Galaxy F06 மற்றும் F16 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளுக்கு கவர்ச்சிகரமான மாதாந்த தவணை சலுகைகளை வழங்கும் Samsung Sri Lanka

Share

Share

Share

Share

Samsung Sri Lanka தனது Galaxy F06 மற்றும் F16 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளுக்கு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கவர்ச்சிகரமான மாதாந்த தவணை முறை சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய நிதி வசதிகள், பண்டிகைக் காலத்தில் அதிநவீன ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்தை அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடனட்டை இல்லாமலேயே எளிமையான மற்றும் வசதியான மாதாந்த கட்டணங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் உயர் அம்சங்கள் நிறைந்த Samsung ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை வாங்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

உயர் செயல்திறன் மற்றும் எதிர்கால தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியைத் தேடுபவர்களுக்கு, Galaxy F16 5G ஆனது 6GB RAM மற்றும் 128GB Storage கொள்ளளவுடன் முன்னிலை வகிக்கிறது.

வேகத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த மாதிரி, 5G இணைப்பை ஆதரிக்கிறது. இது மிக வேகமான தரவிறக்கம் (ultra-fast downloads), இடையூறில்லாத திரையோட்டம் (seamless streaming) மற்றும் சிறந்த பல்பணி செயல்பாட்டிற்கு (efficient multitasking) வழிவகுக்கிறது. வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு மாதம் 5,073 ரூபா, 9 மாதங்களுக்கு 6,457 ரூபா, 6 மாதங்களுக்கு 9,240 ரூபா, அல்லது 3 மாதங்களுக்கு 17,614 ரூபா என்ற தவணை முறைகளைத் தேர்வு செய்யலாம். மேலும், Samsung இன் Break-free Offer மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு 16,960 ரூபா வரை திரை மாற்று (screen replacement) சேமிப்புகளைப் பெறலாம்.

Samsung F தொடரை விரிவுபடுத்தியுள்ள Galaxy F06 5G ஆனது 4GB RAM மற்றும் 128GB Storage உடன் 53,979 ரூபா விலையில் கிடைக்கிறது. பட்ஜெட்டை மீறாமல் 5G தொழில்நுட்பத்தை அனுபவிக்க விரும்பும் பாவனையாளர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது. வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு மாதம் 4,026 ரூபா முதல் 3 மாதங்களுக்கு 13,978 ரூபா வரை பல்வேறு தவணை முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம். 5G இணைப்பு, திடமான வன்பொருள் (solid hardware) மற்றும் Samsung இன் நம்பகமான மென்பொருள் சூழலமைப்புடன் (software ecosystem), இந்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி அன்றாட தேவைகளுக்கு ஏற்ற சுமூகமான மற்றும் விரைவான பாவனையாளர் அனுபவத்தை வழங்குகிறது.

Samsung தனது தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் நோக்கில் கடனட்டை தேவையை நீக்கி, இலகுவான தவணை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிக இலங்கையர்கள் நவீன கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்தை அனுபவிக்க வாய்ப்பளிக்கிறது. Galaxy F06 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் தொலைபேசி உலகில் புதிதாக நுழைபவர்கள் முதல் உயர் செயல்திறன் மற்றும் 5G வசதிகளுக்காக தரமுயர்த்துபவர்கள் வரை பல்வேறு வகையான பாவனையாளர்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இப்புதிய அறிமுகம் பற்றி கருத்து தெரிவித்த Samsung Sri Lanka-வின் முகாமைத்துப் பணிப்பாளர் SangHwa Song நிறுவனத்தின் புத்தாக்கம் மற்றும் மலிவு விலை குறித்த நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், ‘Samsung இல், நாங்கள் தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் உறுதியாக உள்ளோம். ஒவ்வொரு இலங்கையரும் தரம் மற்றும் செயல்திறனில் உயர்ந்த மட்டுமல்லாமல், நிதி ரீதியாகவும் எட்டக்கூடிய சாதனங்களை அணுகும் உரிமையைப் பெற்றுள்ளனர். Galaxy F06 5G புத்தாக்கத்தை மலிவு விலையில் வழங்குவதற்கான எங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இப்புதிய மாதாந்த தவணை முறைகளுடன், வாடிக்கையாளர்கள் எந்த சமரசமும் இல்லாமல் எதிர்கால ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்தை சொந்தமாக்க வழிவகுக்கிறோம்’ என்றார்.

இப்பண்டிகைக் கால சலுகைகளைப் பெற விரும்புவோர் அருகிலுள்ள Samsung இன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் Galaxy F தொடரை பார்வையிட்டு, அங்கேயே மாதாந்த தவணை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் 5G தொழில்நுட்பத்திற்கு மாறுகிறீர்களா அல்லது உங்கள் முதல் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை வாங்குகிறீர்களா, இந்தப் பண்டிகைக் காலம் செயல்திறன், வடிவமைப்பு மற்றும் நீண்டகால பயன்பாட்டை இணைக்கும் ஒரு சாதனத்தில் முதலீடு செய்ய சிறந்த வாய்ப்பாகும். அன்றாட வாழ்க்கையை வளப்படுத்தி, உண்மையான டிஜிட்டல் சுதந்திரத்தை வழங்கும் தொழில்நுட்பத்துடன் புதிய தொடக்கங்களைக் கொண்டாட Samsung அனைவரையும் அழைக்கிறது.

பாவனையாளர்கள் Samsung Members செயலியை பதிவிறக்கி உறுப்பினர்களுக்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெற முடியும். இவை OGF வணிகள் வளாகத்தில் உள்ள Samsung Experience கடையிலும் கிடைக்கும்.
இலங்கையில் Samsung தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக ‘மிகவும் விரும்பப்படும் மின்னணு வர்த்தகநாமம்’ எனவும், நான்கு ஆண்டுகளாக ‘மக்களின் இளைஞர் தேர்வு வர்த்தகநாமம்’ எனவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய பரந்த வாடிக்கையாளர் தளத்துடன், Gen Z மற்றும் millennial தலைமுறையினரின் தேவைகளை நிறைவேற்றுவதில் Samsung உறுதியாக உள்ளது.

කොකා-කෝලා, ශ්‍රී ලංකාවේ සෑම විශේෂ...
Sampath Bank Becomes the First...
Fortude partners with Ettos to...
සුව සේවා සඳහා ප්‍රවේශය වැඩිදියුණු...
Galaxy F06 மற்றும் F16 5G...
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...
HNB ශ්‍රී ලංකාව පුරා කුඩා...
Healthguard Distribution සිය ඖෂධ පරාසය...
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...
HNB ශ්‍රී ලංකාව පුරා කුඩා...
Healthguard Distribution සිය ඖෂධ පරාසය...
Hachajah puts Sri Lanka on...