South Asia Textilesஇனால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘MIDNIGHT’ இயற்கை சாயத்திற்கு உலகிலும் உள்ளூரிலும் சிறந்த வரவேற்பு

Share

Share

Share

Share

Hayleys Fabric PLCஇன் துணை நிறுவனமான South Asia Textiles (Pvt) Ltd. (SAT), Biomass நிலக்கரி கழிவுகளிலிருந்து பெறப்பட்ட இயற்கையான சாயங்களைக் கொண்ட புத்தாக்கமான ஜவுளி வகைகளான ‘Midnight by Charcoal’ மூலம் உலகளாவிய மற்றும் உள்ளூர் பேஷன் துறையில் பெரும் எழுச்சியை உருவாக்குகிறது.

உலகின் மிகவும் புத்தாக்கமான, நிலையான, உயர்-செயல்திறன் கொண்ட துணிகளைக் கண்டறிந்து காட்சிப்படுத்துவதற்கான முன்னணி ஜெர்மன் தளமான ISPO Munichஇல், Street Sports பிரிவில் சிறந்த 10 புத்தாக்கங்கள் பிரிவில் இடம் பிடித்த பின்னர், SAT இன் ‘MIDNIGHT’ ரேஞ்ச் புதிய சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது. கடந்த ஆண்டில் இது இரண்டாவது தடவையாக இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஜவுளி சாயங்களில் சிறந்த புத்தாக்கமான ISPO மற்றும் Hayleys Fabric குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

உள்நாட்டில், ‘MIDNIGHT’ புத்தாக்கம், சமீபத்தில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Best Corporate Citizen Sustainability Awards 2022 (BCCSA) விருது வழங்கும் நிகழ்வில், சிறந்த திட்டங்களின் நிலைத்தன்மை விருதை வென்றது.

“Hayleys Fabric மற்றும் South Asian Textilesஇல் உள்ள ஒட்டுமொத்த குழுவும் எங்கள் Fabric சாயமான ‘MIDNIGHT by Charcoal’ அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கிடைத்த நேர்மறையான பிரதிபலிப்புகளால் கௌரவிக்கப்படுகிறது. இத்தகைய இயற்கையான ஆதாரமான, சுற்றுச்சூழல் நட்பு புத்தாக்கங்கள் அடுத்த தலைமுறை நிலையான ஜவுளிகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் நோக்கத்திற்கு இணங்க: அனைவருக்கும் சிறந்த சூழலை ஒன்றிணைப்பதன் மூலம் சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த, இந்த தீர்வுகள் உலகளாவிய நவநாகரீக துறையில் ஒரு புதிய முன்னுதாரணத்தை செயல்படுத்துகின்றன” என Hayleys Fabric இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஹான் குணதிலக்க கூறினார்.

இந்த ஆண்டு BCCSA இல் வெற்றி பெற்ற ஒரேயொரு ஜவுளி உற்பத்தியாளர் SAT என்பது குறிப்பிடத்தக்கது, இது இலங்கையின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் உயர்தர தளமாக கருதப்படுகிறது.

Hayleys குழுமத்தின் ஜவுளி உற்பத்தித் துறையில் முன்னோடியாக இருக்கும் நிலையான புத்தாக்கங்கள், Hayleys Lifecodeஇல் வகுக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் இலக்குகளுக்கான பரந்த அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும். நிறுவனத்தின் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஜவுளி சாயங்கள் முன்னிலையில் இருப்பதற்கு காரணம் Hayleys Fabric PLCஇன் நிலைத்தன்மை மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் பொறுப்பான உற்பத்திக்கான முன்னோடி லியோனி வாஸ்.

“நவநாகரீக தொழில் ஒரு பெரிய சுற்றுச்சூழல் தடத்துடன் தொடர்புடையது என்றாலும், Hayleys Fabric நிறுவனத்தில் முன்னோடியாக இருக்கும் நிலையான புத்தாக்கங்கள் உலகளவில் நவநாகரீகத்திற்கான உண்மையான வட்ட மாதிரிக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். செயற்கை சாயங்களிலிருந்து இயற்கையான சாயங்களுக்கு நாம் மாறினால், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 36% வரை குறைக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

“இது சுற்றுச்சூழலுக்கு மகத்தான நேர்மறையான தாக்கங்களைக் கொண்டுள்ளது, குறிப்பாக இயற்கை சாயத்திற்கான உலகளாவிய சந்தை 2024 க்குள் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உண்மையான நேர்மறையான தாக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய வர்த்தக நாமங்களை ஆதரிப்பதிலும் வெகுமதி அளிப்பதிலும் உண்மையான ஆர்வமுள்ள புதிய தலைமுறை உணர்வுள்ள நுகர்வோரால் இந்த வளர்ச்சி உந்தப்படுகிறது.” என தெரிவித்தார்.

Hayleys Fabric PLC ஆனது இலங்கையில் ஜவுளி உற்பத்தியில் ஒரு முன்னோடியாகும், இது வடிவமைப்பிலிருந்து உற்பத்தி வரை முழுமையான தீர்வுகளை வழங்கும் திறன் கொண்டது மற்றும் 2003 இல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் ஆடைத் துறை நிறுவனமாகும். மாதம் ஒன்றுக்கு 4.5 மில்லியன் மீட்டர் துணி உற்பத்தித் திறனைப் நிர்வகிக்கும் இந்நிறுவனம், நைக், விக்டோரியாஸ் சீக்ரெட், கால்வின் க்ளீன், டாமி ஹில்ஃபிகர், டெகாத்லான், நெக்ஸ்ட், பிவிஹெச், ஆசிக்ஸ் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற நவநாகரீக, ஆடைகள் மற்றும் Accessories வர்த்தக நாமங்களுக்கு முன்னணி பங்குதாரராக உள்ளது. PINK Intimissimi, Marks மற்றும் Spenser மற்றும் Calzedonia.

Hayleys Fabric PLC இன் துணை நிறுவனமான South Asia Textiles, ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. நிறுவனம் 2004 இல் தனது வணிக நடவடிக்கைகளைத் ஆரம்பித்தது மற்றும் பின்னல், சாயமிடுதல், நிறைவு செய்தல், அச்சிடுதல், உட்பட பல செயற்பாடுகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

Hayleys Fabric மற்றும் SAT ஆகிய இரண்டும் Greemjpise Gas (GHG) உமிழ்வைக் குறைப்பதற்கான Science-Based Targets initiativesஇல் (SBTi) கையொப்பமிட்டுள்ளது மற்றும் 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக புவி வெப்பமடைதலை 1.5 ° C ஆகக் கட்டுப்படுத்துகிறது. SAT அண்மையில் ISO 14001 மற்றும் ISO 45001 சான்றிதழ்களை அதன் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு இணையாக உயர்த்தியமை குறிப்பிடத்தக்கது.

ගාල්ල රසවත් කළ Coke Food...
2024 ஆம் ஆண்டில் 5% ஏற்றுமதி...
HNB ත්‍රෛභාෂා ජංගම දුරකතන යෙදවුමක්...
Global Expansia 1.0: AIESEC Kelaniya...
JAAF මෙරට ඇඟලුම් ක්ෂේත්‍රයේ රැකියා...
ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியில் “Yalu Daskam”...
Renowned Global Experts to Inspire...
Sri Lanka Apparel achieves 5%...
ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியில் “Yalu Daskam”...
Renowned Global Experts to Inspire...
Sri Lanka Apparel achieves 5%...
Softlogic Life to introduce AI...