இலங்கையின் முன்னணி மின்னணு சாதன நிறுவனமான Samsung, 2025ஆம் ஆண்டிற்கான அதிநவீன Neo QLED 8K, OLED, QLED மற்றும் The Frame தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய மாதிரிகளில் புரட்சிகரமான ‘Vision AI ‘ தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இலங்கை வாடிக்கையாளருக்கு தனித்துவமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதோடு, இப்புதிய தொலைக்காட்சிகள் வெறும் திரைகளாக மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் அறிவார்ந்த சாதனங்களாக செயல்படுகின்றன.
Samsung Vision AI என்பது அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கட்டமைப்பாகும். இது மேம்படுத்தப்பட்ட ஒளி மற்றும் ஒலி அம்சங்களை இணைத்து, பாவனையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்துடன் உச்ச செயல்திறனை வழங்குகிறது. இந்த புதுமையான தொழில்நுட்பம் மூன்று அடிப்படை தூண்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
AI Mode என்பது மேம்பட்ட ஆழ்கற்றல் நுட்பங்கள் மூலம் உள்ளடக்கம் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப காட்சி மற்றும் ஒலியை உடனுக்குடன் சீரமைக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு முறையும் கண்கவர் காட்சிகளையும் சூழ்நிலை ஒலி அனுபவத்தையும் உறுதிசெய்கிறது. AI Experience பாவனையாளர் பழக்கவழக்கங்களை காலப்போக்கில் புரிந்துகொண்டு, உள்ளடக்க தேர்வு மற்றும் அமைப்புகளை தனிப்பட்ட முறையில் வழங்குகிறது.
இதன் மூலம் புத்திசாலித்தனமான, எளிதான பயன்பாட்டை உருவாக்குகிறது. பல சாதன இணைப்பு அம்சம் (Multi-Device Connectivity) தொலைக்காட்சியை ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி, Laptop மற்றும் பிற சாதனங்களுடன் தடையின்றி இணைத்து, Samsung தயாரிப்புகள் அனைத்திலும் உள்ளடக்கத்தை எளிதாக பகிரவும், கட்டுப்படுத்தவும் வழிவகுக்கிறது.
இது தொடர்பில் Samsung Sri Lanka வின் முகாமைத்துப் பணிப்பாளர் SangHwa Song கருத்து தெரிவிக்கையில், ‘இலங்கை வீடுகளில் தொலைக்காட்சியின் பங்கு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இது இனி வெறும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மட்டுமல்ல, மாறாக புத்திசாலித்தனமான, இணைக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கிறது. நாங்கள் எங்களின் பரந்துபட்ட உயர்தர தயாரிப்புகளில் Samsung Vision AI-ஐ அறிமுகப்படுத்தியுள்ளோம். இது கண்கவர் காட்சிகளுக்கு அப்பால் செல்லும் எதிர்கால தொலைக்காட்சி அனுபவத்தை வழங்குகிறது. Samsung Vision AI உண்மையான தனிப்பயன் அனுபவத்தை வழங்குகிறது. இதில் பார்க்கப்படும் உள்ளடக்கத்தை விட பார்வையாளரே முதன்மையானவர். இதை நாங்கள் ‘இது உங்கள் நிகழ்ச்சி’ (It’s Your Show) என்று அழைக்கிறோம். இங்கு பாவனையாளர்களே முழு கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். தொலைக்காட்சி அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள், பழக்கங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்ப மாறுகிறது. எங்களின் புதிய AI தொலைக்காட்சிகள் ஒவ்வொரு காட்சிக்கும் புதிய உயிரூட்டத்தை வழங்கி, வீட்டிலேயே திரையரங்க அனுபவத்திற்கு புதிய தரநிலையை அமைக்கின்றன. AI-ஆல் இயக்கப்படும் இப்புதிய திரைகளுடன், இலங்கையின் உயர்தர தொலைக்காட்சி சந்தையில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை வேகமாக அறிமுகப்படுத்தி, எங்கள் முன்னிலையை வலுப்படுத்துவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.
Samsung Vision AI ஒரு முக்கிய முன்னேற்றமாக, திரைகளை மேலும் புத்திசாலித்தனமாக, எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக மற்றும் ஆழமாக தனிப்பயனாக்கப்பட்டதாக மாற்றுகிறது. இது தொலைக்காட்சிகளை சுற்றுச்சுழலுக்கும், பாவனையாளர் செயல்பாடுகளுக்கும் ஏற்ப தகவமைக்கக்கூடிய மையமாக மாற்றுகிறது. இவை அன்றாட வாழ்வில் இயல்பாக இணைந்து, தொலைக்காட்சியை வெறும் காட்சிக் கருவியாக இல்லாமல் அறிவார்ந்த துணையாக மாற்றுகின்றன. இதில் சைகை கட்டுப்பாடு (Universal Gesture Control), AI தர மேம்பாட்டு தொழில்நுட்பம் (AI Upscaling Pro), தானியங்கி பின்னணி உருவாக்கம் (Generative Wallpaper), பல சாதன இணைப்பு (Multi-Device connectivity) மற்றும் செல்லப்பிராணி மற்றும் குடும்ப பராமரிப்பு முறை (Pet & Family Care) ஆகிய அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன.
