விவசாயத்தை மையமாகக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான CIC Holdings PLC நிறுவனம், மிதமான நிலையான Macro பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில் உயர் மட்ட வருவாய் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது,
பயிர்த் தீர்வுகள் (Crop Solutions), விவசாய உற்பத்தி, சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புத் துறைகள் ஆகியன 2024 நிதியாண்டில் CIC நிறுவனத்தின் வளர்ச்சியில் பிரதான பங்காற்றின. அத்துடன், கடந்த ஆண்டுக்கான மொத்த குழு வருவாயில் பயிர் தீர்வுகள் வணிகம் முக்கிய பங்காளராக இருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதன்படி, CIC குழுமம் கடந்த ஆண்டில் ரூ.76.4 பில்லியனை ஒருங்கிணைந்த குழுவின் வருவாயாக பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 11.9%அதிகமாகும். மீளாய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் CIC குழுவானது வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ.11 பில்லியனைப் பதிவுசெய்துள்ளது, இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.6% வளர்ச்சியை எட்டியுள்ளது. இதனிடையே, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மொத்த இலாபம் 15.4% ஆக குறைந்துள்ளதுடன், 3.7 பில்லியன் ரூபாவால் குறைந்துள்ளது. அத்துடன், மொத்த இலாப வரம்பு 27% ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில், 880 அடிப்படைப் புள்ளிகள் குறைந்துள்ளது. இதற்கு போட்டித் தன்மை மற்றும் அதிக உள்ளீட்டுச் செலவுகள் ஆகியவற்றால் ஏற்பட்ட அழுத்தம் தான் முக்கிய காரணமாகும்.
2024 நிதியாண்டின் நான்காவது காலாண்டில், CIC குழுமத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 3.745% அதிகரித்து ரூ. 16.2 பில்லியனாகவும், வரி செலுத்துவதற்கு முந்தைய இலாபம் (PBT) 7.47% அதிகரித்து ரூ. 1.3 பில்லியனாகவும் உயர்ந்துள்ளது. கூடுதலாக, 2023 நிதியாண்டின் அதே காலகட்டத்தில் ரூ. 790 மில்லியனாக இருந்த குழுமத்தின் நிதிச் செலவுகள் நான்காவது காலாண்டில் ரூ. 630 மில்லியனாக குறைந்துள்ளது. இதற்கு நடப்பு அரசாங்கத்தின் நிதி சீர்திருத்தங்கள் (ongoing Government’s fiscal reforms) மற்றும் நாட்டின் macro stability (மேக்ரோ ஸ்திரத்தன்மை) அதிகரித்தமையும் காரணமாகும்.
CIC குழுமத்தின் பயிர் தீர்வுகள் (Crop Solutions) வணிகமானது அந்த நிறுவனத்தின் வருமானத்தில் மிகப்பெரிய பங்களாராக மாறியுள்ளது. இது மொத்த வருமானத்தில் 40.8% ஆகும். குழுமத்தின் மொத்த வருமானத்தில் கால்நடைகளை பராமரிப்பது (Livestock Solutions), சுகாதார மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு, தொழிற்துறை தீர்வுகள், மற்றும் விவசாய உற்பத்தி துறைகள் முறையே 21.1%, 21.2மூ, 9.9% மற்றும் 7.1% பங்களிப்பினை வழங்கியுள்ளன. மேலும், குழுமத்தின் செயல்பாட்டு இலாபம் (EBIT) ரூ. 10.7 பில்லியன் ஆக முடிந்தது, இது ஆண்டிற்கு 36.6% குறைவாகும். மேலும், மதிப்பாய்வு காலக்கட்டத்தில் குழுமத்தின் நிதிச் செலவு கடந்த ஆண்டு ரூ. 4.8 பில்லியனில் இருந்து ரூ. 3.3 பில்லியனாகக் குறைந்தது.
இதனிடையே, மதிப்பாய்வுக் காலத்தில், பயிர்த் தீர்வுகள், விவசாய உற்பத்தி, கால்நடைத் தீர்வுகள், தொழில்துறை தீர்வுகள் மற்றும் உடல்நலம்ஃதனிப்பட்ட பராமரிப்பு ஆகிய ஐந்து தொழில் துறைகளின் கீழ் உள்ள முக்கிய குழு வணிகங்கள் நெகிழ்ச்சியுடன் செயல்பட்டன.
பயிர் தீர்வுகள் வருமானம் ரூ. 23.3 பில்லியன் இருந்து ரூ. 31.2 பில்லியன் வரை உயர்ந்தது, விவசாய தீர்வுகள் வருமானம் ரூ. 4.3 பில்லியன் இருந்து ரூ. 5.4 பில்லியன் வரை உயர்ந்தது, மற்றும் சுகாதார மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு வருமானம் ரூ. 13.2 பில்லியன் இருந்து ரூ. 16.2 பில்லியன் வரை உயர்ந்தது. இந்த நிலையில், கால்நடை பராமரிப்பு வருமானம் ரூ. 18.7 பில்லியன் இருந்து ரூ. 16.1 பில்லியன் வரை குறைந்தது, மற்றும் தொழிற்துறை தீர்வுகள் வருமானம் ரூ. 8.7 பில்லியன் இருந்து ரூ. 7.6 பில்லியன் வரை குறைந்தது.
இதேவேளை, CIC ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முன்னேற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த CIC ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அரோஷன் சேரசிங்க, கடந்த நிதியாண்டின் ஆரம்பத்தில் பல்வேறு சவால்கள் மற்றும் பாதகமான சந்தை நிலைமைகளுக்கு முகங்கொடுத்து எம்மால் வெற்றிகொள்ள முடிந்தது.
அந்தச் சவாலானது எங்கள் குழுவின் செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தியது, மேலும் எங்களது வலுவான செலவு முகாமைத்துவத் திட்டங்கள், சிறந்த செயல்பாட்டு மூலதன முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அதை நிர்வகிக்க முடிந்தது. அதனால்தான் 2023 நிதியாண்டில் வலுவான செயல்திறனை எம்மால் பதிவுசெய்ய முடிந்தது. சிரமங்கள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும் வெற்றிக்காக உழைக்கும் திறனையும் அர்ப்பணிப்பையும் எங்களால் வெளிப்படுத்த முடிந்தது என்பதை நினைவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.