John Keells CG Auto இலங்கைக்கு இறக்குமதி செய்த முதல் தொகுதி BYD வாகனங்களின் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது

Share

Share

Share

Share

புதிய ஆற்றல் வாகனங்களில் (NEV) உலகளாவிய முன்னணி நிறுவனமான BYD, இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் தனது வாடிக்கையாளர்களுக்கான முதல் வாகன விநியோகத்தை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto மூலம் இறக்குமதி செய்யப்பட்ட புதிய ஆற்றல் வாகன மாதிரிகளின் முதல் தொகுதி, கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வாடிக்கையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இது நாட்டில் BYD நிறுவனத்தின் புதிய ஆற்றல் வாகன மாதிரிகளின் (NEV) படிப்படியான அறிமுகத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
கடந்த மார்ச் 14 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த கப்பல் சரக்கில், BYD SEALION 6, BYD ATTO 3, BYD DOLPHIN மற்றும் பல மாதிரிகள் உள்ளடங்கியுள்ளன. நிலைபேறான போக்குவரத்து தீர்வுகளுக்கான தேவை வளர்ந்து வரும் நிலையில், இந்த விநியோகமானது இலங்கை வீதிகளில் நவீன புதிய ஆற்றல் வாகன தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதில் ஒரு முக்கிய படியாக அமைகிறது.
சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை உறுதிசெய்தல்
இந்த நிகழ்வில் John Keells Holdings PLC குழுமத் தலைவர் க்ரிஷான் பாலேந்திரா உரையாற்றுகையில், “BYD வாகனங்களின் முதல் விநியோகங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம், அதேசமயம், இலங்கையின் நிலைபேறான போக்குவரத்துக்கான விரைவான மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். உலகின் முன்னணி புதிய ஆற்றல் வாகனங்களை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதற்காக பல ஆண்டுகளாக நாங்கள் மேற்கொண்ட முயற்சியின் உச்சக்கட்டமாக இந்த முதல் வாகன விநியோகத்தைக் குறிப்பிடலாம். ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு BYD வாகனங்களின் உரிமையை வழங்குவதற்காக உலகின் முன்னணி நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் நாங்கள், விரைவில் இலங்கையில் நிலைபேறான போக்குவரத்துக்கான உலகளாவிய மையமாக ஒரு சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்தார்.
தரம் மற்றும் பாதுகாப்பிற்கான உறுதிப்பாடு
விநியோகத்திற்கு முன்னர், ஒவ்வொரு வாகனமும் ஒரு விரிவான விநியோகத்திற்கு முந்தைய ஆய்வு (Pre-Delivery Inspection) மற்றும் தர கட்டுப்பாட்டு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் மின்கலத்தின் செயல்திறன், பாதுகாப்பு அமைப்புகள், மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் ஒட்டுமொத்த வாகன செயல்பாடு போன்றவை முழுமையாக பரிசோதிக்கப்படும். இதன்மூலம் ஒவ்வொரு வாகனமும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றிற்கான BYD நிறுவனத்தின் உலகளாவிய தரநிலைகளை பூர்த்தி செய்வது உறுதிசெய்யப்படுகிறது.
இதுகுறித்து, CG Corp Global இன் முகாமைத்துப் பணிப்பாளர் நிர்வாணா சௌத்ரி கருத்து தெரிவிக்கையில், ‘இலங்கையில் BYD வாகனங்களின் வருகை என்பது உள்ளூர் வாடிக்கையாளருக்கு நிலைபேறான போக்குவரத்தை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதில் ஒரு முக்கிய படியாகும். நிலைபேறான போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், உலகளவில் நம்பகமான புதிய ஆற்றல் வாகன தொழில்நுட்பத்தை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த ஆரம்பம், நாட்டின் நிலைபேறான போக்குவரத்து வளர்ச்சியில் நீண்டகால முதலீட்டிற்கும், பிராந்தியத்தில் மின்சாரம் மூலம் இயங்கும் வாகன போக்குவரத்தின் எதிர்காலத்திற்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்குவதற்குமான எங்கள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.’ என கூறினார்.
