இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோரின் நிதி அறிவுத்திறனை மேம்படுத்துவதறற்காக “திரியென் தியுனுவட்ட” நிதி அறிவுத்திறன் திட்டத்தின் அடுத்த கட்டத்தை அண்மையில் புத்தளம் நகரத்தில் நடைபெற்றது. HNB Finance நிறுவனத்தின் சமூக பொறுப்பு முயற்சியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையானன பயிற்சி நிகழ்ச்சிகள் மூலம், HNB Finance நிறுவனம் ஏராளமான நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோரின் நிதி அறிவுத்திறன் மற்றும் நிலையான வணிக நடவடிக்கைகளைத் தொடரும் திறனை மேம்படுத்த முடிந்துள்ளது.
HNB Finance நிறுவனத்தின் திறன் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் திரு. அனுர உடவத்த அவர்களால் இந்த நிதி அறிவுத்திறன் பயிற்சி தொடர் நடத்தப்பட்டது. இதில், வணிகக் கணக்குகளைப் பராமரித்தல், கடன் நிர்வகிப்பு, இலாபத்தின் ஒரு பகுதியை மீண்டும் முதலீடு செய்தல், வணிகச் செலவு நிர்வகிப்பு மற்றும் புதிய வணிக வாய்ப்புகளை அடையாளம் காணுதல் போன்ற தலைப்புகளில் நுண் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் பங்கேற்றனர். பயிற்சியில் பங்கேற்றவர்களில் மிகவும் ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்த தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு HNB Finance நிறுவனம் பரிசுகள் வழங்கியது. மேலும், நிறுவனம் தயாரித்துள்ள “திரியென் தியுனுவட்ட” நிதி அறிவுத்திறன் கையேட்டை பங்கேற்ற அனைவருக்கும் வழங்கியது.
HNB Finance PLC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு. சமிந்த பிரபாத் அவர்கள், நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த நிதி அறிவுத்திறன் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “நிதி அறிவுத்திறன் என்பது எந்தவொரு வணிகத்திற்கும் அடிப்படை ஒழுக்கமாகும். நிதி அறிவுத்திறன் இல்லாமல் ஒரு வணிகத்தை வெற்றிகரமாக நடத்த முடியாது. இந்த உண்மையை உணர்ந்து, குறிப்பாக நுண் மற்றும் சிறு வணிக சமூகத்தின் நிதி அறிவுத்திறன் மற்றும் நிலையான வணிக நடவடிக்கைகளைத் தொடரும் திறனை மேம்படுத்துவதற்காக கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளோம்.
இந்த திட்டத்தின் முதல் கட்டத்திலிருந்து இன்று வரை, முறையாக தொழில் முனைவோருக்கு நிதி அறிவுத்திறனை வழங்க முடிந்துள்ளது. மேலும், சிறு வணிகங்களைத் தொடங்குவதற்கான ஆரம்ப மூலதனத்தை வழங்குவதிலிருந்து, அந்த வணிகங்களை சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களாகவோ அல்லது அதைவிட மேம்படுத்தவோ தேவையான ஒவ்வொரு உதவியையும் வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என தெரிவித்தார்.