Samsung இன் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சி வரிசை மலிவு விலையில் சந்தையில் அறிமுகம்

Share

Share

Share

Share

Samsung Sri Lanka நிறுவனம் தனது 2025 ஆம் ஆண்டுக்கான புதிய தொலைக்காட்சி வரிசையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய வரிசையில் சிறிய HD திரைகள் முதல் அதிநவீன 8K காட்சித் திரைகள் வரை இந்த புதிய தொலைக்காட்சிகள் உயர்தர வடிவமைப்பு, AI தொழில்நுட்பம் மற்றும் நியாயமான விலையில் வழங்கப்படுகின்றன. அனைத்து விலை நிலைகளிலும் உள்ள இந்த தொலைக்காட்சிகள் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.

இன்றைய நவீன குடும்பங்களின் மாறிவரும் பொழுதுபோக்கு தேவைகளை கருத்தில் கொண்டு, Samsung Sri Lanka நிறுவனம் சிறிய அளவிலான மூன்று புதிய தொலைக்காட்சி மாதிரிகளை வெளியிட்டுள்ளது. 32” HD தொலைக்காட்சி 64,999 ரூபா விலையிலும், மேம்பட்ட ஸ்ட்ரீமிங் செயலிகள் (streaming apps) மற்றும் குரல் கட்டுப்பாடு வசதிகளுடன் கூடிய 32” HD ஸ்மார்ட் தொலைக்காட்சி 74,999 ரூபா விலையிலும் சந்தையில் கிடைக்கின்றன. பெரிய குடும்பங்களுக்காக 43” FHD ஸ்மார்ட் தொலைக்காட்சி 1,34,999 ரூபா விலையில் வழங்கப்படுகிறது. இந்த புதிய மாதிரிகள் குறைந்த இடப்பரப்பில் நவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளனமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

Samsung Sri Lanka-வில் அனைவருக்கும் உயர்தர தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்வதில் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. 32” மற்றும் 43” புதிய மாதிரிகள் இலங்கையில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் ஸ்மார்ட் வாழ்க்கை முறையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்ம தொலைக்காட்சிகள் நம்பகத்தன்மை, நுண்ணறிவு மற்றும் அழகான வடிவமைப்புடன் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கின்றன.

2025 Samsung தொலைக்காட்சிகளின் சிறப்பம்சம் அனைத்து மாதிரிகளிலும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. AI படத் தொழில்நுட்பம் ஒவ்வொரு காட்சியையும் தானாக மேம்படுத்தி, கூர்மையான மாறுபாடு, ஆழமான நிறங்கள் மற்றும் சிறந்த விபரங்களை வழங்குகிறது. தகவமைக்கும் ஒலி (Adaptive Sound) அமைப்பு நீங்கள் பார்க்கும் விளையாட்டாக இருந்தாலும், திரைப்படமாக இருந்தாலும், அல்லது செய்திகளாக இருந்தாலும் நிகழ்ச்சிக்கு ஏற்ப தானாகவே சரிசெய்யப்படுகிறது. செயலில் உள்ள குரல் பெருக்கி (Pro) தொழில்நுட்பம் சத்தமான சூழல்களிலும் உரையாடல்களை தெளிவாக கேட்க உதவுகிறது.

Samsung தனது குரல் கட்டுப்பாட்டு அமைப்பை (voice control ecosystem) மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இப்புதிய தொழில்நுட்பம் பல மொழிகளை ஆதரிக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் Bixby அல்லது SmartThings செயலி வழியாக இயல்பான குரல் கட்டளைகளைப் பயன்படுத்தி தொலைக்காட்சியை இயக்கலாம், உள்ளடக்கத்தைத் தேடலாம் மற்றும் அமைப்புகளை மாற்றலாம். இப்புதிய குரல் கட்டுப்பாட்டு அமைப்பு, வாடிக்கையாளர்களுக்கு கைகளால் தொடாமலேயே தொலைக்காட்சியை இயக்கும் உள்ளுணர்வான, நவீனமான மற்றும் அனைவருக்கும் ஏற்ற அனுபவத்தை வழங்குகிறது.

