Micro Healthcare (Pvt) Ltd உடனான மூலோபாய கூட்டாண்மை மூலம் தனது மருந்து வரிசையை விரிவுபடுத்தும் Healthguard Distribution

Share

Share

Share

Share

இலங்கையின் ஒரேயொரு முழுமையான தேசிய மருந்து விநியோக நிறுவனமான Healthguard Distribution, அண்மையில் Micro Healthcare (Pvt) Ltd உடன் கைகோர்ப்பதாக அறிவித்துள்ளது. இப் புதிய கூட்டாண்மை இலங்கை முழுவதும் உள்ள மக்களுக்கு உயர்தரமான சுகாதார தயாரிப்புகளை வழங்குவதற்கான Healthguard Distribution இன் நோக்கத்தின் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான Healthguard Distribution இன் இலங்கைப் பிரிவாக செயல்படும் Micro Healthcare (Pvt) Ltd நிறுவனம், 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. சர்வதேச தர நிலைகளுக்கு ஏற்ப மருந்துகளை தயாரிப்பதில் பெயர்பெற்ற இந்நிறுவனம், நோய் எதிர்ப்பு மருந்துகள், இதய மருந்துகள், தோல் சிகிச்சை, நீரிழிவு சிகிச்சை, மகளிர் மருத்துவம், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த சிகிச்சை, சிறுநீரக மருத்துவம், மூட்டு வலி சிகிச்சை மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் தயாரிப்புகளை வழங்குகிறது.

இந்த கூட்டாண்மை மூலம், Healthguard Distribution தனது விரிவான விநியோக வலையமைப்பு மற்றும் வலுவான விநியோக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இலங்கை முழுவதும் Micro Healthcare இன் மருந்துகளை விநியோகிக்கும். இதன் மூலம் அத்தியாவசிய மருந்துகளின் கிடைக்கும் தன்மை மேம்படுத்தப்படும்.

இதுதொடர்பில் Healthguard Distribution இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சாந்த பண்டார கருத்து தெரிவிக்கையில், ‘உலகளாவிய அளவில் நம்பகத்தன்மை கொண்ட மருந்து நிறுவனங்களுடன் இணைவதன் மூலம் இலங்கையில் சுகாதார தரநிலைகளை உயர்த்துவதற்கான எங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த கூட்டாண்மை உறுதிப்படுத்துகிறது. Micro Healthcare நிறுவனம் தரம், நேர்மை மற்றும் நோயாளிகளை மையப்படுத்திய பராமரிப்பு ஆகிய எமது மதிப்புகளை பகிர்ந்து கொள்கிறது, மேலும் உலகத் தரம் வாய்ந்த மருந்துகளை அணுகும் வாய்ப்பை விரிவுபடுத்துவதற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.’ என்று தெரிவித்தார்.

Sunshine Holdings PLC இன் முழு உரிமையுடைய துணை நிறுவனமான Healthguard, விநியோகம் ஒரு சேவை (DaaS) மாதிரியை முன்னோடியாக அறிமுகப்படுத்தி இலங்கையின் மருந்து தொழிலில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் நாடு முழுவதும் அனைத்து சுகாதார மற்றும் சுகவாழ்வு தயாரிப்புகளுக்கும் விநியோகஸ்தராக செயல்படுகிறது. 4,500க்கும் மேற்பட்ட சுகாதார சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சேவையை வழங்கும் இந்நிறுவனம், ஏழு பிராந்திய விநியோக மையங்கள் மூலம் சுகாதார தயாரிப்புகளை விநியோகிக்கிறது. இந்நிறுவனம் ISO 9001:2015 மற்றும் GDP சான்றிதழ்களைப் பெற்றுள்ளது, இது தரம் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் எடுத்துக்காட்டுகிறது.

සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
Global Talent Competes to Solve...
අපනයනාභිමුඛ ප්‍රතිපත්ති ක්‍රියාත්මක කිරීමේ අවශ්‍යතාව...
MAS wins multiple honours at...
ලොව පිළිගත් DENZA නව බලශක්ති...
வலுவான நிதி செயல்திறனை வெளிப்படுத்தி, வங்கியின்...
கண்ணுக்குத் தெரியாமலும், மதிப்பிடப்படாமலும்: இலங்கையின் சிறு...
කොළඹ වරායේ බහලුම් තදබදය අවම...
வலுவான நிதி செயல்திறனை வெளிப்படுத்தி, வங்கியின்...
கண்ணுக்குத் தெரியாமலும், மதிப்பிடப்படாமலும்: இலங்கையின் சிறு...
කොළඹ වරායේ බහලුම් තදබදය අවම...
Softlogic Life wins best “AI...