HNB Finance இன் “திரியென் தியுனுவட” நிதிசார் அறிவு பயிற்சிப் பட்டறையின் மேலும் இரண்டு கட்டங்கள் வெண்ணப்புவ மற்றும் நாவலப்பிட்டியில்

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, சிறு மற்றும் மைக்ரோ தொழிலதிபர்களின் நிதியியல் அறிவை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தி வரும் “திரியென் தியுனுவட” (தைரியமான வளர்ச்சியை நோக்கி) நிதி அறிவு திறன் திட்டத்தின் மேலும் இரண்டு கட்டங்கள், வெண்ணப்புவ மற்றும் நாவலப்பிட்டி நகரங்களில் அமைந்துள்ள HNB Finance கிளைகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டன. HNB Finance நிறுவனத்தின் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்கள் மூலம், ஏராளமான சிறு மற்றும் மைக்ரோ தொழிலதிபர்களின் நிதியியல் அறிவு மற்றும் அவர்களின் வணிகங்களை நிலைத்தன்மையுடன் நடத்தும் திறன் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன.

நிபுணத்துவ வளர்ச்சிப் பிரிவின் தலைவர் திரு. அனுர உடவத்த அவர்களால் இந்த நிதிசார் அறிவுத் திறன் தொடர் நடத்தப்பட்டது. இதில், வணிகக் கணக்கு வைத்துக் கொள்ளுதல், கடன் நிர்வகிப்பு, இலாபத்தின் ஒரு பகுதியை மறு முதலீடு செய்தல், வணிகச் செலவு நிர்வகிப்பு மற்றும் புதிய வணிக வாய்ப்புகளைக் கண்டறிதல் போன்ற தலைப்புகளில் சிறு மற்றும் மைக்ரோ தொழிலதிபர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலதிபர்களில் மிகவும் படைப்பு யோசனைகளை முன்வைத்தவர்களைத் தேர்ந்தெடுத்து, அந்த யோசனைகளுக்கான பரிசுகளை வழங்கும் வகையில் HNB Finance நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதனுடன், நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “திரியென் தியுனுவட” நிதி அறிவுத் திறன் கையேடு, வந்துள்ள அனைத்து தொழிலதிபர்களுக்கும் வழங்கப்பட்டது.

HNB Finance PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பபாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத் அவர்கள், நிறுவனத்தால் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நிதிசார் அறிவுத் திறன் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “நிதிசார் அறிவு என்பது எந்தவொரு வணிகத்தின் அடிப்படை ஒழுக்கமாகும்.

நிதிசார் அறிவு இல்லாமல் ஒரு வணிகத்தை வெற்றிகரமாக நடத்தி வைப்பது சாத்தியமில்லை. இந்த நிலைமையை உணர்ந்து, குறிப்பாக சிறு மற்றும் மைக்ரோ தொழிலதிபர்கள் சமூகத்தின் நிதிசார் அறிவு மற்றும் நிலையான வணிக நடத்துதல் திறனை மேம்படுத்துவதற்காக, கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறோம். இந்த திட்டத்தின் முதல் கட்டத்திலிருந்து இன்று வரை, மிகவும் முறையாக தொழிலதிபர்களுக்கு நிதிசார் அறிவை வழங்க நம்மால் முடிந்துள்ளது. மேலும், சிறு தொழில்களைத் தொடங்குவதற்கான மூலதனத்தை வழங்குவதிலிருந்து, அந்த வணிகங்களைத் தொடர்ச்சியாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களாக அல்லது அதற்கும் அப்பாற்பட்டதாக வளர்ப்பதற்கான ஒவ்வொரு உதவியையும் வழங்குவதில், ஒரு நிறுவனமாக நாங்கள் செயல்படுகிறோம்” என்று கூறினார்.

Huawei Commercially Verifies the World’s...
MAS Holdings, වේගවත් තිරසාර ඇඟලුම්...
Colombo Comedy Show 2025 to...
MAS ஹோல்டிங்ஸினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Plan for...
JAAFஇன் ஆடை ஏற்றுமதி செயல்பாடு குறித்த...
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
Social Media’s Role in STEM...