Mount Lavinia வில் 61ஆவது காட்சியகத்தைத் திறந்து தனது வடிவமைப்பு தடத்தை மேலும் விரிவுபடுத்தும் LANKATILES

Share

Share

Share

Share

LANKATILES தனது வளர்ச்சிப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கொழும்பின் புகழ்பெற்ற கடலோரப் பகுதிகளில் ஒன்றான Mount Lavinia வில் தனது 61ஆவது காட்சியகத்தை திறந்து வைத்து, வடிவமைப்பை மையமாகக் கொண்ட தனது தனித்துவமான மேற்பரப்பு தீர்வுகளின் விரிவான தொகுப்பை வாடிக்கையாளர்களுக்கு மேலும் அணுக்கமாகக் கொண்டு வந்துள்ளது.

இயற்கையின் அழகு, அமைதியான கடலோர வாழ்க்கைமுறை மற்றும் காலத்தைக் கடக்கும் நேர்த்தி ஆகியவற்றை நவீன உட்புற மற்றும் வெளிப்புற இடங்களாக மாற்றிக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்கான LANKATILES இன் உறுதிப்பாட்டை இந்தப் புதிய காட்சியகம் பிரதிபலிக்கிறது.

இல. 280A, காலி வீதி, Mount Lavinia என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த புதிய LANKATILES காட்சியகம், வீட்டு உரிமையாளர்கள், Architects, உட்புற வடிவமைப்பாளர்கள், அபிவிருத்தியாளர்கள் மற்றும் துறையைச் சேர்ந்த ஏனைய நிபுணர்கள் ஒரே இடத்தில் உயர்தர சுவர் மற்றும் தரை மேற்பரப்பு தீர்வுகளின் விரிவான வரிசையை ஆராயக்கூடிய நவீன வடிவமைப்பு மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய காட்சியகத்தின் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக Architect ஜயநாத் சில்வா கலந்து கொண்டதுடன், LANKATILES நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரியந்த தல்வத்த, நிறுவனத்தின் மூத்த முகாமைத்துவ பிரதிநிதிகள் மற்றும் இலங்கையின் Architecture, கட்டுமானம், வடிவமைப்பு மற்றும் வர்த்தகத் துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டனர்.

கொழும்பின் நகர அமைப்பில் Mount Lavinia தனித்துவமான இடத்தை வகிக்கிறது. நன்கு வளர்ச்சியடைந்த குடியிருப்பு பகுதியின் தன்மையையும், புகழ்பெற்ற கடலோரச் சூழலையும், செழுமையான Architecture மரபையும் ஒருங்கிணைக்கும் இடமாக இது விளங்குகிறது. இலங்கை சுற்றுலாத்துறையின் தகவலின்படி, Mount Lavinia கொழும்பின் அமைதியான கடலோர புறநகர் பகுதிகளில் ஒன்றாகவும், குறிப்பாக அதன் கடற்கரைச் சூழலுக்காகவும் பரவலாக அறியப்படுகிறது.

காலி வீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இந்த புதிய காட்சியகம், நவீன நகர வாழ்க்கையையும் கடலோர வாழ்க்கையின் இயல்பான வெப்பத்தையும் நேர்த்தியையும் இணைக்கும் வீடுகள் மற்றும் வர்த்தக இடங்களை உருவாக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு LANKATILES மேலும் சிறப்பாக சேவை செய்ய வழிவகுக்கிறது.

