Healthguard Distribution, இலங்கையில் Cipla நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்த Breathe Free Lanka உடன் கைகோர்த்துள்ளது

Share

Share

Share

Share

Sunshine Holdings PLC இன் மருந்து விநியோகப் பிரிவான Healthguard Distribution, முன்னணி உலகளாவிய மருந்து நிறுவனமான Cipla லிமிடெட்டின் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான Breathe Free Lanka (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் சமீபத்தில் கைகோர்த்துள்ளது. Cipla இலங்கையின் மூன்றாவது பெரிய மருந்து நிறுவனமாகும், மேலும் இந்த கூட்டு முயற்சி Ciplaவின் தயாரிப்புகளை நுகர்வோருக்கு மேலும் அணுகலாகவும் பரவலாகவும் கிடைக்கச் செய்வதற்கான ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது. மேலும், இந்த கூட்டு முயற்சி நாடு முழுவதும் உயர்தர சுகாதார சேவை தீர்வுகளை வழங்குவதற்கான Healthguard Distribution இன் அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துகிறது.

இந்த கூட்டு முயற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், Healthguard Distributionஇன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிறைவேற்று பணிப்பாளருமான ஷான் பண்டார, “நாடு முழுவதும் Ciplaவின் தயாரிப்புகளுக்கு பரவலான அணுகலை வழங்குவதற்காக Breathe Free Lanka உடன் இணைந்து செயல்படும் வாய்ப்பைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், அனைத்து இலங்கையர்களுக்கும் உயர்தர மருந்துகளைப் பெறுவதற்கான பரவலான அணுகலை வழங்குவதற்கான ஒற்றை நோக்கத்துடன் செயல்படுவதற்கு, மருந்து துறையில் அதிக அனுபவம் மற்றும் நுகர்வோரின் நம்பிக்கையைப் பெற்ற இரண்டு வர்த்தக நாமங்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான தருணமாக இதைக் குறிப்பிடலாம். மருந்துகள் தொடர்பான பொறுப்பு மிகவும் கடுமையானது என்பதை உணர்ந்துகொண்ட Healthguard Distribution, நாடு முழுவதும் பரவியுள்ள வலுவான விநியோக அமைப்பு மற்றும் மருந்துகளை சரியான வெப்பநிலையில் வைத்திருக்க சிறப்பு களஞ்சியசாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், அரசாங்கத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, மருந்துகள் மற்றும் சுகாதார சேவை தயாரிப்புகளை பாதுகாப்பாக மருந்தகங்களுக்கு விநியோகிப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். இலங்கையில் மருந்து விநியோகம் மற்றும் சுகாதார சேவை சிறப்பு பற்றிய புதிய தரங்களை நிர்ணயிப்பதே இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாகும்.” என தெரிவித்தார்.

Healthguard Distribution தொடர்பாக
Sunshine Holdings PLCஇன் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான Healthguard Distribution, இலங்கையில் முதல் Distribution-as-a-Service (DaaS) மருந்து மாதிரியை அறிமுகப்படுத்தி நாட்டின் மருந்து துறையை மாற்றியமைத்துள்ளது. இது நாடு முழுவதும் சுகாதார மற்றும் நல்வாழ்வு பொருட்களுக்கு பொறுப்பான விநியோகஸ்தராக செயல்படுகிறது. இது நாடு முழுவதும் ஏழு பிராந்திய விநியோக மையங்கள் மூலம் மருந்துகள், சுகாதார சேவைகள் மற்றும் நுகர்வோர் நிறுவனங்கள் உட்பட 4,500 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு முறையான சேவையை வழங்குகிறது, மேலும் ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் மருந்து உற்பத்தியாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு கண்டிப்பாக இணங்குகிறது. மருந்துகளின் தரம் மற்றும் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றுவதற்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தி, நிறுவனம் ISO 9001:2015 மற்றும் GDP இணக்க சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.

இலங்கையின் பாரம்பரிய உணவுகளின் சுவையை TikTok...
Kaushala Amarasekara Honoured Among Top...
දකුණු ආසියානු සංචාරක සහ සුඛෝපභෝගී...
City of Dreams Sri Lanka...
MAS Holdings, AICPA සහ CIMA...
City of Dreams Sri Lanka...
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற...
ඩිජිටල් යුගයේ මවක් ලෙස ආදරය,...
City of Dreams Sri Lanka...
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற...
ඩිජිටල් යුගයේ මවක් ලෙස ආදරය,...
ITC Ratnadipa to Launch ‘The...