NCHS-Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 2023 பட்டமளிப்பு விழா BMICHஇல் நடைபெற்றது

Share

Share

Share

Share

நவலோக்க உயர்கல்வி நிறுவனம், (NCHS) Swinburne (ஸ்வின்பர்ன்) தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2023 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவை நவம்பர் 1, 2023 அன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) பிரமாண்டமான முறையில் நடத்தியது.

“அறிவைத் தேடுவது பிறப்பு முதல் இறப்பு வரை தொடர வேண்டிய ஒன்று, அது நமது எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். எப்போதும் மாறிவரும் உலகளாவிய போக்குகளுக்கு NCHS உங்களை தயார்படுத்துகிறது மற்றும் நீங்கள் உறுதியாக இருக்க தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்குகிறது.” என சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன இதன்போது தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவின் Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ப்ரோன்டே நெய்லண்ட், நவலோக்க உயர்கல்வி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச, நவலோக உயர்கல்வி நிறுவனத்தின் பீடாதிபதி கலாநிதி அலன் ராபர்ட்சன், பிரதிப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விக்டர் ரமணன். நவலோக்க உயர்கல்வி நிறுவனத்தின் தலைவர்/தலைமை நிறைவேற்று அதிகாரி, உட்பட விசேட அதிதிகள், பட்டதாரிகளின் குடும்பங்கள் மற்றும் நலம் விரும்பிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில், வணிகவியல், பொறியியல், சுகாதார அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன, அன்றிரவு பட்டமளிப்பு விழாவையொட்டி சிறப்பு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

“Swinburne தகுதிக்கு அப்பாற்பட்ட அறிவுச் செல்வம் உங்களிடம் உள்ளது. Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பல்வேறு தொழில்கள் மற்றும் நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணிபுரிந்து உங்களை எதிர்காலத்திற்கு சித்தப்படுத்தவும், வேலை வாய்ப்புகளுக்கு உங்களை வழிநடத்தவும் செய்கிறது. உங்கள் பாடங்களைப் பற்றிய ஆழமான அறிவு, அதிநவீன திறன்கள் மற்றும் Swinburneஇல் இருந்து நீங்கள் பெற்ற தனித்துவமான பண்புகள் மற்றும் துறையில் ஒரு சிறந்த நிபுணராக நீங்கள் இன்று பட்டம் பெறுவீர்கள்.” என Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் தலைவருமான பேராசிரியர் Pascale G. Quester கூறினார்.

“இந்த நேரத்தில் இலங்கைக்குத் தேவைப்படுவது தகுதிகள் மற்றும் திறன்களைக் கொண்டவர்கள். நீங்கள் தரமான அறிவுடன் பரிபூரணமாக இருப்பதால், சிறந்த எதிர்காலத்தை உருவாக்க பாடுபடும் உங்கள் நாட்டிற்கு உங்கள் சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும்.” என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் தெரிவித்தார்.

கொழும்பின் நகர மையத்திலும் கண்டி பிரதேசத்திலும் அமைந்துள்ள NCHS, இலங்கையை ஆசியாவின் சர்வதேச கல்வி மையமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகள் வீட்டில் படிப்பது போல் எளிதாகக் கல்வியைத் தொடர இது உதவுவதுடன், இங்குள்ள அதிநவீன கற்றல் வசதிகள் மாணவர்களுக்கு சர்வதேச படிப்பு அனுபவத்தை வழங்குகிறது.

NCHS ஒவ்வொரு மாணவரின் தேவைகளுக்கு ஏற்ப தனித்துவமான பலன்களையும் வழங்குகிறது. மாணவர்கள் தங்கள் க.பொ.த. சாதாரண அல்லது க.பொ.த. உயர்தர தேர்வுகளை முடித்த பிறகு அவர்கள் விரும்பும் பாட திட்டத்திற்கு பதிவு செய்யலாம்.

NCHS இல் Foundationஐ முடித்த பிறகு, மாணவர்கள் Hawthorne, Australia அல்லது மலேசியாவில் உள்ள Swinburne பல்கலைக்கழகங்களில் தாங்கள் தொடங்க விரும்பும் பட்டத்தைத் தேர்வு செய்யலாம்.

NCHS இன் மதிப்புமிக்க Swinburne degree pathwaysஇல் நீங்கள் எவ்வாறு பிரவேசிக்கலாம் என்பது பற்றி மேலும் அறிய, 0777 899 998/ 077 888 9655 என்ற எண்ணிற்கு அழைக்கவும். அல்லது, info@nchs.edu.lk என்ற மின்னஞ்சல் மூலம் NCHSஐ நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

 

Sri Lanka Unlocks New Market...
Sampath Bank Launches Priority Reserve...
2025 වසරේ මැයි මස අපනයන...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
ශ්‍රී ලංකාව තුළ සිය ප්‍රවේශය...