MAS Holdings தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் புகழ்பெற்ற Clarivate South Asia கண்டுபிடிப்பு விருதை வென்றுள்ளது

Share

Share

Share

Share

MAS ஹோல்டிங்க்ஸின் ஆடைத் துறை மற்றும் அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கான பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது

ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமான MAS Holdings, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மதிப்புமிக்க Clarivate South Asia Innovation விருதை பெற்றுள்ளது. புத்தாக்கங்களில் தொடர்ந்து சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் புகழ்பெற்ற உலக அறிவாற்றல் நிறுவனமான Clarivate, இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற மதிப்பிற்குரிய Innovation Forumஆல் இந்த விருது வழங்கப்பட்டது.

South Asia Innovation Awardsக்கான தேர்வு செயல்முறை Clarivateஇன் சிறந்த 100 Global Innovators™ என்ற வழிமுறையுடன் நெருக்கமாக இணைகிறது, இது உலகளாவிய கண்டுபிடிப்புத் தலைவர்களை அடையாளம் காண்பதற்கான அளவுகோலாகும். Derwent World Patents Index™ (DWPI™) மற்றும் Derwent Patents Citation Index™ ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையில், காப்புரிமை அளவு மற்றும் ஒவ்வொரு காப்புரிமை பெற்ற யோசனையின் (Ideas) புத்தாக்கத் திறனின் வலிமையையும் Clarivate மதிப்பீடு செய்கிறது.

MAS Holdingsஇன் பிரதம கண்டுபிடிப்பு அதிகாரி ரணில் விதாரண கூறுகையில், “Clarivate நிறுவனத்திடமிருந்து தெற்காசிய கண்டுபிடிப்பு விருதை மீண்டும் பெறுவது எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இந்த தொடர்ச்சியான சாதனை, புத்தாக்கமான கண்டுபிடிப்புகளை வழங்குவதற்கும் உயர்தர அறிவுசார் சொத்துக்களின் (Intellectua; Property) கோப்புறையைப் பராமரிப்பதற்கும் MAS இன் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது. புத்தாக்கத்துக்கான எங்கள் அர்ப்பணிப்பு வேறுபாட்டை உந்துவது மட்டுமல்லாமல் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் வெற்றிக்கும் பங்களிக்கிறது.” என தெரிவித்தார்.

பெருநிறுவன பிரிவின் கீழ் தெற்காசிய கண்டுபிடிப்பு விருதைப் பெறுவது MAS இன் IP கோப்பறையை வலுப்படுத்தியுள்ளது, மேலும் பிராந்தியத்தில் ஒரு முன்னணி கண்டுபிடிப்பாளராக அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளது.

MAS புதுமை பயணத்தின் மையமான Twinery, ஸ்மார்ட் டெக்ஸ்டைல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை மற்றும் விரைவுபடுத்த அர்ப்பணிப்புடன் கவனம் செலுத்தியிருக்கின்றது. உலகளாவிய ரீதியில் விஞ்ஞானிகள், பொறியியளாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் கொண்டிருப்பதன் Twinery பேஷன் (fashion) துறையில் உள்ள சவால்களை கூட்டாக எதிர்கொள்கிறது.

இரண்டு குறிப்பிடத்தக்க தயாரிப்புகள், Femography மற்றும் Softmatter, ஆடை மற்றும் ஜவுளிகளின் எல்லைகளை உந்துவிப்பதற்கு MAS இன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றன. Softmatter அணியக்கூடிய தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, Washable Sensors, Haptics, Lighting மற்றும் பலவற்றின் மூலம் பயனர் அனுபவங்களை மேம்படுத்துகிறது. இதற்கிடையில், Femography, மேம்பட்ட, துவைக்கக்கூடிய, மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் மிகவும் நிலையான FemTech தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம் பெண் ஆரோக்கியம் மற்றும் சுகாதார தீர்வுகளை மறுவரையறை செய்துள்ளது.

Twinery, 66 வழங்கப்பட்ட காப்புரிமைகளின் ஈர்க்கக்கூடிய கோப்புறையுடன் விருது பெற்ற கண்டுபிடிப்பு ஊக்கியாக, வெள்ளை இடைவெளிகள் என குறிப்பிடப்படும் ஆராயப்படாத பகுதிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்க MAS ஐ மேம்படுத்தும் புத்தாக்க கலாச்சாரத்தை வளர்க்கிறது. இந்த கண்டுபிடிப்பு கலாச்சாரம் சமீபத்தில், Twinery க்கு Fast Company விருதைப் பெற்றுக்கொடுத்தது, அந்தவகையில் உலகளவில் கண்டுபிடிப்பாளர்களுக்கான சிறந்த பணியிடங்களில் 18வது இடத்தைப் பிடித்தது.

புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கு Twinery முயறசிக்கும் அதேவேளையில், மிகவும் நிலையான மற்றும் அதிகாரம் பெற்ற பேஷன் (sustainable and empowered fashion) சுற்றுச்சூழல் அமைப்புக்கு பங்களிக்கிறது, வேறுபாடு மற்றும் சந்தை வளர்ச்சியில் MAS இன் முக்கிய பங்கு பல ஆண்டுகளாக அது பெற்ற தொடர்ச்சியான அங்கீகாரத்தால் சான்றளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் RPC...
இலங்கையில் ஜரிகை பாரம்பரியம் மற்றும் 20...
GSCS International Ltd, with a...
Driving global change: GSCS International...
South Asia’s 1st AI-Based Hospital...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
Sampath Bank Partners with Symphony...