Samsung Sri Lanka ஆனது 35% வரையிலான விலைக் கழிவுடன் ‘Wowrudu Wasi’ எனும் புத்தான்டு விற்பனை மேம்படுத்தலினை அறிமுகப்படுத்துகின்றது

Share

Share

Share

Share

Samsung Sri Lanka ஆனது இவ்வாண்டிற்கான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தான்டு விளம்பரம் தொடர்பாக அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றது ‘Samsung Wowrudu Wasi’ ஆனது மார்ச் 4 தொடக்கம் ஏப்ரல் 30 வரை, அனைத்து வாடிக்கையாளர்களும், சமீபத்திய தொழில்நுட்பத் தயாரிப்புகளினை ஒப்பிட முடியா விலையில் அனுபவிக்க வாய்ப்பினை வழங்குகின்றது. Samsung பாவனையாளர்கள் Samsung இன் பல்வேறு வகையான சாதனங்களினை 35% வரையிலான விலைக் கழிவுடன் அனுபவிக்க முடியும். ஆம் நீங்கள் ஒரு புதிய தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம் அல்லது நுண்கதிர் அலை வெப்ப அடுப்பு என்பனவற்றினை கொள்வனவு செய்ய ‘Samsung Wowrudu Wasi’ ஆனது உங்களுக்கு வாய்ப்பினை வழங்குகின்றது. இது தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தமது வீட்டு உபகரணங்களினை மேம்படுத்துவதற்கும் முன்னெப்போதும் இல்லாத வகையினில் புதுமைகளினை அனுபவிப்பதற்கு இதுவே சரியான தருணமாகும்.

Samsung Sri Lanka வின் முகாமைத்துவப் பணிப்பாளராகிய SangHwa Song அவர்கள் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துகையில் கூறியதாவது ‘Samsung Wowrudu Wasi’ புத்தான்டு விளம்பரமானது பாரம்பரியத்தினையும் அதிநவீன தொழில்நுட்பத்தினையும் ஒன்றிணைக்கின்றது. அதிசிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளினை வழங்குவதற்கான எமது உறுதிப்பாட்டினை இது வலியுறுத்துன்கிறது. வாடிக்கையாளர்கள் யாவரும் Samsung இன் சிறந்த இணையற்ற விலையில் இத்தயாரிப்புகளினை அனுபவிக்க முடியும். எதிர்கால தொழில்நுட்ப சகாப்தத்தினை நோக்கிய இப்பயணத்தில் எம்முடன் பயணிக்க எமது வாடிக்கையாளர்கள் யாவரையும் வரவேற்கின்றோம், எமது ஒவொரு தயாரிப்புகளும் எமது உறுதியான அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கின்றன” எனக்கூறினார்.

தொலைக்காட்சித் துறையினில் முன்னணி நிறுவனமாக விளங்கும் Samsung நிறுவனமானது, கடந்த 18 வருடங்களாக உலகின் முன்னணி தொலைக்காட்சித் தயாரிப்பாளராக தனது மதிப்புமிக்க நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. HD தொடக்கம் 4K வரை QLED தொடக்கம் 8K வரை பரந்த அளவிலான தெரிவுகளினை வழங்குவதன் மூலம், Samsung தொலைக்காட்சிகள் யாவும் சகல வாடிகையாளர்களினதும் விருப்பங்களினைப் பூர்த்தி செய்கின்றன, AirSlim வடிவமைப்பு, Quantum Dot தொழில்நுட்பம், Remote அணுகல் மற்றும் திரை பகிர்வு போன்ற அதிநவீன அம்சங்கள் யாவையும் தன்னகத்தே கொண்டுள்ளன, இது TV நிகழ்ச்சிகளினைக் கண்டுகளிக்கும் அனுபவத்தைதினை இன்பகரமாக்குகின்றது. QLED தொழில்நுட்பத்தின் மூலம், அதன் பாவனையாளர்கள் இணையற்ற நேர்த்தியான வர்ணம், நுண்ணோக்கிய துல்லியம், மேம்படுத்தப்பட்ட பிரகாசம் மற்றும் ஆழமான பட்டுக் கருப்பு என்பன இவற்றுள் அமையப் பெற்றுள்ளன. Neo QLED 8K TVகளினைக் கொள்வனவு செய்யும் அதன் பாவனையாளர்கள் 03 வருட உத்தரவாதத்தினையும், no screen burn-in அடிப்படியில் 10 வருட ஆண்டு உத்தரவாதத்தினையும் பெறுவர், இவை வாடிக்கையாளர்களின் பொழுதுபோக்கு அனுபவங்களினை மென் மேலும் இன்பகரமாகும்.

