SGG App இனைப் பயன்படுத்தி Samsung மற்றும் UNDP ஆகியவை 2030 ற்கான நிகழ்ச்சி நிரலைத் தயார் செய்கின்றன

Share

Share

Share

Share

COVID-19 ஆனது இப் புவியில் வாழ்ந்து வரக்கூடிய எமது சமூகத்திற்கு முன்னொருபோதுமே நிகழ்ந்திராத மோசமான சவால்களைக் கொண்டு வந்துள்ளது.  அது மட்டும் அல்லாது 2015 முதற்கொண்டு அடைந்து வந்த முன்னேற்றங்களையும் மிகவும் பாதித்துள்ளது.  Samsung மற்றும் UNDP என்பன 2030 ற்கான நிகழ்ச்சி நிரலை முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்கான பாதையில் தமது முழு கவனத்தையும் முடுக்கி விட்டுள்ளது. மேலும் அவை புதுமைகாண் கூட்டாண்மை பொறுப்புகளைத் திரட்டுவதோடு மட்டுமின்றி இப்புதிய சவால்களை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு கூட உலகளாவிய  இலக்குகளின் சாதனைகளையும் கூட விரிவுபடுத்துகிறது.

2019 ஆம் ஆண்டில் Samsung மற்றும் UNDP கூட்டாண்மையானது ஆரம்பித்து வைக்கப்பட்டதிலிருந்து, UNDP ஆனது Samsung இன் தற்போதைய வளர்ச்சிப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் விழிப்புணர்வையும் மற்றும் நிதியையும் திரட்ட புதுமைகாண் தொழிநுட்பங்களையும்  பயன்படுத்தியது. Samsung Global Goals (SGG) App ஆனது 2030 இற்கான நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்  காட்டுவதில்  தனித்துவமானது,  ஏனெனில் இது நிதி உருவாக்கத்தினை மேற்கொள்ளும்போது உலகளாவிய ரீதியில் இலக்குகளை அடைவது தொடர்பாக மிகவும் எளிய வழிகளை வழங்குகிறது. ஏறத்தாழ நான்கு வருடங்களுக்கு முன்பாக SGG App ஆனது தொடங்கி வைக்கப்பட்ட  நாளிலிருந்து UNDP ஆனது புதிய மற்றும் எப்போதும் பெருகிக் கொண்டே இருக்கும் அதன் அங்கத்தினர்களுக்கு வாய்ப்பினை வழங்கிய வண்ணமே இருக்கிறது. இது  தற்போது உலகம் பூராகவும் 300 மில்லியனுக்கும் அதிகமான சாதனங்களில் நிறுவப்பட்டுள்ளதோடு அது 89 மொழிகளிலும் கிடைக்கப் பெறுகிறது, ஆனால் இந்தியாவில் மட்டும் இது ஓர் முழுமையான தனிப்பயனாக்கப்பட்ட பதிப்பாகக் கிடைக்கிறது.

SGG பயன்பாட்டிற்கான தயாரிப்பு மேம்பாட்டிற்கான Samsung தயாரிப்பு நிர்வாகத்தின் மூத்த இயக்குனர் Sergey Lossev கூறுகிறார்:  “தொழிநுட்பமானது நெருக்கடிகளில் இருந்து நம்மை மேம்படுத்த உதவுவதோடுகூட, முன்னேற்றத்தைத் தூண்டுவதற்கும் மற்றும் ஒரு சமூகமாக நாம் சிறப்பாகச் செயல்ப்படவும் அது துணை புரிகிறது. இயன்றவரை அநேகர் கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்ளவும் அவை தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கவும் சம அளவிலான பாரிய தகவல்த் தொடர்பு முறை வழிகளை உருவாக்குவதுமான இலட்சியங்களை நாடுவதும் இதன் நோக்காகும். உலகில் அதிகமாக விநியோகிக்கப்படும் Charity App இன் பயன்பாட்டை உருவாக்குவதன் மூலமாக,  சரியான திக்கில் நடவடிக்கை எடுத்துள்ளோம், அத்தோடு இதன் பயன்பாட்டின் வரம்பை அதிகரிக்க  மென்மேலும் அதிக வாய்ப்புகள் உள்ளன. நன்கொடைகளை மட்டும் கேட்பதை விட, ஒரு சிறந்த நோக்கத்திற்காக சில வினாடிகள் கவனம் செலுத்துமாறு மக்களைக் கேட்பது மிகவும் உன்னதமானதாகும்”. மேலும் அவர் கூறினார் “உலகளாவிய இலக்குகளை அடைவதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், ஏனெனில் தொழிநுட்பத்தில் கண்டுபிடிப்புகள் தீர்வுகளை அளவிட உதவுகின்றன.

