Kaspersky 2024 இன் முதல் பாதியில் இயந்திர கற்றல் மூலம் APT கண்டறிதலில் 25% அதிகரிப்பை எட்டியது

Share

Share

Share

Share

Kaspersky’இன் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் குழு (Global Research and Analytics Group – GREAT) 2024 இன் முதல் பாதியில் மேம்பட்ட அச்சுறுத்தல் (APT) கண்டறிதலில் 25% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் குழு தனது உள் இயந்திர கற்றல் முறைகளைப் பயன்படுத்தி இதுபோன்ற ஆயிரக்கணக்கான அச்சுறுத்தல்களைக் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகளாவிய இணையத்தள அச்சுறுத்தல் தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அரசாங்கம் மற்றும் நிதி நிறுவன மற்றும் தொலைத்தொடர்பு துறைகள் இவற்றைக் கண்டறிய முடிந்தது.

Random Forest மற்றும் TF-IDF போன்ற நுட்பங்கள் Kasperskyஇன் தீர்வுகளில் பயன்படுத்தப்படும் அதிக எண்ணிக்கையிலான இயந்திர கற்றல் மாதிரிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நுட்பங்கள் துல்லியமான அச்சுறுத்தல்களைக் கூட விரைவாகவும் சரியாகவும் கண்டறிய உதவுகின்றன. மேலும், இந்த கலவையானது பாரம்பரிய கண்டறிதல் அமைப்புகளால் புறக்கணிக்கப்படக்கூடிய சமரசத்தின் குறிகாட்டிகளை அடையாளம் காணும் வாய்ப்பை வழங்குகிறது, அதே நேரத்தில் மாற்றங்களை மிகவும் துல்லியமாக கண்டறிதல் மற்றும் அச்சுறுத்தல் கண்டறிதலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கொண்டுள்ளது.

மேலும், இயந்திர கற்றலின் தொடர்ச்சியான பயன்பாட்டின் மூலம், ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான தரவை செயலாக்குவதற்கான மையத்தை உருவாக்கியுள்ள வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் பற்றிய அதிநவீன தரவு நுண்ணறிவுகளை அதன் அமைப்புகள் வழங்க முடியும். இந்த காரணத்திற்காக, 2024 முதல் பாதியில் அச்சுறுத்தல் கண்டறிதலை 25% ஆக அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாகும். இது பிரதிபலிக்கும் நேரத்தைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது மற்றும் இணைய அபாயங்களைக் குறைக்கும் திறனை பெரிதும் அதிகரிக்கிறது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த Kaspersky GReAT இன் META ஆய்வு மையத்தின் தலைவர் திரு. அமின் ஹஸ்பினி, “இந்த முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகிவிட்டன. அடையாளத்தின் துல்லியத்தை அதிகரிப்பதன் மூலமும், அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக செயலூக்கமான உத்திகளை உருவாக்குவதன் மூலமும் இது அமைப்பு மற்றும் நிறுவனங்களுக்கு உதவ முடியும். அனைவருக்கும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதி செய்வதற்காக, இணையப் பாதுகாப்பின் எதிர்காலம் எப்போதும் இந்தக் கருவிகளின் நேர்மறையான பயன்பாட்டைப் பொறுத்தது என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்தார்.

இந்த இயந்திர கற்றல் மாதிரி, மாறிவரும் இணைய தொழில்நுட்பங்களுக்கு மத்தியில் அதன் இணையதளங்களை திறம்பட நிர்வகிக்க புதிய தரவு மற்றும் புதுப்பிப்புகளை செய்கிறது, புதிய தாக்குதல்களின் வடிவங்களை சரியான நேரத்தில் புரிந்துகொள்வதற்கான தகவல்கள வழங்குகிறது, அத்துடன் பாதுகாப்பை பலப்படுத்துகிறது மற்றும் நிறுவனங்களின் பின்னடைவை அதிகரிக்கிறது.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் GITEX 2024 இல் மேலும் விவாதிக்கப்படும், அங்கு Kaspersky இணைய பாதுகாப்பில் AI ஐப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும். இந்த இயந்திர கற்றல் பற்றி மேலும் அறிய Securelist.com. பார்வையிடவும்.

 

இலங்கையின் பாரம்பரிய உணவுகளின் சுவையை TikTok...
Kaushala Amarasekara Honoured Among Top...
දකුණු ආසියානු සංචාරක සහ සුඛෝපභෝගී...
City of Dreams Sri Lanka...
MAS Holdings, AICPA සහ CIMA...
City of Dreams Sri Lanka...
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற...
ඩිජිටල් යුගයේ මවක් ලෙස ආදරය,...
City of Dreams Sri Lanka...
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற...
ඩිජිටල් යුගයේ මවක් ලෙස ආදරය,...
ITC Ratnadipa to Launch ‘The...