Samsung இன் உயர்தர தொலைக்காட்சிகள் பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. கிரிஸ்டல் UHD தொலைக்காட்சிகள் (43” முதல் 85” வரை) 174,999 ரூபா முதல் தொடங்குகின்றன. 4K தெளிவுத்திறனுடன் வருகின்றன. QLED 4K மாதிரிகள் (55” முதல் 75” வரை) 374,999 ரூபா முதல் கிடைக்கின்றன. சிறந்த பிரகாசம் மற்றும் மாறுபாட்டுடன் வருகின்றன. மிகவும் மேம்பட்ட 85” நியோ QLED 8K தொலைக்காட்சி 2,399,999 ரூபா விலையில் கிடைக்கிறது. நவீன AI செயலிகள் மற்றும் வயர்லெஸ் 8K பரிமாற்ற வசதியுடன் உயர்தர காட்சி அனுபவத்தை வழங்குகிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Samsung இன் OLED தொலைக்காட்சிகள் 55” மற்றும் 65” அளவுகளில் 1,024,999 ரூபா முதல் கிடைக்கின்றன. இவை சிறந்த கருப்பு நிறம் மற்றும் மாறுபாட்டிற்கான சுய ஒளிரும் பிக்சல் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. மேலும், The Frame TV 65” அளவில் 899,999 ரூபா விலையில் கிடைக்கிறது. இது தனிப்பயனாக்கக்கூடிய விளிம்புகள் மற்றும் Art Store அணுகலுடன் தொலைக்காட்சியை கலைப் படைப்பாக மாற்றுகிறது. தொழில்நுட்பத்தையும் உள்ளக வடிவமைப்பையும் சிறப்பாக இணைக்கும் இந்த தொலைக்காட்சி, உங்கள் வீட்டிற்கு ஒரு தனித்துவமான அழகை சேர்க்கிறது.

Samsung இன் 2025 தொலைக்காட்சிகள் வெறும் செயல்திறன் கொண்டவை மட்டுமல்ல, அவை அழகிய கலைப்பொருட்களாகவும் (statement pieces) வடிவமைக்கப்பட்டுள்ளன. மிக மெல்லிய வடிவமைப்பு, உலோக சட்டகம், மற்றும் விளிம்புகள் இல்லாத திரைகளுடன், இவை நவீன வரவேற்பறை, படுக்கையறை அல்லது பணியிடம் போன்ற எந்த இடத்திலும் அழகாக பொருந்துகின்றன. பிரகாசமற்ற காட்சிகள் முதல் Knox பாதுகாப்பு அமைப்பு வரை, ஒவ்வொரு அம்சமும் பயனர் வசதி, பாதுகாப்பு மற்றும் அழகுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

2025 Samsung தொலைக்காட்சி வரிசையில் உள்ள அனைத்து மாதிரிகளும் தற்போது இலங்கை முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாக கிடைக்கின்றன. கவர்ச்சிகரமான தவணை முறை வசதிகள், விரிவான விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் புத்தாக்கத்தின் பாரம்பரியத்துடன், Samsung இலங்கை வீடுகளில் தொலைக்காட்சி அனுபவத்தை மறுவடிவமைப்பதில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.

Softlogic Life Grows 29% with...
TikTok Launches Time and Well-being...
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஒருங்கிணைந்த நியமன இயக்கத்துடன்...
Sri Lanka Targets Inclusive Economic...
2025 SLIM ජාතික විකුණුම් සම්මාන...
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில்...
ශ්‍රී ලංකාවේ ක්ෂුද්‍ර, සුළු හා...
සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில்...
ශ්‍රී ලංකාවේ ක්ෂුද්‍ර, සුළු හා...
සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
Global Talent Competes to Solve...