City of Dreams Sri Lanka இன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்

Share

Share

Share

Share

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் “City of Dreams Sri Lanka”வின் ஆரம்ப விழாவுக்கு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த மிகச் சிறப்புமிக்க நிகழ்விற்கு, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திரா, Melco Resorts & Entertainment நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி லோரன்ஸ் ஹோ, ஆகியோர் உள்ளிட்ட இரு தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள், தற்போதைய மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கௌரவ விருந்தினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

அதே நேரத்தில், ஆகஸ்ட் 02 ஆம் திகதி இரவு, இலங்கையின் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத சர்வதேச பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரிதிக் ரோஷன் அவர்களின் வர்ணமயமான நடன மற்றும் நிகழ்ச்சியுடன் சிறப்பாக முடிவடைந்தது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாக திகழும் இந்தத் திட்டத்தின் பெறுமதி 1.2 பில்லியன் அமெரிக்க டொலராகும். தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த சுற்றுலா ஹோட்டல் வளாகம் என்பதுடன் தனியார் துறையின் மிகப்பெரிய முதலீட்டு திட்டம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதாரத்தின் இதயம் போன்ற கொழும்பு நகர மையத்தில் அமைந்துள்ள “City of Dreams Sri Lanka”, இலங்கையை உலக சுற்றுலா வரைபடத்தில் ஒரு மையப் புள்ளியாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

City of Dreams Sri Lanka, Cinnamon Life வளாகத்தில் 687 அறைகள் மற்றும் Nüwa என்ற வர்த்தக நாமத்தின் கீழ் 113 அதிசொகுசு அறைகள் உள்ளிட்ட மொத்தம் 800 சொகுசு அறைகளைக் கொண்டது. மேலும், இங்கு “Shoppes” என்ற நாமத்தின் கீழ் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உயர் தரத்திலான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குகிறது. இந்த வணிக வளாகம் இலங்கையின் உயர் தர வாடிக்கையாளர் வர்த்தக நாமங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பைக் கொண்டுள்ளது.

மேலும், “City of Dreams Sri Lanka” உலகத் தரத்திற்கு ஈடான Melco நிறுவனத்தின் நிர்வகிப்பு முறைகளுக்கு ஏற்ப உயர்தர கெசினோ வசதிகள் சிறந்த பொழுதுபோக்கு வலயம் ஆகியவற்றுடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கு வியக்கத்தக்க சேவைகளை வழங்குகிறது. மேலும், MICE (Meetings, Incentives, Conferences, Exhibitions) வசதிகள், சிறப்பு நிகழ்வுகள், கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள் ஆகியவற்றை நடத்துவதற்கான உயர்தர உபகரணங்கள் மற்றும் வசதிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

City of Dreams Sri Lanka, உலகம் முழுவதும் பிரபலமான சுவையுணர்வு நிபுணர்களால் தயாரிக்கப்படும் தனித்துவமான மற்றும் உயர்தரமான உணவு மற்றும் பான வகைகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச விருந்தினர்களுக்கு வழங்குகிறது. மேலும், இந்த வளாகத்தில் இசை நிகழ்ச்சிகள், கலாச்சார விழாக்கள், சிறப்பு காட்சிகள், நடத்துவதற்கான அரங்குகள் மற்றும் சிறப்பு வலயங்கள் காணப்படுகின்றன. City of Dreams Sri Lanka-ன் ஒவ்வொரு அம்சமும் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறப்பான முக்கியத்துவம் அளிக்கிறது. பசுமை தொழில்நுட்பங்களின் பயன்பாடு, உயர்தர சுற்றுச்சூழல் நட்பு வடிவமைப்புகள், இலங்கைக்கு நீண்டகால நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கம் ஆகியவை உள்ளடங்கும்.

Softlogic Life Grows 29% with...
TikTok Launches Time and Well-being...
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஒருங்கிணைந்த நியமன இயக்கத்துடன்...
Sri Lanka Targets Inclusive Economic...
2025 SLIM ජාතික විකුණුම් සම්මාන...
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில்...
ශ්‍රී ලංකාවේ ක්ෂුද්‍ර, සුළු හා...
සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில்...
ශ්‍රී ලංකාවේ ක්ෂුද්‍ර, සුළු හා...
සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
Global Talent Competes to Solve...