Samsung இன் அதிநவீன செயற்கை நுண்ணறிவு கொண்ட Neo QLED 8K தொலைக்காட்சி, காட்சி தொழில்நுட்பத்தை மறுவரையறை செய்கிறது. 2025 AI தொலைக்காட்சி வரிசையின் முன்னணியில் உள்ள Neo QLED 8K, தொலைக்காட்சி புதுமைகளின் உச்சத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. 768 AI Neural networks ஐப் பயன்படுத்தும் மேம்பட்ட NQ8 AI Gen3 செயலியால் இயக்கப்படும் இந்த தொலைக்காட்சி, புரட்சிகரமான அம்சங்களுக்கு உயிரூட்டுகிறது. உள்ளீட்டு மூலம் எதுவாக இருந்தாலும், தெளிவான விபரங்களுடன் தனித்துவமான பார்வை அனுபவத்தை உறுதிசெய்யும் இந்த தொலைக்காட்சி, மிக மெல்லிய, எளிமையான Infinity Air வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அழகியல் சிறப்பும் தொழில்நுட்ப மேன்மையும் கொண்ட இந்த சாதனம், மூழ்கடிக்கும் திரையரங்க காட்சி அனுபவத்தை வழங்குகிறது.
8K AI Upscaling Pro அம்சம் எந்த உள்ளடக்கத்தையும் 8K தரத்திற்கு மேம்படுத்தி, விபரங்களை துல்லியமாக பாதுகாக்கிறது. Glare-Free தொழில்நுட்பம் பிரகாசமான இடங்களிலும் கவனச்சிதறல் இல்லாத பார்வையை வழங்கி, நிறம் அல்லது contrast ஐ பாதிக்காமல் பிரதிபலிப்புகளைக் குறைக்கிறது.
Q-Symphony மற்றும் Dolby Atmos இணைந்து, தொலைக்காட்சி ஒலிபெருக்கிகளை Samsung soundbars-களுடன் ஒருங்கிணைத்து, ஆழமான பல பரிமாண ஒலி அனுபவத்தை உருவாக்குகின்றன.
AI Mode தொழில்நுட்பம் உள்ளடக்க வகை மற்றும் சுற்றுப்புறத்தின் அடிப்படையில் படம் மற்றும் ஒலியை புத்திசாலித்தனமாக மேம்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட பார்வை அனுபவத்தை வழங்குகிறது. மேம்பட்ட Neo QLED 8K தொலைக்காட்சி 75 அங்குலம் மற்றும் 85 அங்குலம் ஆகிய இரண்டு அளவுகளில் கிடைக்கிறது.
Samsung இன் 2025 OLED தொலைக்காட்சிகள் 128 Neural Networks உடன் கூடிய NQ4 AI Gen3 செயலியால் இயக்கப்பட்டு, மேம்பட்ட செயல்திறனை வழங்குகின்றன. இவை Motion Xcelerator 165Hz, Glare-Free Viewing மற்றும் விரைவாக நகரும் காட்சிகளில் தெளிவான படத்திற்கான AI Motion Enhancer Pro ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்த மாதிரிகள் 100% நிற அளவை ஆதரித்து, PANTONE சான்றளிக்கப்பட்டவையாகவும், குறைந்தபட்ச சிதறலுக்கு எளிமையான Infinity One வடிவமைப்புடன் இணைக்கக்கூடிய மெல்லிய One Connect வசதியுடனும் உள்ளன.
Samsung தொலைக்காட்சிகள் விரிவான பாதுகாப்பு தளமான Samsung Knox மூலம் வலுப்படுத்தப்பட்டு, பாவனையாளர் தரவு மற்றும் தனியுரிமையை பாதுகாக்கின்றன. இந்த அமைப்பு அங்கீகரிக்கப்படாத மாற்றங்களைக் கண்டறிந்து தடுக்கிறது. மோசடி இணையத்தளங்களை முடக்கி தீங்கிழைக்கும் தளங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. மேலும், Samsung Knox Vault மூலம் தனிப்பட்ட தகவல்களுக்கு உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
Samsung Sri Lanka அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நீண்டகால மதிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி தனது சந்தை இருப்பை தொடர்ந்து வலுப்படுத்துகிறது. உலகளவில் கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நம்பர் 1 தொலைக்காட்சி தயாரிப்பாளராக Samsung திகழ்கிறது. இலங்கையில், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களுக்கு துறையின் மிக நீண்ட காலமான 20 ஆண்டுகள் உத்தரவாதத்தை வழங்கி வாடிக்கையாளர் நம்பிக்கையை மேம்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் Singer, Damro, Singhagiri மற்றும் Softlogic போன்ற அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் Samsung தயாரிப்புகளைப் பெற்று, நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவையையும் பெறலாம்.