City of Dreams Sri Lanka-வின்”Signature Glam”நிகழ்ச்சியில் பங்கேற்க பொலிவுட் நட்சத்திரம் அர்ஜுன் ராம்பால் இலங்கை வருகை

Share

Share

Share

Share

சர்வதேச தரத்திலான ஆடம்பர ஹோட்டல் அனுபவத்தை வழங்குவதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக City of Dreams Sri Lanka, பொலிவுட்டின் திரை உலகின் புகழ்பெற்ற நடிகரான அர்ஜுன் ராம்பாலை”Signature Glam” நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி அர்ஜுன் ராம்பாலை வரவேற்க City of Dreams Sri Lanka அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. ராக் ஆன், டொன், ஓம் சாந்தி ஓம் மற்றும் ராஜ்நீதி போன்ற மிகவும் பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ள ராம்பால், தனது சிறப்பான நடிப்புத் திறன்களால் இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கை ரசிகர்களிடையேயும் மிகவும் விரும்பக்கூடிய நடிகராக வலம் வருகின்றார். அவரது இலங்கை பயணத்தின் போது, City of Dreams Sri Lanka வினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Signature Glam நிகழ்ச்சியில் அவருக்காக சிறப்பு வரவேற்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து City of Dreams Sri Lanka-வின் தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் கட்டிடக்கலை சிறப்புகளைப் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தெற்காசிய திரைப்படங்கள், ஆடை நாகரீகம் மற்றும் கலாச்சாரத்திற்காக வழங்கிய அவரது நீண்டகால பங்களிப்பும் இதன்போது கௌரவிக்கடவுள்ளது.

இந்த நிலையில், செப்டம்பர் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் 2023 மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்வேதா ஷர்தா கலந்துகொள்கிறார்.அவருக்காக City of Dreams Sri Lanka இல் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொழும்பின் சொகுசு இடத்தின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் அவருடன் புகைப்படங்கள் எடுக்கும் வாய்ப்பும் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் முன்னணி ஆடம்பர சுற்றுலா தலமாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள City of Dreams Sri Lanka, கொழும்பு மேம்பாட்டு சுற்றுலா உத்தியின் மையமாக விளங்குகிறது. குறிப்பாக, உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பிரபலமான நபர்கள், பிராந்திய செல்வாககு மிக்க நபர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலருக்கும் சொகுசு சேவைகளை வழங்க அர்ப்பணிப்புடன் உள்ள City of Dreams Sri Lanka, இந்திய சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையையும் கவர்ச்சியையும் வென்றுள்ளது. அதனால்தான், ஏராளமான இந்திய சுற்றுலாப் பயணிகள் City of Dreams Sri Lanka-வின் சொகுசு விருந்தோம்பல் அனுபவங்களைப் பெறவும், அதன் கலாச்சார மற்றும் படைப்பாற்றல் சிறப்பைக் காணவும் ஆர்வமாக உள்ளனர். எனவே, அனைத்து இந்திய சுற்றுலாப் பயணிகளையும் City of Dreams Sri Lanka அழைக்கிறது.

City of Dreams Sri Lanka, இப்பிராந்தியத்தில் உயர்தர பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பலுக்கான தரத்தை நிர்ணயிக்கிறது. Signature Glam மூலம், கொழும்பின் மையத்தில் உயர் நாகரிக ஆடை அலங்காரம், பிரபலங்களுடனான சந்திப்பு மற்றும் மறக்க முடியாத அனுபவங்களுக்கான சிறந்த இடமாக தனது பெயரை மேலும் உறுதிப்படுத்துகிறது.

Huawei Commercially Verifies the World’s...
MAS Holdings, වේගවත් තිරසාර ඇඟලුම්...
Colombo Comedy Show 2025 to...
MAS ஹோல்டிங்ஸினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Plan for...
JAAFஇன் ஆடை ஏற்றுமதி செயல்பாடு குறித்த...
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
Social Media’s Role in STEM...