LankaPay Technnovation Awards 2025இல் மூன்று விருதுகளை வென்று, டிஜிட்டல் வங்கித்துறையில் புத்தாக்கத்தை முன்னிலைப்படுத்திய HNB

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி வங்கியான HNB PLC, புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் வசதிக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் நிரூபித்துள்ளது. மார்ச் 26, 2025 அன்று கொழும்பு ஷங்கிரி-லாவில் நடைபெற்ற LankaPay Technnovation Awards 2025 நிகழ்வில் மூன்று முக்கிய விருதுகளைப் பெற்றது. HNB, ‘சிறந்த வாடிக்கையாளர் வசதிக்கான மெரிட் விருது’, ‘ஆண்டின் மிக புத்தாக்கமான வங்கிப் பிரிவில் – வெள்ளி விருது’ மற்றும் ‘சிறந்த Lanka QR இயல்பாக்கிப் பிரிவில் – தங்க விருது’ ஆகியவற்றை வென்றது.

2017 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட LankaPay Technnovation Awards நிகழ்வு, இலங்கையின் பணம் செலுத்தும் தொழில்நுட்பப் புத்தாக்கங்களில் முன்னோடிகளாகவும், தேசிய கட்டண வலையமைப்பின் திறனை மேம்படுத்தும் நிறுவனங்களாகவும் இருப்பவர்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் HNB பெற்ற சாதனைகள், டிஜிட்டல் வங்கித்துறையில் முன்னணி வகிக்கும் இவ்வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளையும், இலங்கையின் கட்டண முறைகளை நவீனமயமாக்குவதிலும் விரிவுபடுத்துவதிலும் இவ்வங்கி செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் எடுத்துக்காட்டுகின்றன.

இந்த அங்கீகாரங்கள், டிஜிட்டல் வங்கி அனுபவத்தை மேம்படுத்துவதில் HNB-யின் அர்ப்பணிப்பையும், இலங்கையின் நிதி சூழலமைப்பின் வளர்ச்சியில் இவ்வங்கி வகிக்கும் முக்கியப் பங்கையும் வலியுறுத்துகின்றன. இந்த விருதுகள், Lanka QR முயற்சி மூலம் குறிப்பாக, வாடிக்கையாளர் வசதி, புத்தாக்கம் மற்றும் தடங்கலற்ற டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை ஊக்குவிப்பதில் HNBஇன் முன்னணித் தன்மையையும் எடுத்துக்காட்டுகின்றன.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த HNBஇன் பிரதம செயற்பாட்டு அதிகாரி சஞ்ஜேய் விஜேமான்ன, ”HNBஇல், எங்கள் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முன்னணித் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதை நாங்கள் எப்போதும் முன்னுரிமையாகக் கொண்டுள்ளோம். இந்த விருதுகள், அணுகலும் திறன்மிக்கதுமான முதன்மைத் தர சேவைகளை புத்தாக்கமாக வழங்குவதில் எங்கள் குழுவின் அசைக்கமுடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. இலங்கையின் டிஜிட்டல் வங்கித்துறையில் ஒரு முன்னோடியாக அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் தொடர்ந்து பராமரிக்கிறோம்.” என தெரிவித்தார்.

இந்த விருதுகள் டிஜிட்டல் வங்கித்துறையில் HNBஇன் முன்னணி நிலையை மேலும் உறுதிப்படுத்துகின்றன, வாடிக்கையாளர்-மைய அணுகுமுறையை தனது சேவைகளின் மையமாக வைத்திருப்பதோடு, டிஜிட்டல் கட்டண தீர்வுகளின் ஏற்றுக்கொள்ளலை ஊக்குவிப்பதில் வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளை இவை எடுத்துக்காட்டுகின்றன.

HNBஇன் டிஜிட்டல் மாற்றப் பயணம் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் புத்தாக்கமமான அணுகுமுறையால் மேலும் வலுப்பெற்றுள்ளது. வங்கியின் “non-Face-to-Face” (NF2F) அம்சம், உடனிணைப்பு மற்றும் டிஜிட்டல் வங்கி சேவைகளுக்கிடையேயான இடைவெளியை நிரப்புகிறது – பாவனையாளர்களுக்கு ஆன்லைன் மற்றும் கிளைப் பரிவர்த்தனைகளுக்கிடையே தடையின்றி மாறுவதற்கான வசதியை இது வழங்குகிறது. மேலும், HNB SOLO டிஜிட்டல் பணப்பையாக தற்போதும் பல்துறை மற்றும் பயனர்-நட்பு (User-Friendly) கட்டண தீர்வாக வளர்ச்சியடைந்து வருகிறது; இது வாடிக்கையாளர்களுக்கு LankaQR மற்றும் கட்டணம் செலுத்துதல், SOLO Max மூலம் நண்பருக்கு-நண்பர் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இணைக்கப்பட்ட அனைத்து Justpay கணக்குகளையும் ஒரே மேடையில் நிர்வகிக்கும் வசதியை வழங்குகிறது.

“எங்கள் வாடிக்கையாளர் பயணங்களைப் பொறுத்தவரை, பொருட்கள் மற்றும் சேவைகளில் நாங்கள் ஒரு முழுமையான தூரநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளோம். நிறுவனம் முழுவதும் புதிய திறன்களை ஏற்க தேவையான தொழில்நுட்ப உள்கட்டமைப்பை நிறுவுவதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம். இதற்கான ஒரே விதி என்னவென்றால், அது எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான். தானியங்குபடுத்தல், செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோ செயல்முறை ஆட்டோமேஷன் மற்றும் பிற தொழில்நுட்பங்களை இணைப்பதன் மூலம், வங்கிகள் தடையற்ற மற்றும் எளிதான கொடுக்கல் வாங்கல்களுக்கு டிஜிட்டல் நிதி உதவிகளை வழங்க முடியும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதன் விளைவாக அதிக வசதி, மதிப்பு மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்,” என HNBஇன் சிரேஷ்ட துணைத் தலைவரும் டிஜிட்டல் வங்கித்துறையின் தலைவருமான சம்மிக வீரசிங்க தெரிவித்தார்.

HNBஇன் புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்-மைய சேவைகளுக்கான அர்ப்பணிப்பு, இலங்கையின் வங்கித் துறையில் முன்னணி நிலையைத் தொடர்ந்து பேணுவதை உறுதி செய்கிறது. தேசிய அளவில் டிஜிட்டல் வங்கி அனுபவங்களுக்கான தரத்தை நிர்ணயிப்பதில் HNB தொடர்ந்து முன்னோடியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

FitsAir தற்போது வணிக வகுப்பு சேவைகளையும்...
Samsung නවතම 12KG Front Load...
Shaping Tomorrow’s Tech as 99x...
RIUNIT புறநகர் சொத்து சந்தை அறிக்கை:...
සංජීව් හුලුගල්ල මහතා Cinnamon Life...
ශ්‍රී ලාංකේය ඇඟලුම් ක්ෂේත්‍රය තිරසාර...
Bespoke AI சலவைத் தயாரிப்புகளை புதிய...
Samsung Sri Lanka Expands Bespoke...
ශ්‍රී ලාංකේය ඇඟලුම් ක්ෂේත්‍රය තිරසාර...
Bespoke AI சலவைத் தயாரிப்புகளை புதிய...
Samsung Sri Lanka Expands Bespoke...
தனது வணிக விரிவாக்கத்தை மேற்கொள்ளும் முகமாக...