அனுபவம் மிக்க தலைவர் விஷ் கோவிந்தசாமிக்குப் பிறகு, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் புதிய யுகத்தை நோக்கிய பொறுப்பை ஏற்கிறார் ஷியாம்

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் நிறைவேற்று அதிகார பதவியில் இருந்த விஷ் கோவிந்தசாமி அவர்கள் அப்பதவியிலிருந்து விலகி, பிரதித் தலைவராக நிறைவேற்று அதிகாரமில்லாத பதவியை வகிப்பதாக நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது. குழுமத்தில் அவர் வகித்த சிறந்த தலைமை, புத்தாக்கமான மாற்றங்களை கொண்டு வருதல் மற்றும் பொறுப்பான தொழில் முனைவோருக்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை அவரது 28 ஆண்டு வணிக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சாதனைகளாக உள்ளன. கோவிந்தசாமி அவர்கள் தொடர்ந்து குழுமத்தின் ஆலோசகராகப் பணியாற்றுவார். கோவிந்தசாமி அவர்களுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வாகவும், […]

சுவ திவியவின் ‘ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தயாரா?’ நிகழ்ச்சித் திட்டம் உலக சுகாதார தினத்தில் ஆரம்பம்: ஊழியர்களின் ஆரோக்கியத்தில் முன்னோடியாக இருக்குமாறு நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கிறது!

ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, ‘ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தயாராகுங்கள்’ என்ற பிரச்சாரத்தை சுவ திவிய அறிமுகப்படுத்துகிறது. இது நிறுவனங்கள் ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், நிலைபேறான பணியிட நலத்திட்டங்களை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்ட முயற்சியாகும். இந்த முயற்சி சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கான நலத்திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, தங்கள் பணியாளர்களிடையே ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் நிலைபேறாண்மை கலாச்சாரத்தை வளர்க்க விரும்பும் அனைத்து நிறுவனங்களுக்கும் விரிவடைகிறது. அந்தவகையில் பணியிடங்களை ஆரோக்கியமான இடங்களாக மாற்ற நிறுவனத் தலைவர்கள், மனிதவள […]

இலங்கை நுரையீரல் நிபுணர்களின் கல்லூரியின் RESPIRE 2025இன் பிளாட்டினம் அனுசரணையாளராக இணையும் Lina

Lina Manufacturing, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் மருந்து உற்பத்தி பிரிவானது, இலங்கை நுரையீரல் நோய் நிபுணர்களின் கல்லூரியின் 15வது வருடாந்திர கல்வி மாநாடான RESPIRE 2025 இன் பிளாட்டினம் அனுசரணையாளராக, அண்மையில் அக்கல்லூரியுடன் கைகோர்த்து, சுவாசத்துடன் தொடர்புடைய ஆரோக்கியத்திற்கான தங்களது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டில், உலகளவிலும் பிராந்திய அளவிலும் உள்ள சுவாச மருத்துவம் சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், இந்தத் துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள், […]

MAS, இலங்கை தேசிய விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு உத்தியோகபூர்வ விளையாட்டு உடை தொகுப்புகளை வழங்குகிறது

“MAS Holdings இன் துணை நிறுவனமான Bodyline (Private) Limited, இலங்கை தடகள சம்மேளனத்துடன் (SLA) மேற் கொண்டுள்ள கூட்டு ஒத்துழைப்பின் அடுத்த கட்டமாக, 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தடகள வீர, வீராங்கனைகளின் விளையாட்டு உடை தொகுப்புகளை உத்தியோகப்பூர்வமாக வழங்கியது. இந்த விளையாட்டு உடை தொகுப்புகளை வழங்குவதற்கான நிகழ்வு 2025 ஏப்ரல் 7 ஆம் திகதி நடைபெற்றது. மேலும், 2028 ஆம் ஆண்டு லோஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வரை, Bodyline நிறுவனம் […]

BYD இன் முதல் பயணிகள் வாகனத் தொகுதி இலங்கையை வந்தடைந்தது: நிலைபேறான போக்குவரத்தை ஊக்குவிப்பதில் John Keells CG Auto புதிய மைல்கல்

ஹம்பாந்தோட்டை, இலங்கை – இலங்கையின் வாகனத் துறையில் ஒரு முக்கியமான நிகழ்வாக, BYD நிறுவனத்தினால் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிநவீன புதிய ஆற்றல் வாகனங்களின் (NEV) முதல் தொகுதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கையில் BYD வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்தின் மூலம் சாத்தியமான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல், இலங்கையின் வாகனத் துறையில் புத்தாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து தீர்வுகளை ஊக்குவிப்பதில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் […]

TikTok-இல் தொடங்கி உலக திருமதி அழகுராணிப் போட்டி வரை: இஷாதி அமந்தாவின் வெற்றிப் பயணம்

