Dipped Products நிறுவனம் மின்சார வாகனத் துறைக்காக உலகின் முதல் EVPRO கையுறையை அறிமுகப்படுத்தியது

Share

Share

Share

Share

ஹேலிஸ் குழுமத்தின் உறுப்பினரும், நிலையான தரமான, உயர் மதிப்பு கொண்ட கையுறை உற்பத்தியில் உலகளாவிய முன்னோடியுமான Dipped Products PLC (DPL), மின்சார வாகன (EV) தொழில் நிபுணர்களின் தனித்துவமான கை பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குறிப்பாக வடிவமைக்கப்பட்ட முதல் தயாரிப்பான EVPRO கையுறையை அறிமுகப்படுத்தியது.

மின்சார பொறியியலாளர்களுக்கு இணையற்ற பாதுகாப்பையும், இயக்க சுதந்திரத்தையும் வழங்கும் வகையில், மின்சார வாகனங்களை கையாளுதல் மற்றும் பராமரிப்பு செய்யும் போது மின்சார அதிர்ச்சியிலிருந்து முக்கியமான பாதுகாப்பை வழங்கும் வகையில் EVPRO கையுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

“ஹேலிஸ் குழுமத்தின் சமூக நோக்கத்துடன் இணைந்து, உலகம் மற்றும் செழிப்பான பூமியை ஊக்குவிப்பதோடு, நிலையான தனித்துவமான கண்டுபிடிப்புகளுக்கான எங்கள் உள் திறன்களை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பசுமை புரட்சியை விரைவுபடுத்துவதற்காக முக்கியமான சுற்றுச்சூழல் நட்பு தொழில்களுடன் இணைவதற்கும் நாங்கள் முயற்சித்துள்ளோம். மின்சார வாகன சந்தை என்பது அத்தகைய முன்னுரிமை வாய்ந்த தொழில் துறையாகும், 2023 ஆம் ஆண்டில் உலகளவில் மின்சார வாகன விற்பனை 31% உயர்ந்து 13 மில்லியன் அலகுகளாக உள்ளது.

“வேகமாக வளர்ந்து வரும் இந்த துறையின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப சிறப்பு பாதுகாப்பு கருவிகள் தேவை என்பதை உணர்ந்து, உலகின் முதல் EV கையுறையை உருவாக்க கண்டுபிடிப்பு பயணத்தை நாங்கள் மேற்கொண்டோம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வாடிக்கையாளர்களிடையே ஏற்கனவே ஆர்வம் காட்டப்பட்டுள்ளதால், EVPRO, உலகளவில் விநியோக சேனல்களுக்கு செல்லும் போது, DPL இன் வளர்ச்சி திறன் மற்றும் உலகளாவிய போட்டித்திறனை மேம்படுத்த தயாராக உள்ளது” என்று DPLஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் புஷ்பிக ஜனதீர தெரிவித்தார்.

மின்சார பாதுகாப்பு கருவி துறையில் DPL நிறுவனத்தின் பயணம் 2006 ஆம் ஆண்டில், உலகமெங்கிலும் உள்ள மின்சார வழித்தட தொழிலாளர்கள் பயன்படுத்தும் உயர் மின் அழுத்த பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட மின்சார காப்பு கையுறைகளின் வரிசையான LINEPRO கையுறைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் தொடங்கியது. மேலும், மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததால், இந்த துறையின் மாறிவரும் சவால்களை சமாளிக்க தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான புதிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குழுவினர் பதிலளித்தனர்.

LINEPRO கையுறைகளின் அத்தியாவசிய மின்சார காப்பு பண்புகளை பராமரிக்கும் அதே நேரத்தில், EVPRO கையுறை பல தனித்துவமான அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. ஈரமான மற்றும் எண்ணெய் பசை நிலைகளில் மேம்படுத்தப்பட்ட பிடியைக் கொடுக்கும் தனித்துவமான கடினமான அமைப்பு மேற்பரப்பு, பல்வேறு பணிச் சூழல்களில் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்கிறது. மேலும், இது தரமான மின்சார தொழிலாளியின் கையுறைகளை விட 25% மெல்லியதாக இருப்பதால், மேம்படுத்தப்பட்ட வளைவுத் திறனை வழங்குகிறது, மேலும் இணையற்ற வசதி மற்றும் துல்லியத்திற்காக சிறந்த கை பொருத்தத்தை வழங்குகிறது.

EVPRO கையுறையானது, எப்போதும் உருவாகி வரும் EV துறையில் தொழில் நிபுணர்களை மேம்படுத்துவதற்கும் புத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் DPL இன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. EV தொழில் நிபுணர்களுக்கு அதிநவீன பாதுகாப்பு தீர்வுகளை வழங்குவதன் மூலம், DPL ஆனது தொழில்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

1976 இல் நிறுவப்பட்டது, Dipped Products PLC ஆனது உலகின் முன்னணி மருத்துவம் அல்லாத ரப்பர் கையுறை உற்பத்தியாளர்களில் ஒன்றாகும், இது 5% உலகளாவிய சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. புத்தாக்கமான மற்றும் நிலையான கை பாதுகாப்பு தீர்வுகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட DPL, தொழில்துறை, வீட்டு, விளையாட்டு மற்றும் மருத்துவ கையுறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளமை குறிப்பபிடத்தக்கது.

 

South Africa Builds New National...
දකුණු ආසියාවේ ප්‍රථම රෙගේ සංගීත...
தெற்காசியாவின் முதல் ரெகே இசை நிகழ்ச்சியான...
Sunshine Holdings marks World Diabetes...
‘Unmask Diabetes 2025’ மூலம் உலக...
அன்பும், அர்த்தமும் நிறைந்த பண்டிகைக் கால...
Sophos மற்றும் Sinetcom இடையேயான கூட்டாண்மையுடன்...
සැම්සුන් ශ්‍රී ලංකා සමාගම, දිට්වා...
அன்பும், அர்த்தமும் நிறைந்த பண்டிகைக் கால...
Sophos மற்றும் Sinetcom இடையேயான கூட்டாண்மையுடன்...
සැම්සුන් ශ්‍රී ලංකා සමාගම, දිට්වා...
සැබෑ නිර්මාණයක් හා AI නිර්මාණයක්...