SGG App இன் வெற்றிச் சாதனையை முன்னெடுத்துச் செல்லும் முகமாக, Generation 17 Youth Innovative ஆனது எண்ணத்தில் தோற்றம் பெற்று பின்பு செயல்வடிவம் பெற்றது. இதன் பயனாக 2020 தொடக்கம் முழுமையாக செயல்படும், சர்வதேச இலக்குகளில் இளைஞர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பானது பெருமிதத்தோடு அரங்கேற்றி வைக்கப்பட்டது.  இப் புதிய முயற்சியானது 14 இளம் தலைவர்களின் குரல்களை உலகெங்கிலும் உயர்த்தி  அவர்களின் சமூகங்களில் பாரிய பயனுள்ள தாக்கங்களை  ஏற்றப்படுத்தியுள்ளது. உத்வேகம் தரும் வண்ணம் இம் மாற்றத்தை உருவாக்கும் இவ் இளைஞர்களின் பணியானது எமது சமூகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மட்டங்களிலும் உள்ள ஒவொருவராலும் முழுமையாக ஆதரிக்கப்பட வேண்டும். குறிப்பாக, அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான கூட்டாண்மையானது இளைஞர் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் புதிய முயற்சிகளில் சிறந்த சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samsung உடனான UNDP யின் பணியானது, வலுவான மற்றும் தனித்துவமான புதுமையான Digital கூட்டாண்மை எவ்வாறு வெளிப்படும் என்பதைத் தெளிவாக்க காட்டியுள்ளது. Samsung ஆனது அண்மையில் மேற்கொண்ட அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி, 10 Million அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பங்களிப்புகளின் மைல்கல்லை எட்டியதை நாங்கள் ஒன்றாகக் கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும் இவ் அபரிமிதமான வளர்ச்சியானது எம் உலகத்தையே உறுதிவாய்ந்த அடுத்த கட்டதிற்கே இட்டுச் செல்லப்போகிறது.

இந்த புத்தாக்கம் சார்ந்த லட்சியங்களை மனதிற் கொண்டு, நாம் மென்மேலும் கட்டியெழுப்பக்கூடிய வலுவான கூட்டாண்மையைக் கண்டறிந்துள்ளோம். நாங்கள் இன்னும் இடை நடுவிலேயே இருக்கிறோம். Samsung உடன் இருப்பதானது   பயனுள்ள தாக்கத்தினை உண்டாக்க கூடிய கூட்டாண்மைகள் அத்தோடு எம் அனைவருக்கும் ஒளிமயமான, நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை நிச்சயம் சாத்தியமாக்கும்.

Generation 17 ஆனது 18 முதல் 32 வயதிற்குட்பட்ட இளம் தலைவர்களின் குழுவை ஆதரிக்கிறது, இவ் ஆதரவானது மனிதகுலத்திற்காக புதுமைகளை உருவாக்குவதற்கும் உலகளாவிய சமூகங்களை அணிதிரட்டுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இம் முன்முயற்சியைப் பற்றி மேலுமாக  அறிந்துகொள்ள  Generation 17 ஆனது,  இளம் தலைவர்கள்,  தொலைநோக்கு பார்வையாளர்கள், வக்கீல்கள்  மற்றும் மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் தொழில்முயற்சியாளர்கள் போன்றோர் ஒன்றாக சந்திக்கவும், உரையாடவும்   Generation 17.undp.org ஐப் பார்வையிட முடியும்.

எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உங்களுக்கு சேவை வழங்க நாம் எவ்வேளையிலும் காத்திருக்கிறோம். Samsung Galaxy Smartphone னை கொள்வனவு செய்ய நீங்கள் தீர்மானிக்கும் போது கூடவே நீங்கள் மனநிறைவையும் அனுபவிப்பீர்கள் என்பதையும் நினைவில் வையுங்கள். உங்களுக்கு ஏதேனும் மேலதிக உதவிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எங்கள் Helpline ஆனது நீங்கள் முகம்கொடுக்க கூடிய அனைத்துப் பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுகிறது. Samsung Members App ல் இருக்கக்கூடிய Interactive Diagnostics and Optimization ஆனது    உங்கள் Device களின் செயற்றிறனை இன்னும் அதிகரிக்கிறது.

இலங்கையில் Samsung ஆனது தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக ‘Most Loved Electronics Brand’என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று Brand Finance Lanka வின் மதிப்பாய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்தோடு குறிப்பாக Gen Z மற்றும் Millennial பிரிவுகளில், No.1 Smart Phone Brand டாக, Samsung ஆனது இலங்கையில் அனைத்து வயதினரையும் உட்படுத்திய Customer Base எனவும்   அறியப்பட்டுள்ளது.

தகுதியற்ற உள்ளடக்கத்திலிருந்து உயர்ந்த பாதுகாபை வழஙகும்...
வாகன நிதித்துறையில் புரட்சியை ஏற்படுத்த UNIMO...
உங்களது வங்கி விருப்பத்திற்கேற்ப ‘HNB Self-onboarding’ஐ...
Kaspersky Safe Kids proves superior...
Samsung Unveils Galaxy M14 LTE...
Dipped Products Accelerates Global Expansion...
HNB Finance இன் “ஊக்குவிக்கும் அபிவிருத்தி...
புகைப்பட தலைப்பு | உலக சுற்றுச்சூழல்...
Dipped Products Accelerates Global Expansion...
HNB Finance இன் “ஊக்குவிக்கும் அபிவிருத்தி...
புகைப்பட தலைப்பு | உலக சுற்றுச்சூழல்...
HNB රථ වාහන ෆිනෑන්ස් සේවාවේ...