இந்தக் காட்சியகத்தில் LANKATILES இன் விரிவான சுவர் மற்றும் தரை டைல் தொகுப்புகள் இடம்பெறுகின்றன. அவற்றில் நவீன வடிவமைப்புத் தொகுப்புகள், உயர்தர Double Fired Wall Tiles, Majestica பெரிய அளவிலான டைல் தொகுப்புகள், Mosaics by LANKATILES, மற்றும் நிறுவனத்தின் சமீபத்திய புதுமையான Cool Rooftop Tile® ஆகியவை அடங்கும். இதனுடன், குடியிருப்பு மற்றும் வர்த்தகப் பயன்பாடுகளுக்கேற்ற பல்வேறு வடிவமைப்புகளும் வாடிக்கையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காட்சியகத் திறப்பை முன்னிட்டு கருத்துத் தெரிவித்த LANKATILES நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரியந்த தல்வத்த கூறியதாவது: “Mount Lavinia என்பது பாரம்பரியம், கடலோர வாழ்க்கை மற்றும் நவீன நகர வாழ்க்கைமுறை ஆகியவை ஒன்றிணையும் தனித்துவமான அடையாளமுடைய பகுதி. அந்தச் சிறப்பியல்பை கருத்தில் கொண்டு, வீட்டு உரிமையாளர்கள், Architects மற்றும் வடிவமைப்பாளர்கள் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இரு வகை இடங்களையும் புதிய பரிமாணத்தில் மாற்றக்கூடிய வடிவமைப்புத் தொகுப்புகளை மேலும் எளிதாக அணுகக்கூடிய வகையில் எமது 61ஆவது காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. LANKATILES தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், ஊக்கமளிக்கும் வடிவமைப்பு, புதுமை மற்றும் நம்பகமான தரத்தை வாடிக்கையாளர்களுக்கு மேலும் அணுக்கமாகக் கொண்டு வருவதோடு, அவர்கள் விரும்பும் வாழ்க்கைமுறையை பிரதிபலிக்கும் இடங்களை உருவாக்க உதவுவதே எமது தொடர்ந்த கவனமாகும்.”

திறப்பு விழாவில் உரையாற்றிய பிரதம விருந்தினர், Architect ஜயநாத் சில்வா கூறியதாவது: “Mount Lavinia எப்போதும் Architecture, வாழ்க்கைமுறை மற்றும் கடலுடன் தனித்துவமான தொடர்பைக் கொண்ட பகுதி. இவ்வளவு விரிவான நவீன மேற்பரப்பு தீர்வுகளை வழங்கும் ஒரு காட்சியகம் இப்பகுதியில் தொடங்கப்படுவது, வீட்டு உரிமையாளர்களுக்கும் வடிவமைப்புத் துறை நிபுணர்களுக்கும் இந்தச் சூழலிலிருந்து புதிய உத்வேகத்தைப் பெற்று, கடலோர வாழ்க்கையை புதிய கோணங்களில் வெளிப்படுத்த பல வாய்ப்புகளைத் திறக்கிறது. வடிவமைப்பு, தயாரிப்பு புதுமை மற்றும் பல்துறை பயன்பாட்டுத் திறனை ஒருங்கிணைக்கும் LANKATILES இன் அணுகுமுறை, இந்தக் காட்சியகத்தை இப்பகுதிக்கான மதிப்புமிக்க புதிய சேர்க்கையாக மாற்றுகிறது.”

தனது 61ஆவது காட்சியகத்தின் திறப்புடன், LANKATILES நாடளாவிய தனது இருப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதோடு, தரம், புதுமை மற்றும் வடிவமைப்பு மேன்மை ஆகியவற்றிற்கான தனது உறுதிப்பாட்டையும் தொடர்கிறது.

Mount Lavinia காட்சியகம், “Creating spaces you’d love to live in” என்ற LANKATILES இன் ஐந்து தசாப்த கால பயணத்தில் இன்னொரு முக்கிய அத்தியாயமாக அமைகிறது.

ජොන් කීල්ස් පදනම සහ City...
Mount Lavinia வில் 61ஆவது காட்சியகத்தைத்...
Sumathi IT Marks 25 Years...
වැවිලි කර්මාන්තයේ පුනර්ජීවනයට නව සභාපතිගෙන්...
172ஆவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், இலங்கை முதலாளிமார்...
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி...
May the Odds Be Ever...
நடனக் கலைஞர் சன்ன விஜேவர்தன Diabetasol...
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி...
May the Odds Be Ever...
நடனக் கலைஞர் சன்ன விஜேவர்தன Diabetasol...
කලාශූරී චන්න විජේවර්ධන Diabetasol සන්නාම...