எதிர்வரும் மாதங்களில் கூடுதல் இறக்குமதிகள் எதிர்பார்க்கப்படுவதால், John Keells CG Auto நிறுவனம், புதிய ஆற்றல் வாகனங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சுமூகமான மாற்றத்தை உறுதிசெய்வதிலும், இலங்கையின் நிலைபேறான போக்குவரத்து சுற்றுச்சூழலின் விரிவான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் உறுதியாக உள்ளது.
BYD தொடர்பில்
BYD என்பது ஒரு பன்னாட்டு உயர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது இந் நிறுவனமானது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் தொழில்நுட்ப புத்தாக்கங்களையும், கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்த தன்னை அர்ப்பணித்துள்ளது. 1995 ஆம் ஆண்டில் Recharge செய்யக்கூடிய மின்கல தயாரிப்பாளராக நிறுவப்பட்ட BYD நிறுவனம், தற்போது மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து, புதிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வணிக துறைகளில் இயங்கி வருகிறது. BYD ஆனது, சீனா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், பிரேசில், ஹங்கேரி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 30 க்கும் மேற்பட்ட தொழில்துறை பூங்காக்களை கொண்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் சேமிப்பகம் முதல் அதன் பயன்பாடுகள் வரை, zero-emission energy solutions வழங்குவதற்கு BYD அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது. அதன் புதிய மின்சாரவாகனமானது இப்போது 6 கண்டங்களில், 70 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட நகரங்களில் காணப்படுகின்றது. ஹொங்கொங் மற்றும் ஷென்ஜென் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், பசுமையான உலகத்தை நோக்கிய புத்தாக்கங்களை வழங்கும் Fortune Global 500 நிறுவனமாக அறியப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு, www.bydglobal.com ஐப் பார்வையிடவும்.
JKCG Auto தொடர்பில்
John Keells CG Auto Private Limited (JKCG) ஆனது John Keells Holdings PLC இன் துணை நிறுவனமாகும். 2023 இல் வாகனத் துறையில் பிரவேசித்த JKCG Auto நிறுவனம் இலங்கையில் BYD பயணிகள் வாகனங்கள், உதிரிப் பாகங்கள் மற்றும் சேவைகளின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகும். புதிய ஆற்றல் வாகனங்களில் (NEV) வாடிக்கையாளர் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், புதிய ஆற்றல்
வாகனங்களுக்கான புதிய தரநிலைகளை அமைப்பதற்கும் மற்றும் இலங்கையில் புதிய ஆற்றல் வாகனங்களுக்கான உட்கட்டமைப்பு அமைப்பை மேம்படுத்துவதற்கும் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு www.johnkeellscgauto.com ஐப் பார்வையிடவும்.
CG Corp Global தொடர்பில்
CG Corp Global என்பது 140 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட பன்னாட்டு நிறுவனமாகும். இது விருந்தோம்பல், வங்கி, உணவு, குளிர்பானம், அசையாச் சொத்து (real estate) மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்வகைப்பட்ட தொழில்களைக் கொண்டுள்ளது. நேபாளத்தின் முதல் பில்லியன் டொலர் பன்னாட்டு நிறுவனமாக, CG Corp Global 35க்கும் மேற்பட்ட நாடுகளில் 160க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் செயல்படுகிறது. இந்தக் குழுமம் வளர்ந்து வரும் சந்தைகளில் புத்தாக்கம், நிலைபேறான வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு, www.cgcorpglobal.com ஐப் பார்வையிடவும்.
Michelin Sri Lanka ජාත්‍යන්තර කාන්තා...
Sampath Bank Tees Up for...
Samsung Electronics Marks 19 Consecutive...
Sampath Bank Adjudged Best Commercial...
உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் தொடர்ந்து 19...
Sunshine Holdings embarks on a...
Sampath Bank Tees Up for...
John Keells CG Auto இலங்கைக்கு...
Sunshine Holdings embarks on a...
Sampath Bank Tees Up for...
John Keells CG Auto இலங்கைக்கு...
HNB වෙතින් මේ අවුරුදු සමයේ...