CMA Awards 2023 நிகழ்வில் சிறந்த வருடாந்த அறிக்கைக்காக முன்னணி நிறுவனங்களுடன் சேர்ந்துகொண்ட Softlogic Life

Share

Share

Share

Share

அறிக்கையிடல் மற்றும் பொறுப்புக்கூறலில் சிறந்த நடைமுறைகளுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் நிரூபித்து, இலங்கையின் 2வது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, CMA Excellence in Integrated Reporting Awards 2023 நிகழ்வில் சிறந்து விளங்கியது, அதன் 2022 ஆண்டு அறிக்கையின் தொனிப்பொருளான ‘Reimagining’ ஐந்து மதிப்புமிக்க விருதுகளை வென்றது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் Softlogic Life இன் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒருங்கிணைந்த அறிக்கையிடல் சிறப்பிற்கான விரும்பத்தக்க ஒட்டுமொத்த தங்கம் உட்பட ஐந்து விருதுகள் இதில் அடங்கும்.

Softlogic Life இப்போது கூட்டுத்தாபன இலங்கையின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒருங்கிணைந்த அறிக்கையிடல் சிறப்புக்கான ஒட்டுமொத்த தங்க விருதை வென்றது, இந்த அங்கீகாரத்தை வென்ற இலங்கையின் தலைசிறந்த நிறுவனமாக மாறியுள்ளது. மேலும், இந்தச் சாதனையானது, CMA விருது வழங்கும் நிகழ்வு வரலாற்றில் இந்த விருதின் மூலம் கௌரவிக்கப்படும் ஒரே இலங்கைக் காப்புறுதி நிறுவனமாக Softlogic Life இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், Softlogic Life இன்னும் நான்கு விருதுகளை வென்றது அவையாவன: காப்புறுதி துறைக்கான சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கை, பொருள்தன்மை குறித்த சிறந்த வெளிப்பாடுக்கான விருது, இலங்கையில் சிறந்த பத்து ஒருங்கிணைந்த அறிக்கைகளுக்கான விருது மற்றும் இலங்கையில் சிறந்த நிதி இயக்குநருக்கான விருதினை நிறுவனத்தின் நிதி இயக்குநர் Nuwan Withanageக்கு வழங்கப்பட்டது.

Softlogic Life நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருடாந்த அறிக்கை, தொழில்நுட்பம் மற்றும் நவீனத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டை பிரதிபலிக்கிறது, இது நிதி அறிக்கையிடலுக்கும் உதவியாக உள்ளது. 2013 இல் ஆரம்பித்த ஒருங்கிணைந்த அறிக்கையிடல் பயணத்தில், Softlogic Life நிறுவனம் தனது ஒருங்கிணைந்த வருடாந்த அறிக்கையை 10வது தடவையாக தொடர்ச்சியான ஆண்டாக தயார் செய்துள்ளது. ஒருங்கிணைந்த வருடாந்த அறிக்கை Softlogic Life நிறுவனம் தனது பங்குதாரர்களுக்காக எவ்வாறு மதிப்பை உருவாக்கியது என்பதற்கான விரிவான கணக்கை வழங்குகிறது. இது நிறுவனம், அதன் வெளிப்புற சூழல், செயற்பாடு, வள ஒதுக்கீடு, வணிக மாதிரி, செயல்திறன், கார்ப்பரேட் நிர்வாகம் மற்றும் பிற மதிப்புமிக்க எதிர்கால வாய்ப்புகள் பற்றிய சமநிலையான மற்றும் சுருக்கமான பகுப்பாய்வையும் வழங்குகிறது.

