Golden Valleysஇல் இருந்து பசுமை எதிர்காலம் வரை – போகவானா தோட்டத்தின் பயணம்

Share

Share

Share

Share

போகவானா எஸ்டேட் Bogawantalawa Valleyஇன் மத்திய பகுதியில் அமைந்துள்ளது, இது பொதுவாக “Golden Valley of Ceylon Tea” என்று அழைக்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நாட்டின் கோப்பி தோட்டங்கள் ஒரு பேரழிவு தரும் பூஞ்சை நோயினால் சரிந்தபோது அதன் கதை தொடங்குகிறது. இந்த நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், ஸ்காட்டிஷ் தோட்டக்காரர்கள் பள்ளத்தாக்கின் குளிர்ந்த காலநிலை, செழிப்பான மண் மற்றும் மூடுபனி படர்ந்த சரிவுகளால் வழிநடத்தப்பட்டு, தேயிலை பயிரிடத் தொடங்கினர்.

பள்ளத்தாக்கு முழுவதும் புதிய எஸ்டேட்டுகள் நிறுவப்பட்டபோது, இந்த மாற்றத்தின் காலகட்டத்தில் போகவானா உருவானது. அடர்ந்த காடுகள் அழிக்கப்பட வேண்டியிருந்தன, வீதிகள் மற்றும் தொழிற்சாலைகள் கட்டப்பட வேண்டியிருந்தன, தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டியிருந்தன, இது எளிதான சாதனையல்ல.

பல ஆண்டுகளாக, தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் கவனமாக பயிரிடுதல் ஆகியவை போகவானாவை அதன் அதி-சிறந்த தேயிலைகளுக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தன, அவற்றின் பிரகாசமான நிறம் மற்றும் துடிப்பான சுவைக்காக அவை பாராட்டப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இது இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாக முக்கியத்துவம் பெற்றது.

பொகவானா தேயிலைகளின் தன்மையை வடிவமைப்பதில் Golden Valleஇன் தனித்துவமான காலநிலை முக்கிய பங்கு வகிக்கிறது. மூடுபனி, குளிர்ந்த காலைப் பொழுது, சீரான சூரிய ஒளி மற்றும் கனிம வளமான மண் ஆகியவை இணைந்து அதன் தேயிலைகளை வேறுபடுத்தும் நிலைமைகளை உருவாக்குகின்றன. அதிக உயரத்தில் இலைகளின் மெதுவான வளர்ச்சி சிக்கலான சுவையை வளர்க்க அனுமதிக்கிறது, உள்ளூர் மற்றும் சர்வதேச தேயிலை ஏலங்களில் பொகவானா அங்கீகாரத்தைப் பெறுகிறது.

பாரம்பரியமும் முன்னேற்றமும் கைகோர்க்கிறது
பொகவானின் பாரம்பரியம் எப்போதும் அதன் மக்களுடன் பிணைந்துள்ளது. பல தலைமுறைத் தோட்டக் குடும்பங்கள் அங்கே வாழ்ந்து உழைத்து வந்துள்ளனர், மேலும் அவர்களின் வாழ்வாதாரங்களும் பாரம்பரியங்களும் அந்த நிலத்துடன் ஒன்றிணைந்துள்ளன. திறமையான தொழிலாளர்கள் ஒவ்வொரு தளிரிலிருந்தும் மிகச்சிறந்த இரண்டு இலைகளையும் ஒரு மொட்டையும் தேர்ந்தெடுக்கும் கைமுறைத் தேயிலை பறிப்பு, அதன் செயல்பாடுகளில் இன்றளவும் மையமாக உள்ளது; இந்தத் திறன் தலைமுறைகளாகக் கடத்தப்பட்டு வருகிறது.

இந்த பாரம்பரியங்களைப் பேணிக் காத்துக்கொண்டே, இந்தத் தோட்டம் நவீன தேவைகளுக்கு ஏற்ப சீராகத் தன்னை மாற்றியமைத்து வருகிறது. தரத்தை உறுதிப்படுத்தவும், விரயத்தைக் குறைக்கவும், தொழிற்சாலைகள் ஆற்றல் திறன் கொண்ட உலர்த்திகள் மற்றும் டிஜிட்டல் எடைக் கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. துல்லியமான விவசாயத்தின் மூலம் மண்ணின் ஆரோக்கியம் கண்காணிக்கப்படுகிறது, அதே சமயம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காடு வளர்ப்புத் திட்டங்கள் அன்றாட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உள்ளன.

பொகவானை பேணிப் பாதுகாக்கும் போகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனம் (Bogawantalawa Tea Estates PLC) இன் நிர்வாகம், சமூக நலனில் சமமான கவனம் செலுத்தி வருகிறது. தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடுகள் மற்றும் சுத்தமான நீர், மின்சாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் வழங்கப்படுகிறது. 22 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நீர் சுத்திகரிப்புத் திட்டம், தோட்டச் சமூகம், உள்ளூர் பாடசாலை மற்றும் ஒரு குழந்தை மேம்பாட்டு மையத்திற்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குகிறது. தோட்ட மருந்தகங்கள், ஊட்டச்சத்துத் திட்டங்கள் மற்றும் தாய்மைக் காலப் பராமரிப்புச் சேவைகள் சமூக ஆரோக்கியத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன.

Fairtrade நிதியுதவியுடன், இந்தத் தோட்டம் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்குப் பாடசாலை உபகரணப் பொருட்கள் மற்றும் புலமைப்பரிசில்களை வழங்கி வருகிறது. சமீபத்தில், இலங்கை தேயிலை வர்த்தகர்கள் சங்கத்துடன் (Ceylon Tea Traders’ Association) இணைந்து, போகவான தமிழ் பாடசாலைக்கு 1.8 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட் போர்ட் (Smart Board) நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த முயற்சிகள், தோட்டத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நவீன கற்றல் கருவிகள் மற்றும் சமமான கல்வி வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்கின்றன.

