சமூக ஊடகங்கள் இன்று பொழுதுபோக்கு அம்சத்தையும் கடந்து, பல படைப்பாளிகளுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கி, சமூகத்தை விழிப்பூட்டும் ஒரு சக்திவாய்ந்த காரணியாக மாறியுள்ளது. சாஷா கே. அல்லது சாஷா கருணாரத்னவும் இத்தகைய வாய்ப்பின் மூலம் TikTok தளத்தில் வெற்றி பெற்ற ஒரு படைப்பாளி ஆவார்.
ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக பிரபலமான இவர், தொலைக்காட்சியின் பாரம்பரிய எல்லைகளைக் கடந்து, மில்லியன் கணக்கான பார்வையாளர்களை சென்றடைவது ஒரு TikTok படைப்பாளராக ஆகும். தொகுப்பாளராhக தனது அனுபவத்தையும், திறமையையும் சிறப்பாகப் பயன்படுத்தி, வுமைவுழம இல் நிறப்பாகுபாடு மற்றும் மாதவிடாய் வறுமை போன்ற சிறப்பு தலைப்புகளில் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
அதனால்தான் ஒரு தொகுப்பாளராக குறுகிய ஆக்கபூர்வமான வீடியோக்கள் மூலம் தனது பார்வையாளர்களுடன் தொடர்புகொண்டு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிந்த சாஷா, இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ‘தொலைக்காட்சியை விட அதிக பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை வுமைவுழம வழங்கியுள்ளது. தொலைக்காட்சி மூலம் ஆங்கிலம் பேசும் மிகச் சிறிய பார்வையாளர்களை மட்டுமே அடைந்த நான், TikTok மூலம் முன்பு எப்போதும் தொடர்புகொள்ள முடியாத பல்வேறு பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தது.’ என்றார்.
சிறு வயது முதலே நிறப்பாகுபாடு பற்றி கேள்வி எழுப்பிய சாஷா, அது குறித்த தனது கருத்துக்களை முன்வைத்து பலருக்கும் அறிவை வழங்கினார். குறிப்பாக, ஒரு இளம் பெண்ணாக, அழகுசாதனப் பொருட்கள் இல்லாமல் இயற்கையான தோலின் நிறம் குறித்த நேர்மறையான கருத்துக்களை முன்வைக்கும் அவர், ஒருவரின் மதிப்பும் அழகும் தோலின் நிறத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதை வலியுறுத்துகிறார். திறமைகள் மற்றும் அழகு மூலம் வாழ்க்கையை வென்றெடுக்க இதன் மூலம் அவர் ஊக்குவிக்கிறார்.
TikTok தளத்தில் மாதவிடாய் வறுமைக்கு எதிராக குரல் கொடுக்கும் அவர், பெண்கள் எதிர்கொள்ளும் பிற சவால்கள் குறித்தும் சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தி, பெண்களின் வாழ்க்கைக்கு ஆதரவாக இருக்கிறார். மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றிய விழிப்புணர்வு, அது தொடர்பான சமூகத்தில் உள்ள தவறான கருத்துக்களை அகற்றுதல் மற்றும் அதற்குத் தேவையான வளங்களை பெறும் திறனை வழங்குவதற்காக Fems போன்ற வர்த்தகநாமங்களுடன் இணைந்து பணியாற்றும் சாஷா, பெண்கள் பொது வெளியில் எதிர்கொள்ளும் சிரமங்களையும் சமூகத்திற்கு நினைவூட்டுகிறார்.
அதோடு நில்லாமல், பல பார்வையாளர்களுக்கு அறிவை வழங்க முடியும் என்பதால் பல விடயங்களைப் பற்றி பேச சாஷா TikTok தளத்தைப் பயன்படுத்துகிறார். அன்றாட வாழ்க்கைக்கான உள்ளடக்கங்கள் மற்றும் அழகு குறித்த அறிவு மற்றும் நவநாகரீகம் பற்றிய புரிதலை வழங்குவதோடு, பயண வீடியோக்கள் மற்றும் உணவு தொடர்பான உள்ளடக்கங்களையும் பகிர்ந்து கொள்கிறார். பன்முகத்தன்மையின் தளத்தை உருவாக்கவும் அவர் பணியாற்றுகிறார். ‘நான் நவநாகரீகரம், விளையாட்டு, அழகு மற்றும் பயணங்களை விரும்புகிறேன். எனவே அது தொடர்பான உள்ளடக்கங்களை எனது பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று அவர் கூறுகிறார்.
‘TikTok விரைவாக கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய தளம். அதன் மூலம் பல விடயங்களை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடியும். மேலும், பார்வையாளர்களின் பிரதிபலிப்புகளின் அடிப்படையில் உள்ளடக்கங்களை மாற்றவும், புதிய உள்ளடக்கங்களை சேர்க்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. பார்வையாளர்களுடன் இணைந்து அவர்களின் அறிவை மேம்படுத்த வாய்ப்பளிக்கும் இது முக்கியமான உரையாடல்களுக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது’ என்று TikTok பற்றி சாஷா கருத்து தெரிவிக்கிறார்.
சாஷாவின் பல வீடியோக்கள் பிரபலமானவை. தனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்ற கருத்துக்கு பதிலளித்து சாஷா பதிவிட்ட வீடியோ பலரிடையே பிரபலமானதுடன் பிற சமூக ஊடகங்களிலும் அது பிரபலமானது. மேலும், தனது சொந்த வாழ்க்கை பற்றி வழங்கிய நேர்காணலுக்கும் பார்வையாளர்களிடமிருந்து அதிக வரவேற்பைப் பெற முடிந்தது.
TikTok தளத்திற்கு வரும் படைப்பாளர்களுக்கு, தங்கள் படைப்புகளை அதிக பார்வையாளர்களிடம் கொண்டு செல்வது குறித்து சாஷா கருத்து தெரிவிக்கையில், ‘உங்கள் படைப்புகள் உண்மையானதாக இருக்க வேண்டும். உண்மையான மற்றும் சரியான விடயங்கள் மூலம் அதிக பார்வையாளர்களை அடைய முடியும் என்பதால் நீங்கள் அனுபவிக்கும் விடயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்பதாகும்.
தனது இதயத்திற்கு நெருக்கமான பிரச்சினைகளை TikTok மூலம் முன்வைத்து சமூகத்தை விழிப்பூட்டும் சாஷா, சமூக ஊடகங்கள் பொழுதுபோக்கிற்கு மட்டுமல்லாமல் பல விடயங்களுக்கும் பயன்படுத்தப்படலாம் என்பதை வலியுறுத்துகிறார். தனது குரல் மற்றும் ஆளுமை மூலம் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் இதயங்களுடன் தொடர்பு கொள்கிறார்.