Q4 2023 சமூக வழிகாட்டுதல்கள் அமுலாக்க அறிக்கையை வெளியிடும் TikTok

Share

Share

Share

Share

பாதுகாப்பான மற்றும் நேர்மறையான Online சூழலை வளர்ப்பதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சியில், TikTok 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான அதன் சமூக வழிகாட்டுதல்கள் (Community Guidelines) அமுலாக்க அறிக்கையை வெளியிட்டது. இந்த வெளியீடானது TikTok இன் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் நிலையான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது, மேலும் நம்பிக்கையை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது மற்றும் அதன் உலகளாவிய சமூகத்திற்கு பாதுகாப்பான தளத்தை உறுதி செய்கிறது.

2023 ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலப்பகுதியில், TikTok இன் செயலூக்கமான நடவடிக்கைகள் உலகளவில் 176,461,963 வீடியோக்களை அகற்ற வழிவகுத்தது, இது பிளாட்ஃபார்மில் பதிவேற்றப்பட்ட அனைத்து வீடியோக்களிலும் சுமார் 1.0% ஆகும். இவற்றில் கணிசமான பகுதி, 128,300,584 வீடியோக்கள், தானியங்கு கண்டறிதல் தொழில்நுட்பங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டன, அதே நேரத்தில் 8,038,106 வீடியோக்கள் மேலும் மதிப்பாய்வு செய்தபின் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டன.

குறிப்பிடத்தக்க வகையில், வழிகாட்டுதல்களை மீறிய சுமார் 89.9% வீடியோக்கள் Post செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டன, மேலும் காலாண்டில் செயலில் அகற்றும் விகிதம் 96.7% ஆக இருந்தது. இளைய பாவனையாளர்களை பாதுகாப்பதற்கான உலகளாவிய முயற்சியாக, TikTok 13 வயதுக்குட்பட்ட தனிநபர்களின் சந்தேகத்திற்குரிய 19,848,855 கணக்குகளையும் நீக்கியுள்ளது.

TikTok இன் சமூக வழிகாட்டுதல்கள் அனைத்து பாவனையாளர்களுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் உண்மையான சூழலை வளர்ப்பதற்காக மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. வழிகாட்டுதல்கள் அனைத்து உள்ளடக்கம் மற்றும் பாவனையாளர்கள் முழுவதும் ஒரே மாதிரியாக செயல்படுத்தப்படுகின்றன, TikTok அதன் அமுலாக்க நடவடிக்கைகளில் நிலைத்தன்மை மற்றும் நேர்மைக்காக பாடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

TikTok அதன் சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தை அடையாளம் காணவும், மதிப்பிடவும் மற்றும் நடவடிக்கை எடுக்கவும் புத்தாக்கமான தொழில்நுட்பம் மற்றும் மனித மதிப்பாய்வுகளைப் பயன்படுத்துகிறது. Community Guidelines Enforcement Reportஇன் காலாண்டு வெளியீடு, நீக்கப்பட்ட உள்ளடக்கம் மற்றும் கணக்குகளின் அளவு மற்றும் தன்மை பற்றிய விபரங்களை வழங்குகிறது, முழு வெளிப்படைத்தன்மைக்கான TikTok இன் நிலைப்பாட்டை உறுதி செய்கிறது.

Q4 2023 report பற்றிய விரிவான விபரங்களுக்கு மற்றும் TikTok இன் உள்ளடக்க வழிகாட்டுதல்கள், கருவிகள் மற்றும் கொள்கைகள் பற்றி மேலும் அறிய, TikTok இன் Transparency Centre ஐ பார்வையிடவும்.

 

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் RPC...
இலங்கையில் ஜரிகை பாரம்பரியம் மற்றும் 20...
GSCS International Ltd, with a...
Driving global change: GSCS International...
South Asia’s 1st AI-Based Hospital...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
Sampath Bank Partners with Symphony...