தொழில்நுட்பம் மற்றும் நவீனத்துவத்தை ஏற்றுக்கொள்வதில் இயல்பாக இருப்பதால் Softlogic Life தொடர்ந்து புத்தாக்கமான டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்தி வருகிறது, இது நிதி அறிக்கையிடலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் நிறுவனம் தொடர்ந்து மாறிவரும் டிஜிட்டல் உலகிற்கு டிஜிட்டல் முறையில் இயக்கப்பட்ட அறிக்கையை உறுதியாக நம்புகிறது. இலங்கையின் முதல் ‘உங்கள் சொந்த அறிக்கையை உருவாக்குங்கள்’ போன்ற ஒரு முயற்சியாகும், இதில் பயனர்கள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையின் தனிப்பயனாக்கப்பட்ட துணை அறிக்கைகளை உருவாக்க முடியும்.

Softlogic Life நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த அறிக்கையிடலுக்கு வெளிப்புற உறுதிப்படுத்தலைப் பெற்ற ஆசியாவிலும் இலங்கையிலும் முதல் நிறுவனமாகும், மேலும் இது 2022 ஆம் ஆண்டில் மூன்றாவது தொடர்ச்சியான ஆண்டாக ஒருங்கிணைந்த அறிக்கையிடலுக்கு வெளிப்புற உறுதிப்படுத்தலைப் பெற்று வருகிறது. இந்த வருடாந்த அறிக்கை ‘குளோபல் ரிப்போர்ட்டிங் இனிஷியேட்டிவ் (Global Reporting Initiative – GRI)’ வழிகாட்டுதல்களுக்கு இணங்க நிலைத்தன்மை குறிகாட்டிகளுக்கும் வெளிப்புற உறுதிப்படுத்தலைப் பெற்றுள்ளது.

மேலும், இந்த வருடாந்த அறிக்கை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளரின் மதிப்பாய்வுகள், முதன்மை நிதி அறிக்கைகள் ஆகியவற்றை வழங்குகிறது, இது Softlogic Life நிறுவனத்தின் சேர்க்கைக்கான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. நிறுவனம் SASB (Sustainability Accounting Standard Board) இன் காப்புறுதி நிலைத்தன்மை கணக்கியல் தரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது மற்றும் இயற்கை மூலதனத்திற்கான தனது பொறுப்பைக் காட்டும் வகையில் Carbon Conscious சான்றிதழைப் பெற்றுள்ளது.

இத்தகைய சூழலில், CMA விருது வழங்கும் நிகழ்வில் கிடைத்த சமீபத்திய அங்கீகாரம், Softlogic Life நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் உயர் தர அறிக்கையிடலுக்கான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது, இது முதலீட்டாளர்கள் உட்பட பங்குதாரர்களுக்கு, நிறுவனம் பொருளாதார கலக்கத்தை நேர்மையுடன் எதிர்கொள்கின்றமையை உறுதியளிக்கிறது. மேலும், விருது பெற்ற வருடாந்த அறிக்கை, நிறுவனத்தின் நிலைத்தன்மை மற்றும் சவாலான காலங்களில் செல்லும் திறனை முதலீட்டாளர்களுக்கும் பிற பங்குதாரர்களுக்கும் உறுதியளிக்கிறது.

Softlogic Life நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க சாதனை குறித்து கருத்து தெரிவித்த முகாமைத்துவப் பணிப்பாளர் இஃப்திகார் அஹமட், “எங்கள் வருடாந்த அறிக்கைக்கு இந்த பாரம்பரியமிக்க விருதை கொண்டாடுவது இதைவிட முக்கியமான நேரத்தில் வந்திருக்க முடியாது. பொருளாதார மற்றும் அரசியல் குழப்பங்களின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இருந்தது, மேலும் இந்த சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருப்பது எங்கள் நிறுவனத்தின் பலத்திற்கு ஒரு பெரிய சான்றாகும்.