குளிர்சாதனப்பெட்டிகளினைப் பொறுத்தவரையில், Digital Inverter Compressor களுக்கு ஆச்சரியப்பட வைக்கும் 20 வருடம் உத்தரவாதத்தினை Samsung ஆனது வழங்குகின்றது. Twin Cooling Plus தொழில்நுட்பத்துடன், புத்துணர்ச்சியானது நீடிக்கப்படுகின்றது, மேலும் SpaceMax குளிர்சாதன பெட்டிகளில் வெளிப்புற பரிமாணங்களை விரிவாக்காமல் சேமிப்புத் திறனானது மேம்படுத்தப் பட்டுள்ளது. Samsung’s Digital Inverter Technology ஆனது மின்னாற்றல் வினைத்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கின்றது, அதே வேளையில் Power Freeze/Power Cool போன்ற செயல்பாடுகள் விரைவான குளிரூட்டும் செயல்திறனை வழங்குகின்றன, இது இலங்கை முழுவதிலும் இருக்கக்கூடிய இல்லங்களில் வசதியினையும் ஆச்சரியத்தினையும் ஏற்படுத்துகின்றது.

“நம்பகமான ஆயுட்காலம் கொண்ட நிலையான வீட்டு உபகரணப் பொருட்கள், தற்போது 20 வருட உத்தரவாதத்துடன் யாவருக்கும் கிடைக்கின்றன. சந்தையில் இத்தகைய விரிவான பாதுகாப்பினை வழங்கும் ஒரே ஒரு பிராண்டாக Samsung உள்ளது”.

மேலுமாக, Samsung இன் சலவை இயந்திர வரிசையில் சுகாதாரம் மற்றும் பயன்பாட்டின் எளிமை என்பனவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது. Digital Inverter Motor இற்கு நீண்ட காலப் பாவனைக்கான உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் WIFI மற்றும் Smart Things பயன்பாட்டு ஆதரவு, AI யின் முகாமைத்துவம், Eco Bubble தொழில்நுட்பம், Diamond Drum மற்றும் Steam Wash போன்ற அம்சங்கள் மதிநுட்பமும் ஆற்றலும் மிக்க சலவைக்கான தீர்வுகளை வழங்குகின்றன. சமையலறைகளில் புதுமைகளையும் புரட்சிகளையும் ஏற்படுத்தும் , Samsung இன் Convection-32L நுண்கதிர் அலை வெப்ப அடுப்பு, வறுவல் உணவு வகைகளினைத் தயாரிக்க Slim Fry மற்றும் ஆரோக்கியமான சமையலுக்கு Wide Grill போன்ற அம்சங்களோடு சமையலறைகளில் சமையல்ப் புரட்சியினை உண்டாக வருகின்றது.

“Samsung Wowrudu Wasi” என்பது வெறும் விற்பனை மேம்படுத்தல் மட்டும்மல்ல, அதோடுகூட அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கான ஓர் வாய்ப்புமாகும். Samsung இன் புதுமைப் பாரம்பரியம் தயாரிப்பு மேம்பாட்டுக்கு அப்பாலும் சென்று, வாடிக்கையாளர்களின் வாழ்க்கையினை மேம்படுத்தும் முழுமையான தீர்வுகளை வழங்குவதை உள்ளடக்கியது. நுகர்வோரின் தேவைகளினை மற்றும் அவசியங்களினை முன்கூட்டியே அறிந்து, அவர்களின் வாழ்க்கை முறையில் தடையின்றி ஒருங்கிணைக்கும் தீர்வுகளை வழங்குவதில் Samsung ஆனது கவனம் செலுத்துகின்றது.

Samsung Sri Lanka ஆனது அதிநவீன தயாரிப்புகளினையும் மற்றும் சேவைகளினையும் வழங்குவதற்கு என்றே தன்னை தக்கவைத்து அர்ப்பணித்துக் கொண்ட ஓர் முன்னணி தொழில்நுட்ப வழங்குனராகும். புதுமையின் வலுவான மரபு மூலம், Samsung ஆனது தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்தும் புதிய தரநிலைகளைப் படைப்பதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிடமுடியாத அனுபவங்கயும் சேவைகளையும் வழங்குகின்றது.

Samsung Consumer Electronics தயாரிப்புகள் நாடு முழுவதிலும் அமைந்திருக்கும் electronic உபகரண விநியோகஸ்தர்களிடம் மேற்கூறிய தள்ளுபடியுடன் கொள்வனவு செய்ய முடியும்.

 

HNB, එතෙර කාසියෙන් රට බබලන්නට...
මෙරට වාරි ප්‍රතිසංස්කරණ ඉතිහාසයේ සුවිශේෂී...
இலங்கையின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கும் TikTok
MCA- C பிரிவு NDB கிண்ண...
ඔස්ට්‍රේලියානු රජයේ ජාතික සැලසුම් හේතුවෙන්...
Kaspersky expands Global Transparency Initiative...
Planters’ Association of Ceylon welcomes...
Navigating new EU sustainability and...
Kaspersky expands Global Transparency Initiative...
Planters’ Association of Ceylon welcomes...
Navigating new EU sustainability and...
ශ්‍රී ලංකාවේ අභිනව නායකත්වයට සුබ...