HNB Financeஇன் “வெசக் சிரிசர” கொண்டாட்டம் இந்த ஆண்டும் வண்ணமயத்துடன் நடைபெற்றது

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, பூஜை வழிபாடுகளுக்கு முதன்மை அளித்து “வெசக் சிரிசர” நிகழ்ச்சித் தொடரை நடத்தியது. மே மாதம் 9ம் திகதி நாவலையில் அமைந்துள்ள HNB FINANCEஇன் தலைமை அலுவலகத்தின் முன்னால் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தின் நாவலை மற்றும் பொரளை தலைமை அலுவலக ஊழியர்கள் வழங்கிய வெசக் பக்தி பாடல்கள், வெசக் மின் விளக்கு தோரணங்கள், அன்னதானங்கள் உள்ளிட்ட அழகிய வெசக் அலங்காரங்களுடன் HNB FINANCEஇன் “வெசக் சிரிசர” நிகழ்ச்சித் தொடர் வண்ணமயமாக விளங்கியது.

HNB FINANCEஇன் “வெசக் சிரிசர” நிகழ்வு, நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. வெசக் பக்தி பாடல்களை, நிறுவன ஊழியர்கள் ஒன்றிணைந்து குழுவாக பாடல் பாடினர். இந்த நிகழ்ச்சி Facebook சமூக ஊடகம் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

HNB FINANCEஇன் “வெசக் சிரிசர” நிகழ்ச்சித் தொடர் குறித்து கருத்து தெரிவித்த HNB FINANCEஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “மக்களின் மனதில் பக்தி நிறைந்த எண்ணங்களை ஊட்டுவதும், ஒரு குழுவாக ஒன்றிணைந்து இத்தகைய தானமளிக்கும் மற்றும் பக்தி நிறைந்த படைப்பாக்க பணிகளில் ஈடுபடுவதற்கு எங்கள் குழுவைத் தூண்டுவதுமே ‘வெசக் சிரிசர’ நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். இந்த நோக்கை முன்னிறுத்தி, வெசக் பௌர்ணமியை ஒட்டி பூஜைகளுக்கு முன்னுரிமை அளிக்க எங்கள் ஊழியர்களை ஊக்குவித்தோம். ‘வெசக் சிரிசர’ நிகழ்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளிலும் பல்வேறு புதிய அம்சங்களுடன், பிரார்த்தனை பூஜைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடத்த திட்டமிட்டுள்ளோம்” என கூறினார்.

HNB සමූහය 2025 වසරේ පළමු...
Samsung Sri Lanka Ushers in...
සන්ෂයින් හෝල්ඩින්ග්ස් සිංහල හා හින්දු...
Samsung Unveils Vision AI for...
Sunshine Holdings ushers in Sinhala...
විශේෂ වාහන ලීසිං විසඳුම් ලබා...
From Singapore to Colombo: MasterChef...
පෑන් ඒෂියා බැංකුව, IBM හි...
විශේෂ වාහන ලීසිං විසඳුම් ලබා...
From Singapore to Colombo: MasterChef...
පෑන් ඒෂියා බැංකුව, IBM හි...
HNB Financeஇன் “வெசக் சிரிசர” கொண்டாட்டம்...