KOKO மற்றும் Ceylinco கூட்டாண்மையில் இலங்கையின் முதலாவது பிரத்தியேக மருத்துவ காப்புறுதி திட்டம் அறிமுகம்

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி ‘இப்பொழுது வாங்கி பின்னர் செலுத்துங்கள்’ (Buy Now Pay Later -BNPL) தளமான KOKO (கொகோ), செலிங்கோ ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தனது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது மருத்துவக் காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையின் நிதித் தொழில்நுட்பம் மற்றும் காப்புறுதித் துறைகளில் இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். சுகாதாரக் காப்புறுதித் துறையில் செலிங்கோ ஜெனரல் இன்ஷூரன்ஸ் கொண்டுள்ள பல தசாப்தகால அனுபவத்தையும், KOKO தனது வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் குறித்து பெற்றுள்ள புரிதலையும் ஒன்றிணைத்து, முழுமுழு பயனர்களின் டிஜிட்டல் வாழ்க்கை முறை மற்றும் நிதித் தேவைகளுக்கு ஏற்ப இந்த மருத்துவக் காப்புறுதித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

வழமையான காப்புறுதி திட்டங்களைப் போலன்றி, KOKO செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் டிஜிட்டல் தளத்தின் மூலமாகவே மிகவும் எளிதாகவும், விரைவாகவும், குறைந்த செலவிலும் இக்காப்புறுதி திட்டத்தை செயல்படுத்திக் கொள்ள முடியும். இத்திட்டத்தின் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தல், சிகிச்சைச் செலவுகள் மற்றும் முக்கிய மருத்துவத் தேவைகளுக்காக 40,000 அமெரிக்க டொலர்கள் வரையிலான மருத்துவக் காப்புறுதி நன்மையைப் பெற முடியும்.

‘செலிங்கோ சுவ சம்பத’ (Suwa Sampatha) எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை அனுமதி மற்றும் அறுவை சிகிச்சைக்கான காப்புறுதி வசதிகளை KOKO வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். நாட்டின் முன்னணி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளை உள்ளடக்கிய பரந்த வலையமைப்பு, நேரடியாகக் கட்டணம் செலுத்தும் வசதி மற்றும் மருத்துவச் செலவுகளை மீளப் பெறும் வசதி ஆகிய சிறப்பு அம்சங்களால் இக்காப்புறுதித் திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இக்கூட்டாண்மை குறித்து KOKO நிறுவனத்தின் பிராந்திய பிரதம நிறைவேற்று அதிகாரி மைக்கல் சதாசிவம் கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களின் அன்றாடத் தேவைகளைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் தீர்வுகளை வழங்குவதே KOKO-வின் நோக்கமாகும். ஒருவரின் நிதித் ஸ்திரத்தன்மைக்குச் சுகாதாரக் காப்புறுதி மிக முக்கியமானது. எனினும், பாரம்பரிய காப்புறுதி முறைகள் சிக்கலானவையாகவோ அல்லது தேவைகளுக்குப் பொருத்தமற்றவையாகவோ இருப்பதால், வாடிக்கையாளர் ஆர்வம் காட்டுவதில்லை. செலிங்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடனான இக்கூட்டாண்மை மூலம், எமது டிஜிட்டல் தளத்தின் எளிமையையும், ஒரு முன்னணி காப்புறுதி நிறுவனத்தின் நம்பிக்கையையும் இணைத்து, வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்குப் பொருத்தமான தீர்வை எம்மால் வழங்க முடிந்துள்ளது.” எனக் குறிப்பிட்டார்.

KOKO நிறுவனத்தைப் பொறுத்தவரை, அத்தியாவசிய சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக வாடிக்கையாளருக்கு மிக இலகுவாகக் கிடைக்கச் செய்யும் அதன் முதன்மை இலக்கின் ஒரு இயல்பான விரிவாக்கமாகவே இக்கூட்டாண்மை அமைகின்றது.

கொடுப்பனவுகளை எளிமைப்படுத்தி, பொருட்களைக் கொள்வனவு செய்வதில் வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கி வரும் KOKO, தற்போது நம்பகமான மருத்துவ காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்களின் அன்றாட நிதிப் பாதுகாப்பிலும் தனது பங்கை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

இலங்கையில் 3 மில்லியனுக்கும் அதிகமான செயலி பதிவிறக்கங்களையும், ஆயிரக்கணக்கான வர்த்தகப் பங்காளர்களையும் கொண்டுள்ள KOKO, டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரின் தேவையையும், நடத்தையையும் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளது. நவீன டிஜிட்டல் நிதிச் சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இக்காப்புறுதித் திட்டத்தை வடிவமைக்க இந்த அனுபவம் பெரிதும் உதவியுள்ளது.

இந்த நிலையில், செலிங்கோ ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ரொஷான் ரணசிங்க இது குறித்துப் பேசுகையில், “இன்றைய வாடிக்கையாளர்கள் நிதி மற்றும் காப்புறுதிச் சேவைகளைப் பெறும்போது அதிக நெகிழ்வுத்தன்மையையும் எளிமையையும் எதிர்பார்க்கின்றனர். KOKO உடனான இந்த கூட்டாண்மையின் மூலம் செலிங்கோ நிறுவனத்தின் வலிமையும் நம்பிக்கையும், நவீன டிஜிட்டல் தளத்தின் வசதியோடு இணைகிறது. இதன் மூலம் சர்வதேச தரத்தையுடைய சுகாதாரக் காப்புறுதிப் பாதுகாப்பை வாடிக்கையாளர்கள் மிக எளிதாகப் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.” என்றார்.

நாடு தழுவிய கிளை வலையமைப்பைக் கொண்டுள்ள செலிங்கோ ஜெனரல் இன்சூரன்ஸ், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற SLIM-Kantar People’s Awards விழாவில் தொடர்ந்து 19 ஆவது ஆண்டாகவும் ‘ஆண்டின் மக்களால் விரும்பப்பட்ட பொதுக் காப்புறுதி வர்த்தக நாமம் (People’s General Insurance Brand of the Year) விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது.

KOKO-வின் டிஜிட்டல் தொழில்நுட்பமும் செலிங்கோ நிறுவனத்தின் காப்புறுதி நிபுணத்துவமும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், இலங்கையில் மருத்துவக் காப்புறுதியைப் பெற்றுக்கொள்ளும் முறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

BYD Mobile App හඳුන්වා දී...
නල්ලූර් කන්දස්වාමි කෝවිල් මංගල්‍යයේ ආගමික...
ITC Ratnadipa Welcomes Chef Prakhar...
28 Years of Fitness Evolution:...
5 ශ්‍රේණියේ දරුදැරියන් 6,500 කට...
ශ්‍රී ලංකාවේ සුළු, කුඩා හා...
KOKO සහ සෙලින්කෝ ඉන්ෂුවරන්ස් එක්ව...
Colombo Dockyard marks World Maritime...
ශ්‍රී ලංකාවේ සුළු, කුඩා හා...
KOKO සහ සෙලින්කෝ ඉන්ෂුවරන්ස් එක්ව...
Colombo Dockyard marks World Maritime...
KOKO மற்றும் Ceylinco கூட்டாண்மையில் இலங்கையின்...