மார்ச் மாதம் என்பது பெண்களைக் கொண்டாடும் மாதமாகும். இந்தக் காலப்பகுதியில், பெண்களின் இணையற்ற வலிமை, உறுதிப்பாடு மற்றும் திறமை பற்றி மீண்டும் மீண்டும் பேசுவது முக்கியமாகிறது. ஏனெனில் உலகின் பல பகுதிகளில் அவர்கள் வெற்றிகளை அடைந்து வருகின்றனர். இஷாதி அமந்தா அத்தகைய வெற்றியாளராக ஒரு பெண்ணின் திறமை மற்றும் உறுதிப்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் TikTok போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அனைத்து பெண்களையும் ஊக்குவிக்கும் திறன் கொண்ட அவர், சமூக ஊடகங்களில் உள்ள […]

தெற்கு ஆசியாவின் முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் Mediequipment Limited

நவலோக்க ஹொஸ்பிடல்ஸ் பி.எல்.சி மூலம் தெற்கு ஆசியாவின் முதல் AI தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்பட்ட MRI ஸ்கேனரை அறிமுகப்படுத்தியதன் மூலம், முன்னணி நவீன மருத்துவ உபகரணங்கள் சப்ளையர் நிறுவனமான Mediequipment Limited, இலங்கையின் சுகாதார பாதுகாப்பு தரங்களில் புதிய பரிமாணங்களை உருவாக்குவதில் வெற்றிகரமாக உள்ளது. இந்த தனித்துவமான சாதனை மூலம், நாட்டின் சுகாதார சேவை வழங்குநர்களை நவீன மற்றும் நோயாளி-மையப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் சக்தியளிப்பதன் மூலம் நோய் கண்டறியும் திறன்களை மேம்படுத்துவதற்கான Mediequipment Limited நிறுவனத்தின் அர்ப்பணிப்பு இங்கு […]

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மஹேல ஜயவர்தன உடனான தனது கூட்டாண்மையை புதுப்பிக்கும் Chevron

Chevron லூப்ரிக்கண்ட்ஸ் லங்கா பிஎல்சி (CLLP), இலங்கையில் Caltex வர்த்தகநாமத்தின் அதிஉன்னத லுப்ரிகண்ட்ஸின் முன்னணி வழங்குனாராக திகழ்கிறது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவானும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஆகிய மஹேல ஜயவர்தன உடனான தனது வெற்றிகரமான கூட்டாண்மையை தொடர்ந்து இரண்டாவது ஆண்டிலும், Caltex® Havoline® இற்கான விளம்பர தூதராக நியமிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பிப்பதாக அறிவித்துள்ளது. இந்த மூலோபாய கைகோரப்பின் நீட்டிப்பு, மஹேல ஜெயவர்தன அவர்கள் புகழால் நிறைந்த தன் முழுவதும் பகிர்ந்து கொண்ட முக்கிய மதிப்புகளான […]

நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோர் 150 பேருடன் 2025ஆம் ஆண்டிற்கான கெமி புபுதுவ புத்தாண்டுச் சந்தையை BMICHஇல் நடத்திய HNB

இலங்கையின் கிராமப்புற நுண் நிதித் துறையின் முன்னேற்றத்திற்காக தீவிரமாக பாடுபடும் நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB ஆறாவது தடவையாக நடத்தும் “HNB கெமி புபுதுவ” புத்தாண்டுச் சந்தை 2025, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதுமுள்ள 150 நுண் நிதி தொழில்முனைவோர், தங்கள் உற்பத்திப் பொருட்களை “HNB கெமி புபுதுவ” புத்தாண்டுச் சந்தையில் காட்சிப்படுத்த உள்ளனர். இந்த நிகழ்வு […]

HNB LankaQR க்கான வர்த்தக தள்ளுபடி விகிதம் (MDR) நீக்கப்பட்டு, நாடு முழுவதும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் அணுகல் மேலும் விரிவாக்கப்படுகிறது

நாடு முழுவதும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான மற்றொரு முக்கியமான படியாக, HNB தனது டிஜிட்டல் கொடுப்பனவு தளமான HNB SOLO வழியாக LankaQR பரிவர்த்தனைகளுக்கான வர்த்தக தள்ளுபடி விகிதத்தை (MDR) நீக்கியுள்ளது. நாடு முழுவதும் பரவியுள்ள வணிகங்களுக்கு டிஜிட்டல் கொடுப்பனவுகள் மேலும் அணுகலாகவும் மகிழ்ச்சிகரமான விலையிலும் கிடைப்பதே இதன் நோக்கம். அதிகமான மக்கள் கடைகளுக்குச் செல்லும் மற்றும் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் பரபரப்பான காலமான புத்தாண்டு காலத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் இந்த முயற்சி குறிப்பாக குறிப்பிடத்தக்கது. பணத்துடன் […]