Softlogic Life இன் குறிப்பிடத்தக்க சாதனை குறித்து கருத்து தெரிவித்த முகாமைத்துவப் பணிப்பாளர் இஃப்திகார் அஹமட், “எங்கள் ஆண்டு அறிக்கைக்காக இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்றமை மிகவும் முக்கியமானதும் மகிழ்ச்சியானதுமான தருணமாக நான் நினைக்கிறேன். 2022 ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான சவால்கள் நிறைந்த முன்னோடியில்லாதது சூழ்நிலையிலும் எங்கள் நிறுவனத்தின் வலிமைக்கு மிகப்பெரிய சான்றாகும். ஆண்டு அறிக்கை ஒரு நல்ல ஆவணம் மட்டுமல்ல; இது வெளிப்படைத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் மிக உயர்ந்த அறிக்கை தரநிலைகள் ஆகியவற்றில் எங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும். பொருளாதார நிலப்பரப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், எங்கள் பங்குதாரர்களின் நம்பிக்கையும் எங்களின் மிகவும் மதிப்புமிக்க பண்பு. ஒரு விரிவான வருடாந்திர அறிக்கை இந்த அசாதாரண காலங்களில் ஸ்திரத்தன்மை மற்றும் உறுதிப்பாட்டின் கலங்கரை விளக்கமாக மாறுகிறது. இது சிறந்து விளங்குவதற்கான நமது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதுடன் இதன் மூலம் வழிநடத்தும் திறனை வலுப்படுத்துகிறது. Softlogic Life மற்றும் எங்கள் பங்குதாரர்கள் அனைவருக்கும் வலிமை மற்றும் நம்பிக்கையின் பாதையை உருவாக்கி, நாங்கள் முன்னேறும்போது இந்த உயர் தரங்களை நாங்கள் தொடர்ந்து நிலைநிறுத்துவோம்.” என தெரிவித்தார்.

Softlogic Life நிறுவனத்தின் நிதி அதிகாரி Nuwan Withanage கூறுகையில், “ஒருங்கிணைந்த வருடாந்த அறிக்கை 2022 இன் ஒருங்கிணைந்த அறிக்கையிடலுக்கான ஒட்டுமொத்த சிறப்புக்கான தங்க விருதை வென்றதில் நாங்கள் மகிழ்ச்சியும் கௌரவமும் அடைகிறோம். இது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மைக்கு எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. 2022 ஆம் ஆண்டில், நிதி அறிக்கையிடலில் எங்கள் வெளிப்படைத்தன்மையை மேலும் மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டோம், உதாரணமாக, ஒருங்கிணைந்த அறிக்கையிடல், GRI மற்றும் SASB போன்ற உலகளாவிய தரங்களுடன் வெளிப்புற உறுதிப்படுத்தல் மற்றும் இணக்கத்தை தொடர்ந்து பெறுவதோடு, முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் தகவல் வெளியீடு போன்றவை. இந்த நடவடிக்கைகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் சமூகத்திற்கும் நீண்ட கால மதிப்பை வழங்க நாங்கள் அர்ப்பணித்துள்ளோம் என்பதை நிரூபிக்கிறது. CMA விருதுகளில் சிறந்த நிதி அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்னுடைய தொழில் வாழ்க்கையில் ஒரு மைல்கல் சாதனை மற்றும் அந்தப் பயணத்தில் நிறுவனத்தின் ஆதரவை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.” என தெரிவித்தார்.

 

 

 

நாட்டின் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...
சீனாவில் BYD உள்ளிட்ட உலகளாவிய...
ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා...
JAAF supports ‘Clean Sri Lanka’...
இலங்கையில் நிலவும் தற்போதைய தேங்காய் நெருக்கடியை...
සුවහසක් සතුන්ගේ ජීවිත බේරා ගනිමින්...
Inovartic Leads UAE-Sri Lanka Breakthrough...
IFS Foundation takes on the...
සුවහසක් සතුන්ගේ ජීවිත බේරා ගනිමින්...
Inovartic Leads UAE-Sri Lanka Breakthrough...
IFS Foundation takes on the...
Sunshine Foundation for Goodஇன் 20வது...