SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

Share

Share

Share

Share

சன்ஷைன் குழுமத்தின் முதன்மையான வருடாந்திர பணியாளர் அங்கீகாரத் திட்டமான SUN Awards 2026, நிகழ்வு அண்மையில் ‘எதிர்காலத்தை மறுவடிவமைப்போம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்றது. 2025/26 நிதியாண்டில் வணிக வளர்ச்சி, நிறுவன ஒத்துழைப்பு, தலைமைத்துவம் மற்றும் நிறுவனத்தின் முழுமையான மாற்றம் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றிய ஊழியர்களை இந்த நிகழ்வு அங்கீகரித்து கௌரவித்தது.

குழுமத்தின் முக்கிய வணிகப் பிரிவுகளான சுகாதாரம், நுகர்வோர் பொருட்கள் மற்றும் விவசாய வணிகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைத்தது. மேலும், 2025/26 நிதியாண்டில் சிறந்த செயல்திறன், ஒத்துழைப்பு, சுறுசுறுப்பு மற்றும் தெளிவான நோக்கத்தை வெளிப்படுத்திய தனிநபர்களையும் குழுக்களையும் இது அங்கீகரித்தது. இந்த ஆண்டின் தொனிப்பொருளானது, எதிர்காலத்திற்கு பொருத்தமான ஒரு நிறுவனத்தை உருவாக்குவதிலும், புத்தாக்கங்களை ஏற்றுக்கொள்வதிலும், தலைமைத்துவ திறன்களை வலுப்படுத்துவதிலும், சுறுசுறுப்பை வளர்ப்பதிலும், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் சமூகங்களுக்கு நீண்டகால மதிப்பை உருவாக்குவதிலும் சன்ஷைன் நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அக்கறையை பிரதிபலித்தது.

இந்த விழாவில் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், குழுமத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் நிறுவனத்தின் சிரேஷ்ட தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அன்றைய நிகழ்வில், தனிநபர்களின் பங்களிப்பு மற்றும் குழுவின் கூட்டு வெற்றியைப் பாராட்டும் வகையில் தகுதி விருதுகள், சிறந்த செயல்பாட்டு விருதுகள் மற்றும் தலைவரின் விருதுகள் உட்பட மொத்தம் 169 விருதுகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில் ஊழியர்கள் வெளிப்படுத்திய சிறந்த திறமைகளை இந்த விருதுகள் அங்கீகரித்தன. இது சன்ஷைன் நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு வழிவகுக்கும் பல்வேறு திறமைகளைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.

நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ஊழியர்களையும் குழுமம் கௌரவித்தது. அதன்படி, 10 முதல் 25 ஆண்டுகள் வரை நிறுவனத்திற்குப் பங்களித்த குழு உறுப்பினர்களுக்கு நீண்டகால சேவைக்கான விருதுகள் என 119 விருதுகள் வழங்கப்பட்டன. இந்த அங்கீகாரங்கள், ஊழியர்களின் நம்பிக்கை, நிலையான உழைப்பு மற்றும் நிறுவனத்தைப் பற்றிய அவர்களது ஆழமான அனுபவ அறிவு ஆகியவற்றுக்கு சன்ஷைன் நிறுவனம் வழங்கும் பாராட்டுகளைப் பிரதிபலித்தன.

இந்த விழாவில் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் பேசுகையில், “இந்த ‘Sun Awards’ வெறும் வெற்றிகளை மாத்திரமே அங்கீகரிக்கவில்லை; மாறாக, சன்ஷைன் நிறுவனத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் நமது ஊழியர்களின் சிந்திக்கும் திறன், சவால்களை எதிர்கொள்ளும் மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றையே இது கொண்டாடுகிறது. வேகமாக மாறிவரும் இந்தச் சூழலில் நாம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், நமது வெற்றியானது புத்தாக்கங்களைப் புகுத்துவதிலும், இணைந்து பணியாற்றுவதிலும், வித்தியாசமாகச் சிந்திப்பதில் நமக்கே நாம் சவால் விடுப்பதிலும் தான் தங்கியுள்ளது. ‘எதிர்காலத்தை மறுவடிவமைப்போம்’ என்பது ஒரு தொனிப்பொருள் மாத்திரமல்ல, அது சன்ஷைன் நிறுவனத்தின் அடுத்த கட்டப் பயணத்தை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவதற்கான ஒரு அழைப்பாகும். நமது கூட்டு வெற்றிக்கு பங்களித்த நமது குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்,” என தெரிவித்தார்.

முக்கிய விருதுகளுக்கு அப்பால், ‘Shine Awards’ என்ற சிறப்பு விருதுகளும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. பணிபுரியும் இடத்தை மிகவும் மகிழ்ச்சியான, இனிமையான மற்றும் ஆதரவான சூழலாக மாற்ற உதவிய ஊழியர்களின் பங்களிப்பை இந்த விருதுகள் கௌரவித்தன. மேலும், விறுவிறுப்பான பாடல், நடனம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் அன்று மாலை பொழுது மிகவும் உற்சாகமாக அமைந்தது. இது ஊழியர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடுவதற்கான ஒரு சிறந்த சூழலை உருவாக்கியதுடன், சன்ஷைன் குழுமத்தின் வலுவான ஒற்றுமையையும் வெளிப்படுத்தியது.

கடந்த நிதியாண்டில், மார்ச் 31, 2026 உடன் முடிவடைந்த காலப்பகுதியில் (FY26) இக்குழுமம் 65.9 பில்லியன் ரூபாய் மொத்த ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.2% (YoY) வளர்ச்சியாகும். சுகாதாரத் துறையின் தொடர்ச்சியான விரிவாக்கம், நுகர்வோர் துறையின் சிறந்த முன்னேற்றம் மற்றும் விவசாய வணிகத்தின் வலுவான பங்களிப்பு ஆகியவையே இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் மிகச்சிறந்த சொத்து அதன் ஊழியர்களே என்ற நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில், SUN Awards 2025 நிகழ்வானது மனிதர்கள், அவர்களின் நோக்கம் மற்றும் செயல்பாட்டுத் பெருமிதம் ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு விழாவாக அமைந்தது.

உலகளாவிய பொழுதுபோக்கு வரைபடத்தில் கொழும்பிற்கு புதிய...
ADRA Ceylon Elevates Ceylon Tea...
First Capital, மேம்படுத்தப்பட்ட நீர்கொழும்புக் கிளை...
AI නිර්මාණයන් ගැන දැනගෙන සමාජ...
Janashakthi Life named among Sri...
ஜனசக்தி பைனான்ஸ், சிறந்த சேவையை முன்னெடுப்பதற்காக...
சிறந்த சில்லறை விற்பனையாளர்களை கௌரவிக்கும் Retailer...
Sampath Bank Enhances Care at...
ஜனசக்தி பைனான்ஸ், சிறந்த சேவையை முன்னெடுப்பதற்காக...
சிறந்த சில்லறை விற்பனையாளர்களை கௌரவிக்கும் Retailer...
Sampath Bank Enhances Care at...
Colombo Dockyard to Build Ultra-Modern...