Warner Bros. இன் Blockbuster திரைப்படமான ‘Weapons‘ மற்றும்
HBO Original IT: Welcome to Derry ஆகியவற்றின் வரவிருக்கும் திரையிடல்கள்
புதிய சந்தைகளுக்கான தயாரிப்பு அம்சங்கள், சந்தாத் திட்டங்கள் மற்றும் விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டன
Warner Bros. டிஸ்கவரியின் முன்னணி ஸ்ட்ரீமிங் சேவையான HBO Max, இப்போது பங்களாதேஷ், கம்போடியா, Macau, பாகிஸ்தான், இலங்கை மற்றும் உக்ரைன் உள்ளிட்ட 15 புதிய சந்தைகளில் நேரடியாகக் கிடைக்கிறது – முழுப் பட்டியல் இங்கே. இன்று முதல், இந்த சந்தைகளில் உள்ள சந்தாதாரர்கள் HBO Max Originals, Harry Potter, DC Universe, Warner Bros. மற்றும் Discovery போன்ற பிராண்டுகளின் உயர்தர பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை அனுபவித்து, மிகப்பெரிய Blockbusters திரைப்படங்கள், விருது பெற்ற தொடர்கள், நிஜ வாழ்க்கை கதைகள் மற்றும் குடும்ப தேர்வுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற முடியும்.
தற்போது ஒளிபரப்பிற்குக் கிடைக்கக்கூடிய உலகளாவிய வெற்றித் தொடர்களான: Game of Thrones, House of the Dragon, The Last of Us, The Penguin, The Pitt ஆகியவை அடங்கும். மேலும் ஹாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களான: Superman மற்றும் A Minecraft Movie, முழுமையான Harry Potter, The Lord of the Rings மற்றும் The Matrix திரைப்படத் தொகுப்புகள், அத்துடன் டிஸ்கவரியில் இருந்து Deadliest Catch மற்றும் Gold Rush மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குத் தொடர்களான Tom and Jerry, The Wonderfully Weird World of Gumball மற்றும் Looney Tunes ஆகியவையும் அடங்கும். மேலும், Friends மற்றும் The Big Bang Theory போன்ற மிகப் பிரபலமான தொடர்கள் ஜனவரி 2026 முதல் ஒளிபரப்பாகும்.
HBO மற்றும் Max Originalsஇன் தாயகமான HBO Max, IT: Welcome to Derry தொடரை அக்டோபர் 27 அன்று திரையிடுகிறது. Stephen Kingஇன் IT உலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய HBO drama, Andy Muschietti, Barbara Muschietti மற்றும் Jason Fuchs ஆகியோர் தொலைக்காட்சித் தொடருக்காக உருவாக்கியுள்ளனர். ரசிகர்களுக்காக அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் திரைப்படங்களான ‘M3GAN 2.0’, Mission: Impossible – The Final Reckoning, How To Train Your Dragon மற்றும் Weapons ஆகியவற்றின் திரையில் எதிர்பார்க்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் LG மற்றும் Samsung உள்ளிட்ட பல சாதனங்கள் மற்றும் முக்கிய தளங்களில் HBO Max ஒரு உறுதியான ஸ்ட்ரீமிங் அனுபவத்தை வழங்குகிறது. பயணத்தின்போது, சேவை கிடைக்கக்கூடிய சந்தைகளில் ரசிகர்கள் HBO Maxஐ அணுகலாம். சந்தாதாரர்கள் ஐந்து தனித்துவமான profiles வரை உருவாக்கலாம். இதில், ஒவ்வொரு சுயவிவரத்தையும் விருப்பமான கதாபாத்திரங்களை avatars பயன்படுத்தியும், பார்க்கும் பழக்கத்தின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளைப் பெற்றும், தடையற்ற search செயல்பாட்டை அனுபவித்தும், Continue Watching அம்சத்தின் மூலம் விட்டுச்சென்ற இடத்திலிருந்து பார்க்கத் தொடங்கியும் அல்லது Watch offline உள்ளடக்கத்தைப் பதிவிறக்கம் செய்தும் தனிப்பயனாக்கலாம். குடும்பங்கள் குழந்தைகளுக்கான சுயவிவரங்களை, வயதுக்கு ஏற்ற உள்ளடக்கத்துடன் மற்றும் விருப்பமான பெற்றோர் கட்டுப்பாடுகளுடன் (parental controls) தனிப்பயனாக்கலாம்.
HBO Max பல்வேறு திட்டங்களை வழங்குகிறது, மேலும் இது www.hbomax.com மூலமாகவும், அத்துடன் App Store மற்றும் Google Play Store போன்ற app stores மூலமாகவும் சந்தா செலுத்தக் கிடைக்கும். HBO Maxஇன் திட்டங்கள் மற்றும் விலை விவரங்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, here அழுத்தவும்.
Sri Lanka
Standard (1-month plan at USD$4.99 | 12-month plan at USD$34.99)
- Stream on 2 devices at once
- Full HD video resolution
- 30 downloads to watch on the go
Premium (1-month plan at USD$7.49 | 12-month plan at USD$49.99)
- Stream on 4 devices at once
- 4K Ultra HD video resolution as available
- Dolby Atmos immersive audio as available
- 100 downloads to watch on the go (limits apply)
HBO Max-இன் உலகளாவிய கிடைக்கும் முழுமையான பட்டியலுக்கு, HBO Max Help Centerஐ பார்வையிடவும்.
# # #
HBO Max தொடர்பாக
HBO Max என்பது Warner Bros Discovery இன் முன்னணி உலகளாவிய ஸ்ட்ரீமிங் தளமாகும், இது மிகவும் தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகளை மிக உயர்ந்த தரமான திரைக்கதை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் உண்மை குற்றங்கள் முதல் பெரியவர்கள் அனிமேஷன் வரை வழங்குகிறது. HBO Warner Bros, Max Originals, DC, Harry Potter போன்ற மதிப்புமிக்க பொழுதுபோக்கு பிராண்டுகள், The Big Bang Theory போன்ற அருமையான தொடர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் இடமாக HBO Max விளங்குகிறது. www.hbomax.com
தொடர்புகளுக்கு:
[email protected] | [email protected]