்டமிடல்களை மேற்கொள்கின்றன.” என […]