TikTok இன் 2025 இரண்டாவது காலாண்டுக்கான சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கை வெளியீடு

Share

Share

Share

Share

TikTok நிறுவனம் 2025 இரண்டாம் காலாண்டிற்கான சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, பயனர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த அறிக்கையில், TikTok தனது சமூக வழிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அகற்றுவதற்கான நடவடிக்கைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கான முயற்சியை நிறுவனம் உறுதிப்படுத்துகிறது.

2025ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், TikTok நிறுவனம் இலங்கையில் சமூக வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய 1,438,046 வீடியோக்களை அகற்றியுள்ளது. இதில் 99% முன்னெச்சரிக்கை நீக்கமாகவும், 79% வீடியோக்கள் 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டனவாகவும், 1,108,371 வீடியோக்கள் தானியங்கி கண்காணிப்பு மற்றும் கண்டறியும் தொழில்நுட்பங்களின் (automated detection technologies) உதவியுடனும் நீக்கப்பட்டுள்ளன.

உலகளவில், TikTok நிறுவனம் இந்த காலாண்டில் 189 மில்லியன் (189,578,228) வீடியோக்களை நீக்கியுள்ளது. இது தளத்தில் பதிவேற்றப்படும் மொத்த உள்ளடக்கத்தில் 0.7 சதவீதமாகும். அகற்றப்பட்ட காணொளிகளில், 163,962,241 வீடியோக்கள் தானியங்கி தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன. அதே நேரத்தில் 7,457,309 வீடியோக்கள் மேலதிக ஆய்வுக்குப் பின் மீண்டும் தளத்தில் சேர்க்கப்பட்டன. முன்னெச்சரிக்கை அடிப்படையிலான நீக்க விகிதம் 99.1% ஆகவும், குறியிடப்பட்ட உள்ளடக்கத்தில் 94.4% பதிவிடப்பட்ட 24 மணிநேரத்திற்குள் நீக்கப்பட்டதாகவும் உள்ளது. இதனிடையே, TikTok தளத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, இந்த காலாண்டில் 76,991,660 போலி கணக்குகளை நீக்கியதோடு, 13 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்பட்ட 25,904,708 கணக்குகளையும் நீக்கியுள்ளது.

இந்த அறிக்கையின்படி, அகற்றப்பட்ட மொத்த வீடியோக்களில் குறிப்பிடத்தக்க அளவான 30.6 சதவீத வீடியோக்கள் TikTok-இன் உள்ளடக்க விதிமுறைகளுக்கு ஒவ்வாத உணர்வுபூர்வமான அல்லது வயதுக்கேற்ற பொருத்தமற்ற தலைப்புகளைக் கொண்டிருந்தன. மேலும் 14.0 சதவீத காணொளிகள் தளத்தின் பாதுகாப்பு மற்றும் நாகரிக நெறிமுறைகளை மீறியதாகவும், 6.1 சதவீதம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறியதாகவும் கண்டறியப்பட்டது. மேலும், நீக்கப்பட்ட வீடியோக்களில் 45.0 சதவீதம் தவறான தகவல்களைக் கொண்டிருந்ததாகவும், 23.8 சதவீதம் திருத்தப்பட்ட ஊடகப் பொருட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களாகவும் அடையாளம் காணப்பட்டன.

சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கையின் தொடர் வெளியீடு, உள்ளடக்கம் மற்றும் பயனர் கணக்குகள் மீதான நடவடிக்கைகளின் அளவு மற்றும் இயல்பு குறித்த பார்வைகளை வழங்குகிறது. இது முழுமையான வெளிப்படைத்தன்மை மீதான TikTok நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. 2025 முதல் காலாண்டு அறிக்கை பற்றிய விரிவான தகவல்களைப் பெறவும், TikTok-இன் உள்ளடக்க வழிகாட்டுதல்கள், கருவிகள் மற்றும் கொள்கைகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளவும், TikTok-இன் வெளிப்படைத்தன்மை மையத்தை (Transparency Centre) பார்வையிடவும்.

Sampath Bank and NCE Empower...
TikTok 2025 දෙවන කාර්තුවේ ප්‍රජා...
Coca-Cola-வின் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும்...
Sri Lanka’s Corporate Professionals Stir...
Coca-Cola நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான...
RIUNIT to Promote Sri Lanka’s...
JAAF statement on Apparel export...
TikTok இன் 2025 இரண்டாவது காலாண்டுக்கான...
RIUNIT to Promote Sri Lanka’s...
JAAF statement on Apparel export...
TikTok இன் 2025 இரண்டாவது காலாண்டுக்கான...
China Mobile Shandong and Huawei...