LMD இன் புதிய வர்த்தகநாமங்கள் வருடாந்த தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் இடம்பிடித்த Cinnamon Life

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி வணிக இதழான LMD இன் 2025 புதிய வர்த்தகநாமங்கள் வருடாந்த தரவரிசையில் Cinnamon Life இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் முன்னணி வணிக தரவரிசைப்படுத்தலில் இருந்து பெறப்பட்ட இந்த அங்கீகாரம், Cinnamon Life இன் விரைவான வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுடனான தனித்துவமான உறவை உறுதிப்படுத்துகிறது.

தங்கள் வாசகர்கள் மிகவும் விரும்பும் மற்றும் நம்பும் வர்த்தகநாமங்களைப் பற்றி அறிந்து கொள்ள LMD இனால் நியமிக்கப்பட்ட PepperCube Consultants மேற்கொண்ட ஒரு சிறப்பு ஆய்வின் விளைவாக இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. LMD வாசகர்களில் இருந்து தற்செயலாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல்கள் மூலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் மேல், தென், மத்திய, வடமேற்கு மற்றும் வட மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 52% ஆண்கள் மற்றும் 42% பெண்கள் பங்கேற்றனர்.

பொருட்கள் மற்றும் சேவைகள், விருந்தோம்பல், வங்கி, தொலைத்தொடர்பு மற்றும் பல்வேறு வணிகத் துறைகளில் 43க்கும் மேற்பட்ட வர்த்தகநாமங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பதிலளித்தவர்களின் விருப்பம், நம்பிக்கை மற்றும் அங்கீகாரத்தின் அடிப்படையில் வெற்றிகரமான வர்த்தகநாமங்கள் பெயரிடப்பட்டன. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், PepperCube ஆய்வுக் குழு வாசகர்களால் வழங்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி, அவற்றின் செல்லுபடியாகும் தன்மையை ஆய்வு செய்து, தரவரிசைப்படுத்துவதற்கு மிகவும் பாரபட்சமின்றி செயல்பட்டது.

Cinnamon Life செயல்பாட்டைத் தொடங்கி ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திலேயே இத்தகைய அங்கீகாரம் கிடைத்துள்ளமை முக்கிய சிறப்பம்சமாகும். அதன் வாடிக்கையாளர் அனுபவம், சர்வதேச தரத்திலான உணவு மற்றும் பானம், படைப்பாற்றல் செயல்பாடுகள் மற்றும் சிறப்பான விருந்தோம்பல் ஆகியவை Cinnamon Life ஐ வாசகர்களிடையே பிரபலமாகவும் விருப்பமானதாகவும் மாற்றியுள்ளன.

இது தொடர்பாக Cinnamon Life இன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் பத்மி பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், ‘LMD மற்றும் அதன் வாசகர் சமூகத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்தை நாங்கள் மிகவும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம். Cinnamon Life என்பது உணவு அல்லது தங்குமிடம் வழங்குவதற்கான இடம் மட்டுமல்ல, யோசனைகள், கலாச்சாரங்கள் மற்றும் உறவுகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதை புரிந்துகொள்ள உதவும் இடமாக நான் பார்க்கிறேன். இந்த தரவரிசை எமது வாடிக்கையாளர்களுடன் நாங்கள் கட்டியெழுப்பியுள்ள உறவுக்கு ஒரு சான்றாகும். கொழும்பு நகரத்தின் பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், எதிர்கால வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் Cinnamon Life க்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்’ என்றார்.

கொழும்பு நகரத்தின் கவர்ச்சியை அதிகரிக்கும் Cinnamon Life இன் எதிர்கால பயணத்திற்கும், சிறந்த சேவைக்கான பெரிய ஊக்கமாகவும் இந்த தரவரிசை முக்கியமானதாக உள்ளது.

Huawei Commercially Verifies the World’s...
MAS Holdings, වේගවත් තිරසාර ඇඟලුම්...
Colombo Comedy Show 2025 to...
MAS ஹோல்டிங்ஸினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Plan for...
JAAFஇன் ஆடை ஏற்றுமதி செயல்பாடு குறித்த...
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
Social Media’s Role in STEM...