பெண்களின் பங்கேற்பும் பாரம்பரியப் பாத்திரங்களுக்கு அப்பால் விரிவடைந்துள்ளது. இன்று, பல பெண்கள் மேற்பார்வை மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள். திறன் பயிற்சி மற்றும் நலன்புரி குழுக்களின் ஈடுபாடு, தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரத்தை வளர்க்க உதவியுள்ளது, இது மேலும் இணைக்கப்பட்ட மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட சமூகத்தை உருவாக்க உதவுகிறது.

சூழல்-நேர்மறை தேயிலைகளும், ஒரு நிலையான எதிர்காலப் பாதையும்
போகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனம் (Bogawantalawa Tea Estates PLC) உலகின் முதல் சூழல்-நேர்மறை தேயிலையை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். இந்தச் சாதனை, நிறுவனம் தனது காபன் தடத்தை (Carbon Footprint) அளவிடத் தொடங்கிய 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நீண்ட காலப் பயணத்தின் விளைவாகும். 2016 ஆம் ஆண்டுக்குள், அது காபன்-நடுநிலை (Carbon-Neutral) சான்றிதழைப் பெற்றது, மேலும் 2019 ஆம் ஆண்டில், போகவான உலகளவில் சூழல்-நேர்மறை தேயிலைகளை உற்பத்தி செய்யும் முதல் தோட்டக் குழுக்களில் ஒன்றானது.

நீர்மின் நிலையங்களும் (Hydropower Plants) சூரியத் தகடுகளும் (Solar Panels) இப்போது தோட்டத்தின் மின்சாரத் தேவைகளில் கணிசமான பகுதியை உருவாக்குகின்றன. சேதனப் பசளைகளும் (Organic Fertilizers) கம்போஸ்ட் திட்டங்களும் இரசாயன உள்ளீடுகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டு, மண்ணின் ஆரோக்கியத்தையும் பல்லுயிரியலையும் மேம்படுத்துகின்றன. மலை முகடுகளிலும் நீரோடைகளிலும் உள்ள காடு வளர்ப்புத் திட்டங்கள் பறவைகள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கான வாழ்விடங்களை உருவாக்கியுள்ளன, அதே நேரத்தில் மண் அரிப்பைக் குறைத்து உள்ளூர் சுற்றுச்சூழலை வலுப்படுத்துகின்றன.

இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை, போகவான அதன் வெளியிடும் காபனைக் காட்டிலும் வளிமண்டலத்தில் இருந்து அதிக காபனை நீக்குவதை உறுதி செய்கிறது. அதன் 2025 இலக்கின்படி, உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோகிராம் தேயிலைக்கு 0.40 கிலோகிராம் கார்பன் டை ஆக்சைடு சமஅளவை (CO₂ equivalent) நீக்கும் இலக்கை இந்தத் தோட்டம் அடைய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாற்றம் ISO 14064 போன்ற சர்வதேசத் தரநிலைகளால் வழிநடத்தப்படுகிறது மற்றும் சுயாதீன அமைப்புகளால் ஆண்டுதோறும் சரிபார்க்கப்படுகிறது.

தோட்டத்தின் இந்த முயற்சிகள், Rainforest Alliance, Fairtrade, ISO, Ethical Tea Partnership மற்றும் UTZ போன்ற சான்றிதழ்கள் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இந்தச் சான்றிதழ்கள் உற்பத்தி மற்றும் தொழிலாளர் நடைமுறைகள் இரண்டிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை பிரதிபலிக்கின்றன.

போகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Feroze Majeed அவர்கள் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்: “போகவான எங்கள் கதையில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. அதன் வயல்களும் தொழிற்சாலைகளும் Golden Valley வரையறுக்கும் பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்திற்கு இடையேயான சமநிலையைப் பிரதிபலிக்கின்றன. அதன் மக்களின் அர்ப்பணிப்பும் நிலைத்தன்மைக்கான உறுதிப்பாடும் எங்கள் நிறுவனத்தின் திசையைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகின்றன.” என தெரிவித்தார். இதேவேளை இன்று, பொகவனாவின் தேயிலைகள் ஐரோப்பா முதல் ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு வரை 30 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவற்றின் நிலைத்தன்மையும் நெறிமுறையான உற்பத்தியும் சர்வதேச வாங்குபவர்கள் மற்றும் நுகர்வோரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன.

பொகவானவின் இந்தப் பயணம், பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு தோட்டம் எவ்வாறு பொறுப்பான விவசாயத்தில் முன்னோடியாக இருக்க முடியும் என்பதற்கான நினைவூட்டலாகும்; அங்கு தரமும், அக்கறையும், நிலைத்தன்மையும் தனித்தனி இலட்சியங்கள் அல்ல, மாறாக ஒரு நீடித்த பாரம்பரியத்தின் கூறுகளாகும்.

The Global STEM Surge: Sri...
අධ්‍යාපන ඩිජිටල්කරණයේ පරිවර්තනීය අනාගතය
2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட...
Healthguard Distribution achieves ISO 9001:2015...
The fifth pillar of STEM:...
பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல்...
ශ්‍රී ලංකාවේ තේ කර්මාන්තය මධ්‍ය...
Golden Valleysஇல் இருந்து பசுமை எதிர்காலம்...
பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல்...
ශ්‍රී ලංකාවේ තේ කර්මාන්තය මධ්‍ය...
Golden Valleysஇல் இருந்து பசுமை எதிர்காலம்...
2025 “CMA விரிவாக்கப்பட்ட வருடாந்திர அறிக்கை...