தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை-தொழில்நுட்பக் குழுமமான MAS ஹோல்டிங்ஸ், அதன் Plan for Change 2030 திட்டத்தை, கொழும்பில் உள்ள சினமன் லைஃபில் 2025 அக்டோபர் 09 அன்று நடைபெற்ற ஒரு விசேட நிகழ்வில் அறிமுகம் செய்தது.
இந்த திட்டம், நிறுவனத்தின் நிலைத்தன்மைப் பயணத்தில் ஒரு முக்கியமான புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இது, தயாரிப்பு, வாழ்க்கை மற்றும் பூமி ஆகிய மூன்று பிரிவுகளிலும் அளவிடக்கூடிய உறுதிப்பாடுகளுடன், ஆடைகளின் எதிர்காலத்தை மறுவடிவமைப்பதற்கான ஒரு லட்சியமான செயல் திட்டத்தை கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த நிகழ்வில், லண்டனை தளமாகக் கொண்ட பத்திரிக்கையாளர், எழுத்தாளர், ஆலோசகர் மற்றும் நிலைத்தன்மைப் பரிந்துரையாளர் ஆகியோரை உள்ளடக்கிய Brooke Roberts-Islam அவர்கள், முக்கிய உரையை வழங்கினார். இவர் Forbes மற்றும் Business of Fashion ஆகியவற்றிற்காகப் புத்தாக்கம் குறித்து எழுதுபவர். Brooke, ஒரு சிந்தனையைத் தூண்டும் குழு விவாதத்தையும் நெறிப்படுத்தினார். இதில் Dialog Axiata PLC குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, Ambercycle நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் இணை நிறுவுனருமான Shay Sethi, MAS ஹோல்டிங்ஸின் குழும நிலையான வணிகத்தின் பணிப்பாளர் Nemanthie Kooragamage, மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உள்நாட்டு பணிப்பாளர் Takafumi Kadono ஆகியோர் பங்கேற்றனர்.
அவரது உரையில், நிலைத்தன்மையைச் செலுத்துவதில் தலைமையின் முக்கியத்துவம் பற்றி Brooke கருத்து தெரிவித்தார். அதேசமயம், குழு விவாதமானது வணிக உலகில் நிலைத்தன்மை உத்திகளைச் செயல்படுத்தும்போது ஏற்படும் உண்மையான வாய்ப்புகள் மற்றும் ஆபத்துக்களை ஆராய்ந்தது. மேலும், ஒவ்வொரு துறையிலிருந்தும் கிடைத்த நுண்ணறிவுகளையும் கற்றல்களையும் பகிர்ந்துகொண்டது.
நிறுவனம் அதன் 2025 இலக்குகளை அடைந்த வெற்றியின் அடிப்படையில், இந்த Plan for Change 2030 திட்டம், MAS இன் வணிகச் செயல்பாடுகள் மற்றும் மதிப்புச் சங்கிலி முழுவதும் நிலைத்தன்மையை உட்புகுத்துவதற்கான அடுத்த படியைக் குறிக்கிறது. இந்தத் திட்டம், முக்கிய துறைகளில் நிறுவனத்தின் முன்னேற்றத்தை விரிவாக்குகிறது. இதில், HeiQ AeoniQ™ மற்றும் Ambercycle உடனான கூட்டாண்மைகள் மூலம் வட்டப் பொருளாதாரத்தில் முதலீடுகள், 25,000 ஏக்கருக்கும் அதிகமான பல்லுயிர்த்தன்மையை மீட்டெடுத்தல், மற்றும் அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் முன்னெடுப்பு (SBTi) மூலம் அதன் குறுகிய கால வாயு வெளியேற்ற குறைப்பு இலக்குகளுக்கு ஒப்புதல் அளித்தல் ஆகியவை அடங்கும். அத்துடன், 2048 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய வாயு வெளியேற்றத்தை அடைவதற்கான உறுதிப்பாட்டையும் கொண்டுள்ளது.
இந்த அடுத்த கட்டத்தின் மூலம், MAS ஆனது வணிகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அதன் தாக்கத்தை ஆழமாக்கும் புதிய அளவுகோல்களை அறிமுகப்படுத்துகிறது. இந்தத் திட்டமானது, 2030 ஆம் ஆண்டிற்குள் நிறுவனத்தின் வருவாயில் 75% நிலைத்தன்மை வாய்ந்த தயாரிப்புகள் மூலம் ஈட்டப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கிறது. இந்த இலக்கு, வட்ட வடிவமைப்பு, அடுத்த தலைமுறை பொருட்கள் மற்றும் மீளுருவாக்கம் மூலம் வளர்க்கப்படும் இயற்கை இழைகள் ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகளால் ஆதரிக்கப்படும்.
பெண்கள் மொத்த பணியாளர்களில் 70% ஆக இருப்பதால், MAS நிறுவனம் நியாயமான கவனிப்புக் கொள்கைகளை வலுப்படுத்துதல், முழுமையான நல்வாழ்வை மேம்படுத்துதல், மற்றும் கல்வி, வாழ்வாதாரம், மற்றும் உள்ளடக்கத்தின் மூலம் நெகிழ்வான சமூகங்களை உருவாக்குதல் ஆகியவற்றிற்கான முன்முயற்சிகளை விரிவுபடுத்துகிறது.
