புதிய சுற்றுச்சூழல் நடவடிக்கையை மேற்கொள்வதாக அறிவிக்கும் Samsung Electronics

Samsung Electronics அண்மையில் தனது புதிய சுற்றுச்சூழல் செயற்பாடு குறித்து அறிவித்துள்ளது, இது காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுடன் இணைவதற்கான ஒரு விரிவான முயற்சியாகும். நிறுவன அளவிலான நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றத்தை மேற்கொள்வதற்கான உறுதிப்பாடுகள் மற்றும் அதிக புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள், அத்துடன் ஆற்றல் திறன் கொண்ட தயாரிப்புகளை உருவாக்க புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து ஆராய்ச்சி செய்தல், நீர் மறுபயன்பாடு மற்றும் கார்பன் பிடிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். 2030 […]

Coca-Cola Beverages Sri Lanka மற்றும் Uber Eats Sri Lanka இணைந்து “Ride for Recycling” திட்டத்தை ஆரம்பித்துள்ளன

Coca-Cola Beverages Sri Lanka Limited (CCBSL) மற்றும் Uber Eats ஆகியன பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்புடன் அகற்றுவதற்காக ‘Ride for Recycling’ என்ற தனித்துவமான வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளன. இந்த திட்டத்தின் மூலம் பொதி விநியோகச் சேவை (Courier Partners) பங்காளிகள் கொழும்பில் உள்ள வீடுகள் மற்றும் உணவகங்களில் இருந்து நேரடியாக PET பிளாஸ்டிக்கை சேகரிக்க முடியும். உலக சுற்றுச்சூழல் தினம் 2023 மற்றும் அதன் தொனிப்பொருளான “பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வுகள்” என்ற அடிப்படையில் இந்த […]

RoSPA 2023 விருது விழாவில் இரண்டு தங்க விருதுகளை வென்ற MAS KREEDA

MAS க்கும் நாட்டிற்கும் இது தனித்துவமான மைல்கல் அண்மையில் துபாயில் நடைபெற்ற 2023 RoSPA (Royal Society for the Prevention of Accidents) விருது நிகழ்வில் “சாதனை” பிரிவில் MAS KREEDA இரண்டு தங்க விருதுகளை வென்றது. தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பை குறித்து இச் சாதனைகள் வழங்கப்பட்டது, MAS KREEDA Synergy மற்றும் Shadeline உற்பத்தி நிலையங்கள் ஆகியவை இந்த சாதனையின் பெருமைக்குரிய உரிமையாளர்களாவர். 67 ஆண்டுகளாக […]

பால்நிலை சமத்துவத்தை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் ஆடைத் துறையில் பெண்களின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் GEAR வேலைத்திட்டம்

இலங்கையின் ஆடைத் துறையானது பெண்களை வலுவூட்டுவதில் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்துள்ளதுடன், இத்துறையில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு பாராட்டத்தக்கது. இருப்பினும், பணியாளர்களில் 80% க்கும் அதிகமான பெண்கள் இருந்தாலும், மேற்பார்வை மற்றும் நிர்வாகப் பணிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுக்கு தீர்வுகாணும் வகையில், சர்வதேச நிதி நிறுவனம் (IFC) மற்றும் சர்வதேச தொழிலாளர் தாபனம்; (ILO) ஆகியவை பால்நிலை சமத்துவம் மற்றும் நன்மைகள் (GEAR) திட்டத்தைத் தொடங்குவதற்கு சிறந்த வேலை முயற்சியின் கீழ் […]

புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தை நுரைச்சோலையில் திறக்கும் HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC இன் 58வது தங்கக் கடன் மத்திய நிலையம் கற்பிட்டி நுரைச்சோலையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் உட்பட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். கற்பிட்டி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் தங்கக் கடன் சேவைகளுக்கான தற்போதைய தேவைக்கு ஒரு தீர்வாக, நிறுவனம் இந்த புதிய HNB […]

Coca-Cola அறக்கட்டளையிலிருந்து 7,800 வறிய குடும்பங்களுக்கு உதவி

தற்போதைய சூழ்நிலையில் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத சமூகத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. Coca-Cola அறக்கட்டளை (“TCCF” Coca Cola Company இன் உலகளாவிய நன்கொடையாளர் பிரிவானது) 7800 பின்தங்கிய வறிய மற்றும் அன்றாட உணவுக்காக கஷ்டப்படும் குடும்பங்களின் நலனுக்காக சேவலங்கா அறக்கட்டளை மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அண்மையில் நன்கொடைகளை வழங்கியது. “Say We Care” எனும் இத்திட்டத்தின் மூலம் சேவாலங்கா அறக்கட்டளை மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (SLRCS) […]

