Sunshine Foundation for Goodஇன் 20வது நீர் சுத்திகரிப்பு அலகு சேனகமவில் திறந்து வைக்கப்பட்டது

Share

Share

Share

Share

தியசரண திட்டத்தின் மூலம் இலங்கை வாழ் மக்களின் வாழ்வில் நன்மையைக் கொண்டுவருவதற்கான தனது உறுதிப்பாட்டை சன்ஷைன் வலியுறுத்துகிறது

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் சமூகம் எதிர்கொள்ளும் நீர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தொடர்ந்து உறுதியளிக்கும் முயற்சியாக, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) பிரிவான சன்ஷைன் ஃபவுண்டேஷன் ஃபார் குட் (SFG), அதன் 20வது RO Plantஐ ஆரம்பித்தது. நாவுலவில் உள்ள சேனகம, கிராமத்தில் இந்த நீர் சுத்திகரிப்பு அலகு (RO Plant) அண்மையில் திறக்கப்பட்டது. இந்தத் திட்டம் கிராமத்தில் வசிக்கும் 2,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதையும், நீரினால் பரவும் நோய்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

20வது RO Plantஐ திறந்து வைத்துப் பேசிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவன தொடர்பு மற்றும் சமூகப் பொறுப்பு முகாமையாளர் திருமதி லாலன்தி ராஜபக்ஷ, “இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் நாள்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள (CKD) நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, பாதுகாப்பான குடிநீரின் அவசியத்தை தெளிவாகக் காட்டுகிறது. இத்தகைய சூழலில், சேனகமவில் நாங்கள் திறந்த நீர் சுத்திகரிப்பு அலகு (RO Plant), வெறும் நீர் சுத்திகரிப்பு முறைக்கு அப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சமூகத்திற்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இது கருதப்படலாம். “நாங்கள் நிறுவும் ஒவ்வொரு நீர் சுத்திகரிப்பு அலகும் ஆயிரக்கணக்கான உயிர்களை நீரினால் பரவும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.” என தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டில் நாள்பட்ட சிறுநீரக நோயை ஒழிப்பதற்காக சன்ஷைன் அறக்கட்டளையால் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான படியாக தியசரண திட்டம் உள்ளது. கதிர்காமத்தில் தனது முதல் நீர் சுத்திகரிப்பு அலகை நிறுவிய பிறகு, சன்ஷைன் ஃபவுண்டேஷன் ஃபார் குட், நாடு முழுவதும் 20 நீர் சுத்திகரிப்பு அலகுகளை (RO Plants) வெற்றிகரமாக நிறுவியுள்ளது, இது ‘Better Water, Better Life’ என்ற அவர்களின் தூர நோக்கு திட்டத்தை மேலும் மேம்படுத்துகிறது. “Clean Water and Sanitation” குறித்த ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு (UN SDG 4) உடன் மேலும் இணைந்து, அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் குடிநீருக்கான நியாயமான மற்றும் சமமான அணுகலை உறுதி செய்வதில் SFG உறுதிபூண்டுள்ளது.

சன்ஷைன் ஹோல்டிங்ஸின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட சன்ஷைன் ஃபவுண்டேஷன் ஃபார் குட், குழுமத்திற்குள் உள்ள அனைத்து நிறுவனங்களின் சமூகப் பொறுப்புத் திட்டங்களையும் ஒன்றிணைத்து, ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் சமூகங்களை மேம்படுத்தும் ஒரே இலக்கின் கீழ், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரண்டு முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகிறது.

Huawei Commercially Verifies the World’s...
MAS Holdings, වේගවත් තිරසාර ඇඟලුම්...
Colombo Comedy Show 2025 to...
MAS ஹோல்டிங்ஸினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Plan for...
JAAFஇன் ஆடை ஏற்றுமதி செயல்பாடு குறித்த...
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
Social Media’s Role in STEM...