சுற்றுச்சூழல் முன்முயற்சிகளின் அடிப்படையில், நிறுவனம் தனது செயல்பாடுகள் முழுவதும் முழுமையான பசுமை இல்லம் வாயுக்களில் 80% குறைப்பை நோக்கியும், ஸ்கோப் 3 வாயு வெளியேற்றத்தை 46.2% குறைப்பை (2019 அடிப்படை ஆண்டிலிருந்து) 2030 ஆம் ஆண்டிற்குள் நோக்கியும் செயல்படுகிறது. மேலும், இது தனது உலகளாவிய நடவடிக்கைகள் முழுவதும் நீர்ப்பாதுகாப்பு நிர்வகிப்பு, வட்ட வடிவிலான கழிவு நிர்வகிப்பு, மற்றும் சூழல் அமைப்பு மறுஉருவாக்கம் ஆகியவற்றையும் முன்னெடுத்துச் செல்கிறது.
இந்த “மாற்றத்திற்கான திட்டம்” வளர்ந்து வரும் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்த MAS ஹோல்டிங்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், “மக்கள் மற்றும் பூமிக்கு எது சரியோ, அதுவே வணிகத்திற்கும் சரியானது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் எமது நீண்ட கால வெற்றி எப்போதும் கட்டப்பட்டுள்ளது. MAS மாற்றத்திற்கான திட்டம் 2030 அந்த உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும் ஆடைத் தொழிலுக்கு மிகவும் நீடித்த நிலையான எதிர்காலத்தை வடிவமைக்கும் அதே வேளையில், நாங்கள் எவ்வாறு பொறுப்புடன் தொடர்ந்து வளர்ச்சியடைவோம் என்பதற்கான தெளிவான திசையையும் இது அமைக்கிறது.” என தெரிவித்தார்.
MAS ஹோல்டிங்ஸின் குழும நீடித்த நிலையான வணிகப் பிரிவின் பணிப்பாளர் நேமந்தி கூரகமகே கருத்து தெரிவிக்கையில், “மாற்றத்திற்கான திட்டம் 2030 ஆனது, எங்களின் இலக்குகளை எவ்வாறு அளவிடக்கூடிய விளைவுகளாக கொண்டுள்ளது என்பதை வரையறுக்கிறது. இது வட்ட வடிவம், நீடித்த நிலையான பொருட்கள், மற்றும் சமூக சமத்துவம் ஆகியவற்றிற்கான MASஇன் அர்ப்பணிப்பை மேலும் விரிவாக்குகிறது, இந்த கொள்கைகளை எங்கள் செயல்பாடுகளின் ஒவ்வொரு அம்சத்திலும் உட்பொதிக்கிறது. எங்கள் சுற்றுச்சூழல் இலக்குகள் வணிகச் செயல்திறனுடன் நேரடியாக இணைக்கப்படுவதை இந்தத் திட்டம் உறுதி செய்யும், நாங்கள் தயாரிப்புகளை வடிவமைக்கும் விதம், எங்கள் பணியாளர்களை மேம்படுத்தும் விதம், மற்றும் நாங்கள் சேவையளிக்கும் சமூகங்களில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் விதம் ஆகியவற்றை மாற்றும். புத்தாக்கத்துடன் பொறுப்புணர்வை இணைப்பதன் மூலம், அடுத்த பத்தாண்டுகளுக்கு MASஇன் வளர்ச்சியின் மையமாக நீடித்த நிலைத்தன்மையை நாங்கள் நிலைநிறுத்துகிறோம்.” என தெரிவித்தார்.
தொழில்துறை அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், MAS நிறுவனம் தனது மாற்றத்திற்கான திட்டம் 2030 மூலம் மிகவும் நெகிழ்வான எதிர்காலத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. வட்ட வடிவம் மற்றும் பொறுப்பான பொருட்களை விரைவுபடுத்துதல், அத்துடன் சமூகத் தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்நிறுவனம் சந்தையின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராகி வருகிறது. அதே நேரத்தில், மேலும் நீடித்த நிலையான மற்றும் சமத்துவமான ஆடைத் தொழிலுக்கு தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
MAS HOLDINGS தொடர்பாக:
MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை மற்றும் ஜவுளி உற்பத்தித்துறையின் வடிவமைப்பு முதல் விநியோகம் வரையிலான தீர்வுகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். 100,000 ஊழியர்களைக் கொண்ட உலகளாவிய சமூகத்துடன், MAS 13 நாடுகளில் பரவியுள்ளது. உள்ளாடைகள், விளையாட்டு உடைகள், செயல்பாட்டு உடைகள், செயல் திறனுக்கான உடைகள், மற்றும் நீச்சலுடைகள் ஆகியவற்றுடன், இப்போது அணியக்கூடிய தொழில்நுட்பம், ஃபெம்டெக், ஏற்றி இறக்கல்கள் மற்றும் ஜவுளி பூங்காக்கள் என உலகளவில் தனது வரம்பை விரிவுபடுத்துகிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, MAS அதன் நெறிமுறை மற்றும் நீடித்த நிலையான பணிச் சூழலுக்காகவும், அதன் கைவினைத்திறன் மற்றும் தயாரிப்புத் திறனுக்காகவும் உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நீடித்த நிலையான மாற்றத்தை உருவாக்குவதற்குமான முயற்சிகள், தயாரிப்புகள், வாழ்க்கை மற்றும் கிரகத்தை மாற்றியமைக்கும் ஒரு அர்ப்பணிப்பான MAS மாற்றத்திற்கான திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.