Samsung Smart TV மீதான உங்கள் பார்வையினைச் செலுத்த மூன்று காரணங்கள்

இப்போதெல்லாம் எம்மில் பெரும்பாலானோர் எமது Smartphoneகள், Tabletகள்     Laptopகள் போன்றவற்றினைப் பாவித்துத் தான் பொழுதுபோக்குகளைக் கண்டு களிக்கின்றோம் ஆனால் நாம் TV முன் சென்று அமர்வது என்பது வெகுவாக   அரிதாகிவிட்டது. எது எவ்வாறாயினும், Samsung Neo QLED TVகள் தற்போது யாவற்றினையும் மாற்றியமைக்கின்றன. நிஜமாகவே, உங்கள் வரவேற்பறையில் Neo QLED TV இருக்கப் போவதால், நாம் அனைவரும் அந்நாட்களைப் போலவே குடும்பமாக Neo QLED TV யைச் சுற்றி  அமர்ந்திருந்து காட்சிகளைக்   கண்டு  ரசித்து  மகிழ்வதற்கான  நேரம் […]

EU & US க்கான உயர் தொழில்நுட்ப விளையாட்டு கையுறைகளை தயாரிப்பதை லட்சியமாகக் கொண்ட புதிய முயற்சியை அறிமுகப்படுத்தும் Dipped Products

நிலையான ஒருங்கிணைந்த கையுறை உற்பத்தியில் உலகளாவிய முன்னோடிகளான Dipped Products PLC (DPL), Hayleys குழுமத்தின் துணை நிறுவனமானது, பியகமவில் உள்ள அதன் அதிநவீன உற்பத்தி ஆலையில், வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்து, துல்லியமான பொறியியல் விளையாட்டு கையுறைகளில் அதன் லட்சிய பல்வகைப்படுத்தலுக்கு ஏற்ப வணிக நடவடிக்கைகளைத் ஆரம்பித்துள்ளது. 1.3 பில்லியன் ரூபா முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய வசதி கொண்ட ஆலையானது, தொழில்துறை, வீட்டு மற்றும் மருத்துவப் பயன்பாடுகளுக்கான கையுறைகளை உற்பத்தி செய்வதில் DPL இன் விதிவிலக்கான […]

2022 இல் ஆசியா பசுபிக் மற்றும் ஜப்பான் (APJ) முழுவதும் Ransomware தாக்குதல்களின் விகிதத்தில் சற்று வீழ்ச்சி: Sophos

இணையத்தள பாதுகாப்பை ஒரு சேவையாக புதுமைப்படுத்தி வழங்குவதில் உலகளாவிய முன்னணியில் உள்ள Sophos, அண்மையில் தனது “State of Ransomware 2023” ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. 2022 இல் ஆசிய பசுபிக் மற்றும் ஜப்பானில் (APJ) ransomware தாக்குதல்களின் விகிதத்தில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டில் பதிவான 72% உடன் ஒப்பிடும் போது ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் 68% ransomware தாக்குதலுக்கு ஆளானதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிறுவனங்களில், ransomware தாக்குதல்களில் 71% வெற்றிகரமாக […]

Coca-Cola Foundation, Eco-Spindles மற்றும் Janathakshan ஆகியன பிளாஸ்டிக் மாசுபாட்டை கட்டுப்படுத்த ‘Eko Wave’ வசதியை அறிமுகப்படுத்துகிறது

2023 ஆம் ஆண்டின், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, Coca-Cola அறக்கட்டளை, Eco-Spindles மற்றும் Janathakshan (GTE) ஆகியன இணைந்து, கொழும்பில் மேம்பட்ட கழிவுகளை முன் பதப்படுத்தும் மையங்களை (MRF) ‘Eko Wave’ திறந்து வைத்தது. இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் பத்திரகே கலந்துகொண்டார். ‘பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வுகள்’ (Solutions to Plastic Pollution) என்ற உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான ஐக்கிய நாடுகளின் தொனிப்பொருளுக்கு ஏற்ப தீர்க்கமான நடவடிக்கையை எடுத்து, கொழும்பில் உள்ள […]