#Happyisnow மூலம் இந்த பண்டிகைக் காலத்தில் தமது கார்ட் உரிமையாளர்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்கும் HNB

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, இந்த பண்டிகைக் காலத்தில், #Happyisnow மூலம் பல தனித்துவமான சலுகைகளை வழங்கி, அதன் கார்ட் உரிமையாளர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

HNB தனது டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கு 12 நவம்பர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 வரை சலுகைகளை வழங்குவதற்காக இலங்கையின் முன்னணி வாடிக்கையாளர் விற்பனை நிலையங்கள், நகைகள் மற்றும் e-Commerce பிராண்டுகள் மற்றும் பிரபலமான உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், ஹோட்டல்கள் மற்றும் பாடசாலை உபகரண விற்பனை நிலையங்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன்படி 75% தள்ளுபடி மற்றும் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் மாதாந்திர தவணை திட்டங்களுடன் கவர்ச்சிகரமான சலுகைகளும் வழங்கப்படும்.

இது குறித்து கருத்து தெரிவித்த HNB கார்ட் பிரிவின் தலைவர் திருமதி கௌதமி நிரஞ்சன், இந்த கிறிஸ்மஸ் பருவ காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க பரிசாக சிறப்பு கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் சலுகைகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு விடுமுறையின் ஒவ்வொரு தருணத்தையும் மறக்க முடியாத அனுபவமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த பிரத்தியேக சலுகைகள் மூலம், இந்த ஆண்டும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அற்புதமான பண்டிகை காலத்தை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நம்பமுடியாத சலுகைகள் மற்றும் குறிப்பிடத்தக்க சேமிப்புகளுடன் மகிழ்ச்சியான பண்டிகைக் காலத்தில் HNB இல் எங்களுடன் இணையுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் வளமான விடுமுறை கால வாழ்த்துக்கள்! ” என தெரிவித்தார்.

இந்த பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு நன்மைகளை வழங்குவதற்காக நாட்டில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளுடன் HNB கைகோர்த்துள்ளது. HNB கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வைத்திருப்பவர்கள், நாட்டில் உள்ள முன்னணி சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளில் இருந்து வாரம் முழுவதும் மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய வீட்டுப் பொருட்களை வாங்கலாம். அதன்படி, டிசம்பர் 4 மற்றும் 25 திங்கட்கிழமைகளில் 300க்கும் மேற்பட்ட பால் பொருட்களுக்கு Cargills வழங்கும் 20% கிரெடிட் கார்ட் தள்ளுபடி மற்றும் 2,500 ரூபாய்க்கு மேல் புதிய மரக்கறிகள், பழங்கள் மற்றும் மீன் வகைகளை 4,000 ரூபாய்க்கு மேல் வாங்கும் பற்றுச் சீட்டுகளுக்கு, ஒவ்வொரு செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளிலும் 25% சலுகையும் கிடைக்கும். மேலும், HNB கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை லாஃப்ஸ் சூப்பர் மூலம் 3,000 ரூபாவுக்கு மேல் கொள்வனவு செய்யும் பற்றுக் சீட்டுகளுக்கு (Bills) முறையே 10% மற்றும் 5% தள்ளுபடியைப் பெறலாம்.

இந்த கூட்டாண்மை மூலம், HNB கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வாடிக்கையாளர்கள் அனைத்து Softlogic Glomark பல்பொருள் அங்காடிகள் மற்றும் Glomark.lk இல் 7,500 ரூபாய்க்கு மேல் கொள்வனவு செய்தால் 25% தள்ளுபடியும் 10% தள்ளுபடியும் டிசம்பர் 8 மற்றும் 22 வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை கிடைக்கும். மேலும் Arpico Super centres கிரெடிட் கார்ட்களுக்கு ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பழங்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன்வகைகளை வாங்கும் போது, 4000 ரூபாய்க்கு மேல் கொள்வனவு செய்யும் பற்றுச் சீட்டுக்களுக்கு 30% தள்ளுபடியைப் பெறலாம்.

HNB பல Online ஷாப்பிங் இணையதளங்களுடன் கூட்டிணைந்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பாக ஷாப்பிங் செய்ய முடியும். அதன்படி, Pickme Market மற்றும் Pickme Food ஆகியவற்றைப் பயன்படுத்தி, 4000 ரூபாய்க்கு மேல் செய்யும் ஆர்டர்களுக்கு 500 ரூபாய் விலைக் கழிவும், 2000 ரூபாய்க்கு மேல் செய்யும் ஆர்டர்களுக்கு 400 ரூபாய் விலை கழிவும் பெறலாம். மேலும், Buyabans.comஇல் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 52% வரை தள்ளுபடி வழங்குகிறது மற்றும் Mysoftlogic.lkஇல் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 75% வரை சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது. Singer.lk 24 மாதங்கள் வரை மேலதிக கட்டணங்கள் இல்லாமல் மாதாந்திர தவணை திட்ட வசதிகளை வழங்குகிறது.

HNB கார்ட் உரிமையாளர்களுக்கு 20% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன மற்றும் Online ஷாப்பிங் இணையதளங்களான Wishque.com, Kapruka.com, Takas.lk, Daraz.lk, Wasi.lk, Catchme.lk, Lovetubuy.lk மற்றும் WOW மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலதிக கட்டணங்கள் இல்லாமல் 6 மாதங்கள் வரை மாதாந்திர தவணை திட்டங்களை அனுபவிக்க முடியும்.

