SLIM தேசிய விற்பனை விருது 2025 நிகழ்வில், பன்முகப்படுத்தப்பட்ட வணிகக் குழுமமான Sunshine Holdings PLC நிறுவனமானது, தமது விற்பனைக் குழுக்களின் 21 உறுப்பினர்கள் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டதுடன், அவர்கள் 7 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் மற்றும் 2 சிறப்புத் தகுதிகள் உள்ளிட்ட விருதுகளை வென்றனர்.
போட்டி நிறைந்த வணிகச் சூழலில் விற்பனைக் குழுக்கள் மிகவும் விலைமதிப்பற்றவையாக மாறியுள்ளன. அவை தயாரிப்புகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் ஒரு பாலமாகச் செயல்படுகின்றன. அத்துடன், வர்த்தக நாமங்களின் தூதுவர்களாகவும், வாடிக்கையாளர் உறவுகளின் பாதுகாவலர்களாகவும், மற்றும் வணிகங்களின் வளர்ச்சியூக்கிகளாகவும் முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில், விற்பனைக் குழுக்களின் விதிவிலக்கான முயற்சிகள், இலங்கை நிறுவனங்கள் எதிர்கொண்ட கடினமான Macro பொருளாதார நிலைமைகளுக்கு முகம்கொடுக்க உதவியுள்ளன.
இத்தகைய சூழலில், சன்ஷைன் கன்ஸ்யூமர் லங்கா மற்றும் சன்ஷைன் ஹெல்த்கேர் லங்கா (மருந்துகள், மருத்துவ சாதனங்கள், லினா உற்பத்தி, ஹெல்த்கார்ட் சில்லறை விற்பனை மற்றும் ஹெல்த்கார்ட் விநியோகம்) ஆகியவற்றின் விற்பனைக் குழு உறுப்பினர்கள் வென்ற விருதுகள் அவர்களின் அர்ப்பணிப்புக்கும் மீள்திறனுக்கும் சான்றாக அமைகின்றன. மேலும், ஒவ்வொரு உறுப்பினரின் உணர்வுகள், துணிச்சல் மற்றும் விடாமுயற்சி ஆகியவை, கடுமையான போட்டி மற்றும் நிலையற்ற சந்தை சூழ்நிலைகளில் விற்பனையை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்மாதிரியான செயல்திறனை உறுதி செய்துள்ளன.
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் இந்தச் சாதனைகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், “SLIM தேசிய விற்பனை விருதுகள் 2025 நிகழ்வில் சிறந்து விளங்கிய, சன்ஷைன் ஹோல்டிங்ஸில் உள்ள எங்கள் விற்பனைச் சாதனையாளர்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். அவர்களின் இந்தச் சாதனைகள், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மீள்திறனைப் பிரதிபலிக்கின்றன. இந்த விருதுகள் தனிப்பட்ட சிறப்பை அங்கீகரிப்பதுடன், எங்கள் வணிகங்களை முன்னோக்கி செலுத்தும் கூட்டு பலத்தை எடுத்துக்காட்டுகின்றன. அத்துடன் இந்த அங்கீகாரமானது சிறப்புமிக்க வணிக கலாசாரத்தை வளர்ப்பதற்கான எமது உறுதியை மீண்டும் ஸ்திரப்படுத்தியுள்ளது. சன்ஷைன் ஹோல்டிங்ஸின் வெற்றிக்குக் காரணமான, எங்கள் விற்பனைக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரின் சிறப்பான செயல்திறன் மற்றும் பங்களிப்புக்காக எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவித்தார்.
சவாலான சந்தை நிலவரங்களில் வணிகத்தை முன்னெடுத்துச் செல்லும் திறன், பயனுள்ள உத்திகள் மூலம் இலக்குகளை அடைதல், புத்தாக்கத்தை வெளிப்படுத்துதல் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கண்காணிப்புக் குழுவினால் போட்டியாளர்கள் மதிப்பிடப்பட்டனர். முன்னணி பணியாளர்களும் முகாமையாளர்களும் செயல்திறன் மற்றும் வாழ்க்கை வளர்ச்சி அடிப்படையில் மதிப்பிடப்பட்டனர். பிரதேச முகாமையாளர்கள் தங்கள் பிரதேசங்களில் விற்பனை வளர்ச்சி, சந்தை விரிவாக்கம் மற்றும் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். வலய விற்பனை முகாமையாளர்கள் வர்த்தகத் திட்டங்களில் வர்த்தக நாமம் மற்றும் வகை கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் திறன், குழுக்களை பயனுள்ள முறையில் வழிநடத்துதல் மற்றும் முற்றுமுழுதான வணிக முடிவுகளை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக 23 ஆண்டுகளாக நடத்தப்படும் SLIM தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வு, நிறுவனங்களின் அதிக செயல்திறன் கொண்ட விற்பனைப் பணியாளர்களின் சிறப்பான முயற்சிகள் மற்றும் விற்பனைச் சகோதரத்துவத்தில் அவர்களின் சாதனைகளுக்காக அவர்களுக்கு சன்மானங்களை வழங்கி, அவர்களை தேசிய அளவில் அங்கீகரிக்கிறது. தெற்காசியாவின் சிறந்த விருதுத் திட்டமாக இதனை நிலைநிறுத்துவதன் மூலம், விற்பனை நிபுணர்களை உலகத் தரத்திற்கு இணையாக அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.



