TikTok தனது 2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு சமூக வழிகாட்டுதல்கள் செயலாக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது

Share

Share

Share

Share

TikTok 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு (2023 ஏப்ரல்-ஜூன்) சமூக வழிகாட்டுதல்கள் செயலாக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது, தவறான தகவல்களுக்கு எதிரான போராட்டம் மற்றும் பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இடத்தை உருவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது. TikTok தனது பாவனையாளர்களின் நம்பிக்கையைப் பெறவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தொடர்ந்து பாடுபடுகிறது என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. தனது சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தை அகற்றவும், தவறான தகவல்களின் பரவலைத் தடுக்கவும் TikTok தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

2023 இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) உலகளவில் 106,476,032 வீடியோக்கள் அகற்றப்பட்டன, இது TikTokஇல் பதிவேற்றப்பட்ட மொத்த வீடியோக்களில் 0.7% ஆகும். இவற்றில், 66,440,775 வீடியோக்கள் தானியக்க முறைகள் மூலம் அகற்றப்பட்டன, அதே நேரத்தில் 6,750,002 வீடியோக்கள் மறுபரிசீலனைக்குப் பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டன. சமூக வழிகாட்டுதல்கள் மீறல்களை கையாள்வதற்கு இணையாக, TikTok தீவிரமாக Spam கணக்குகளை இலக்காகக் கொண்டு, தொடர்புடைய உள்ளடக்கத்தையும் கையாண்டது. தானியங்கி Spam கணக்குகளை உருவாக்குவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.

மேலும், 13 வயதுக்குட்பட்ட பாவனையாளர்களுக்குச் சொந்தமானவை என சந்தேகிக்கப்பட்ட 18,823,040 கணக்குகளை TikTok அகற்றியது, இது இளம் பாவனையாளர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

TikTokஇன் சமூக வழிகாட்டுதல்கள் அனைத்துப் பாவனையாளர்களுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் உண்மையான அனுபவத்தை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்கைகள் அனைவருக்கும், அனைத்து வகையான உள்ளடக்கங்களுக்கும் பொருந்தும், TikTok அவற்றைச் செயல்படுத்துவதில் நிலைத்தன்மை மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்காக பாடுபடுகிறது.

TikTok தனது சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தை அடையாளம் காணவும், மதிப்பீடு செய்யவும், நடவடிக்கை எடுக்கவும் புத்தாக்கமான தொழில்நுட்பம் மற்றும் மனித மதிப்பீட்டை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துகிறது. காலாண்டுக்கு ஒரு முறை வெளியிடப்படும் சமூக வழிகாட்டுதல்கள் செயலாக்க அறிக்கை, அகற்றப்பட்ட உள்ளடக்கம் மற்றும் கணக்குகளின் அளவு மற்றும் தன்மை பற்றிய தகவல்களை வழங்குகிறது, இது முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது. 2023இன் இரண்டாவது காலாண்டு அறிக்கையைப் பார்க்க, TikTokஇன் வெளிப்படைத்தன்மை மையத்தைப் பார்வையிடவும், இது ஆங்கிலத்தில் கிடைக்கிறது.

TikTokஇன் உள்ளடக்க வழிகாட்டுதல்கள், கருவிகள் மற்றும் கொள்கைகள் பற்றி மேலும் அறிய, சமூக வழிகாட்டுதல்களைப் (Community Guidelines) பார்க்கவும்.

 

ලංකා වැවිලිකරුවන්ගේ සංගමයේ 171 වන...
මගී සුවපහසුව වෙනුවෙන් කවදත් මුල්තැන...
Huawei Unveils Three-step “ACT” Pathway...
Reclaim Your Home’s Aesthetics: Samsung...
Ceylon Specialty Estate Tea Awards...
Sumathi IT Introduces Sri Lanka’s...
Cinnamon Life ශ්‍රී ලංකාවේ වෙරළ...
ශ්‍රී ලාංකේය තාරුණ්‍යයේ අධ්‍යාපනය, ගවේෂණය...
Sumathi IT Introduces Sri Lanka’s...
Cinnamon Life ශ්‍රී ලංකාවේ වෙරළ...
ශ්‍රී ලාංකේය තාරුණ්‍යයේ අධ්‍යාපනය, ගවේෂණය...
HNB மற்றும் TVS Lanka இணைந்து...