மேலும், புதிய பாடசாலைத் தவணைக்கான புதிய பாடசாலை உபகரணங்களை வாங்க விரும்பும் மாணவர்களுக்கு, Promateworld.com மூலம் அனைத்து பாடசாலை உபகரணங்களுக்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்களில் 10% தள்ளுபடி மற்றும் www.atlas.lk/Atlas Myshop சலுகைகளை வழங்குகிறது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்களுக்கு முறையே 25% மற்றும் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் 31 டிசம்பர் 2023 வரை மாத்திரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது HNB, Singer, Abans, Softlogic, Damro, Singhagiri, Dinapala Group, Hunters & Company, Quantum Fitness மற்றும் Seetha Holdings போன்ற பல புகழ்பெற்ற பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளதுடன், கிரெடிட் கார்ட்களில் 24 மாதங்கள் வரை மேலதிக கட்டணம் ஏதுமின்றி மாதாந்திர தவணைத் திட்டங்களுடன் இந்த விற்பனை நிலையங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் 75% வரை தள்ளுபடியைப் பெறலாம்.

இந்த விளம்பர காலத்தில், HNB கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு, இலங்கையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் வாங்குவதற்கு மேலதிக கட்டணங்கள் எதுவுமின்றி தள்ளுபடிகள் மற்றும் மாதாந்திர தவணைத் திட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அதன்படி, Zam Jems, Raja Jewellers, Arthur De Silva Jewellery, Pure Gold by Tiesh, Fior Drissage Jewellers மற்றும் Mallika Hemachandra ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நகைகளுக்கு 70% வரை தள்ளுபடி மற்றும் மேலதிக கட்டணங்கள் ஏதுமின்றி 6 மாதங்கள் வரை வசதியான கட்டணத் திட்டங்களைப் பெறுங்கள். மற்றும் 31 டிசம்பர் 2023 வரை Vogue Jewellers, Swarnamahal Jewellers, Pl.Mtt. முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவல்லர்ஸ், லலிதா ஜூவல்லர்ஸ், கொழும்பு ஜூவல்லரி, தேவி ஜூவல்லர்ஸ், ஆஷாதி ஜூவல்லர்ஸ், டயமண்ட் ட்ரீம்ஸ் மற்றும் பலவற்றிலிருந்து 6 மாதங்கள் வரை மேலதிக கட்டணங்கள் ஏதுமில்லாமல் எளிதான கட்டணத் திட்டங்களை அனுபவிக்கவும்.

மேலும், HNB கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 2023 மூன்றாவது புதன்கிழமையன்று Pizza Hut இலிருந்து ஏதேனும் Large Pan Pizzaவை வாங்குவதன் மூலம் இலவச Medium Pan Pizzaவையும் பெற்றுக் கொள்ள முடிவதுடன், டிசம்பர் மாதத்தின் இரண்டாவது செய்வாய்க்கிழமை Taco Bell இன் à la carte மெனுவிலிருந்து ஒரு பொருளை வாங்குவதன் மூலம் இரண்டாவது பொருளையும் இலவசமாக பெறலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் தவிர, HNB கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் Cinnamon Red, Waters Edge, Movenpick, Galle Face Hotels, Jade, The Mango Tree, PappaRich, Burger King, Popeyes, Baskin Robbins, Delifrance, Crystal Jade, Subway, Maharaja Palace, Mama Louie’s Pizza, Indian Summer, The Brick Lane Coffeehouse, The Four Leafed Clover, Darley Rd. Pub, Legacy மற்றும் ஆகிய இடங்களில் பல்வேறு சுவையான சமையல் அனுபவங்களை அனுபவிக்க முடிவதுடன், 20% வரை தள்ளுபடியை அனுபவிக்கவும் முடியும். மேலும், Junior Kuppanna, Sugar Bistro, Sugar Beach, The Tuna & The Crab மற்றும் பல உணவகங்களில் இருந்து 15% வரை தள்ளுபடியை நீங்கள் அனுபவிக்க முடியும்.

HNB அட்டை உரிமையாளர்களுக்கு Aitken Spence Hotels, The Water Garden – Sigiriya, The Blue Water – Wadduwa, Tribe Yala, Victoria Golf Club – Digana, Joe’s Resorts, Oak Ray Hotels, Pegasus Reef உள்ளிட்ட பல புகழ்பெற்ற ஹோட்டல்களில் இருந்து கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வெல்லும் வாய்ப்பும் உள்ளது. மேலும், HNB முன்னணி நவநாகரீக பிராண்டுகளுடன் இணைந்து டிசம்பர் மாதம் முழுவதும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்குகிறது.

HNB இன் பிரத்தியேக சலுகைகளுடன் இந்த பண்டிகை காலத்தை அனுபவிக்கவும்.

 

நாட்டின் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...
சீனாவில் BYD உள்ளிட்ட உலகளாவிய...
ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා...
JAAF supports ‘Clean Sri Lanka’...
இலங்கையில் நிலவும் தற்போதைய தேங்காய் நெருக்கடியை...
සුවහසක් සතුන්ගේ ජීවිත බේරා ගනිමින්...
Inovartic Leads UAE-Sri Lanka Breakthrough...
IFS Foundation takes on the...
සුවහසක් සතුන්ගේ ජීවිත බේරා ගනිමින්...
Inovartic Leads UAE-Sri Lanka Breakthrough...
IFS Foundation takes on the...
Sunshine Foundation for Goodஇன் 20வது...