HNB FINANCEஇன் கிளை விரிவாக்கத் திட்டத்தின் அடுத்த கட்டம் கிரிபத்கொடை நகரத்திற்கு

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது புதிய கிளையை கிரிபத்கொடையில் திறந்து வைத்துள்ளது. HNB FINANCE PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் மற்றும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி மதுரங்க ஹீன்கெந்த ஆகியோரின் தலைமையில் இந்த புதிய கிளை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர்கள் உட்பட பிரதம அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

புதிதாக திறந்து வைக்கப்பட்ட HNB FINANCEஇன் கிரிபத்கொடை கிளையானது இல. 58, கண்டி வீதி, கிரிபத்கொடையில் அமைந்துள்ளது மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் லீசிங், கடன்கள், நிலையான வைப்புக்கள், வணிகக் கடன்கள், வீட்டுக் கடன்கள், சேமிப்புக் கணக்குகள் போன்ற பல நிதி வசதிகள் இதன் மூலம் பெற்றுக் கொடுக்கப்படும். HNB FINANCE கிரிபத்கொடை கிளை சிட்டி சென்டரில் அமைந்துள்ளது, எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் நிதித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மிகவும் எளிதாக இந்த இடத்திற்குச் செல்ல முடியும்.

கிரிபத்கொடை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கக் கடனுக்கான பெரும் தேவை இருப்பதால், HNB FINANCE கிரிபத்கொடை கிளையில் புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தையும் அமைத்துள்ளது. HNB FINANCE தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாறுபடும் பல தங்கக் கடன் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, நிறுவனத்தின் தங்கக் கடன் சேவைகளான “Gold Loan” Gold Plan மற்றும் VIP Gold Loan ஆகியவை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள அனைத்து தங்க கடன் சேவைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. HNB FINANCE தங்கக் கடன் சேவையானது குறைந்தபட்ச வட்டியில் ஒரு தங்கப் பவுணுக்கு அதிகபட்ச முன்பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது, மேலும் இந்த புதிய தங்கக் கடன் சேவை அலகு சேவைக் கட்டணங்கள் அல்லது பிற மறைமுகக் கட்டணங்கள் இல்லாமல் நம்பகமான பரிவர்த்தனையைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

“HNB FINANCE ஐப் பொருத்தவரையில் எங்கள் நோக்கம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான நிதிச் சேவையை வழங்குவதாகும். கிரிபத்கொடையிலுள்ள இந்த புதிய கிளையின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த நிதி சேவை அனுபவத்தையும், மிக இலகுவாக அணுகக் கூடிய வசதிகள் தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதிச் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் உறவுகளுடன் சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த புதிய கிளையை வாடிக்கையாளர்களுக்கு உகந்த சேவை மத்திய நிலையமாக மேம்படுத்துவதில் எங்களின் பணிவான மகிழ்ச்சி.” என HNB FINANCEஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறினார். மேலும் புதிய கிளையின் திறப்பு விழாவுடன், கிரிபத்கொடை நகரை மையமாகக் கொண்டு ஒரு சிறப்பு மேம்பாட்டுத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடரும் HBO MAX,...
HBO Max continues global expansion,...
Rockland Group Commemorates 101 Years...
City of Dreams Sri Lanka-வின்”Signature...
அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
Evolution Auto மற்றும் Ather Energy...