Coca-Cola அறக்கட்டளையிலிருந்து 7,800 வறிய குடும்பங்களுக்கு உதவி

Share

Share

Share

Share

தற்போதைய சூழ்நிலையில் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத சமூகத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. Coca-Cola அறக்கட்டளை (“TCCF” Coca Cola Company இன் உலகளாவிய நன்கொடையாளர் பிரிவானது) 7800 பின்தங்கிய வறிய மற்றும் அன்றாட உணவுக்காக கஷ்டப்படும் குடும்பங்களின் நலனுக்காக சேவலங்கா அறக்கட்டளை மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அண்மையில் நன்கொடைகளை வழங்கியது. “Say We Care” எனும் இத்திட்டத்தின் மூலம் சேவாலங்கா அறக்கட்டளை மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (SLRCS) இணைந்து உதவி தேவைப்படும் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து இந்த உதவிகளை வழங்கின.

விலைவாசி உயர்வு, விவசாய உற்பத்தி கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை நிலை 25% அதிகரிக்கும் என உலக வங்கி முன்கூட்டியே மதிப்பிட்டிருந்த நிலையில், இதன் விளைவாக, நாட்டில் பல குடும்பங்கள் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைக்க வேண்டியிருந்தது. விலை அதிகரிப்பு காரணமாக உணவின் ஊட்டச்சத்து தரத்தையும் குறைந்திருந்ததுடன், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களை மேலும் அசௌகரியப்படுத்தியுள்ளது.

சமூக சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள தன்னார்வ சமூக சேவை அமைப்பான சேவாலங்கா அறக்கட்டளை, TCCF இன் அனுசரணையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 மாவட்டங்களை உள்ளடக்கிய 6,000 நிவாரணப் பொதிகளை விநியோகித்தது மற்றும் பிராந்திய செயலகங்கள் மற்றும் கிராம சேவகர்கள் ஊடாக உதவி தேவைப்படும் குடும்பங்களை அடையாளம் கண்டு இந்த உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கழிவு சேகரிப்பு முக்கிய வருமான ஆதாரமாக கொண்டு வாழும் மக்கள் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாவட்டங்களில் 1,800 குடும்பங்களுக்கு SLRCS உணவுப் பொதிகளை வழங்கியது.

Say We Care முன்முயற்சி குறித்து கருத்து தெரிவித்த Coca-Cola அறக்கட்டளையின் தலைவர் Saadia Madsbjerg, “எங்களது ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்ததில் பெருமையடைகிறோம். இதில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த பங்காளிகள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் எங்கள் குழுவிலுள்ள அனைவருக்கும் நாங்கள் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்த திட்டத்தின் வெற்றியின் ரகசியம் என்றே கூறவேண்டும்.” என தெரிவித்தார்.

அரிசி, பருப்பு, கோதுமை மா, நெத்தலி கருவாடு, டின் மீன், கடலைப்பருப்பு, சவர்க்காரம், கிருமி நீக்கும் திரவம், பற்பசை போன்ற பொருட்கள் அடங்கிய 30 முதல் 45 கிலோ எடையுள்ள உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்த பொருட்கள் 4 முதல் 5 பேர் கொண்ட குடும்பத்தின் தேவைகளை சுமார் 2 மாதங்களுக்குப் பூர்த்தி செய்யவதற்கு போதுமானது.

பெண்கள்/ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் (தினசரி ஊதியம் பெறுவோர்), 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் அல்லது கர்ப்பிணி அல்லது பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, Say We Care திட்டத்தின் மூலம் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Sri Lanka Unlocks New Market...
Sampath Bank Launches Priority Reserve...
2025 වසරේ මැයි මස අපනයන...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
ශ්‍රී ලංකාව තුළ සිය ප්‍රවේශය...