Suwa Diviya மற்றும் McKinsey Sri Lanka ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான ஆரோக்கியமான வாழ்க்கை முறை செயலமர்வு…

Share

Share

Share

Share

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடர்ச்சியாக பேணுவது என்பது, வாழ்வு முழுவதும் சிறப்பாக வாழவும் , நீண்ட ஆயுளையும் பெற்றுக்கொள்வதற்கான மூலகாரணமாக அமையும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது நிறைவானதும் ,சமநிலையானதுமான வாழ்க்கையை வாழ அடிப்படையாக விளங்குகிறது, இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும் செல்வாக்கு செலுத்துகின்றது.

அந்தவகையில் நாட்டில் அதிகரித்து வரும் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பான Suwa Diviya , McKinsey Sri Lanka – Young Leaders Sri Lanka உடன் இணைந்து ஆரோக்கியமான வாழ்க்கையைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்த விரிவான செயலமர்வு ஒன்றை அண்மையில் நடத்தியிருந்தது.

தொற்றாத நோய்கள் (NCD) தொடர்பான சமூக தாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கபப்ட்ட இந்த செயலமர்வானது 2024 மே மாதம் 28ஆம் திகதி கொழும்பு 10 விவேகானந்தா கல்லூரியிலும், கொழும்பு 03 புனித தோமியர் ஆரம்பக்கல்வி பாடசாலையிலும் வெற்றிகரமாக நடைபெற்றது.

குழந்தைகள் அன்றாடம் பயன்படுத்தும் கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்தி, ஆரோக்கியமான, சீரான வாழ்க்கையின் அடிப்படைகள் பற்றிய பெறுமதிமிக்க நடைமுறை சார்ந்த அறிவை இந்த செயலமர்வு மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அத்துடன், சமூகங்களில் நேர்மறையான சிந்தனை மாற்றங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த செயலமர்வில் -மாணவர்களுக்கு சிறுவயதிலிருந்தே ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தைப் உணர்ந்து செயலமர்வும் நடத்தப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அந்த வகையில் செயலமர்வானது அனைவரினதும் அமோக வரவேற்பை பெற்றுக்கொண்டதுடன், செயலமர்வில் பங்குபற்றிய அனைவரும் பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ளகூடியாதக இருந்த அதேவேளை, மருத்துவ நிபுணர் காயத்ரி பெரியசாமி தலைமையில் செயல்படுகின்ற Suwa Diviya, தனது முயற்சிகள் மூலம் சமூகங்களை மேலும் வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. குறிப்பாக, நீரிழிவு விழிப்புணர்வு மற்றும் நீரழிவு கட்டுப்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சுகாதார வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை உள்ளடக்கிய ஒரு வலையமைப்பாக Suwa Diviya விளங்குகின்றமை விசேட அம்சமாகும்.

 

nVentures Emerges as Sri Lanka’s...
Sri Lanka’s Textile and Apparel...
Sunshine Holdings reports 11.6% YoY...
C Rugby තරඟාවලියට සියල්ල සූදානම්...
நிலையான வணிகத்தை வலுப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியத்தின்...
இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது...
மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு...
Bring home Samsung’s 32-inch HD...
இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது...
மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு...
Bring home Samsung’s 32-inch HD...
HNB Finance இன் “திரியென் தியுனுவட்ட...