இலங்கை தம்பதியினரான தாரிகா மற்றும் டிலான் பயணத்தை மிகவும் எளிமையான, அனைவரும் அணுகக்கூடிய அனுபவமாக மாற்றியுள்ளனர். அவர்கள் ஒரு ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மூலம் @notesfromsl, என்ற TikTok கணக்கில் இலங்கையின் மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சிகள், அமைதியான நடைப்பயணங்கள், மலிவான விடுதிகள் மற்றும் உள்ளூர் உணவுகளைப் பகிர்ந்து, ஆயிரக்கணக்கான மக்களுக்கு குறைந்த செலவில் பயணிக்க உதவுகிறார்கள்.
TikTok புகழுக்கு முன்பு, தாரிகாவும் டிலானும் வெறும் பயண ஆர்வலர்கள் மட்டுமே. அவர்கள் சமூக ஊடக பிரபலங்கள் ஆகும் நோக்கத்துடன் தொடங்கவில்லை. மாறாக மற்றவர்கள் கவனிக்காத இடங்களைக் கண்டறியும் ஆர்வத்தால் இணைந்தனர். ‘வழக்கமான வரைபடத்தில் இல்லாத, உண்மையான இலங்கையை அனுபவிக்கக்கூடிய இடங்களைக் கண்டுபிடிப்பதை விரும்பினோம்’ என்கிறார்கள். வார இறுதி நாட்களில் சென்ற சுற்றுலாக்கள் படிப்படியாக ஒரு பெரிய நோக்கமாக மாறி, தங்கள் நினைவுகளையும் அனுபவங்களையும் பதிவு செய்யத் தொடங்கினர்.
விலையுயர்ந்த பயணங்கள் பலருக்கு எட்டாத கனவாக இருந்தாலும், ஆராயும் ஆர்வம் அனைவருக்கும் பொதுவானது என்பதால், அவர்களின் பகிர்வுகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
தாரிகாவும் டிலானும் மற்ற பயண சமூக ஊடக பிரபலங்களிடமிருந்து வேறுபடுவதற்கு காரணம் அவர்களின் உண்மைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு. அவர்கள் காண்பிக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் நேரடியாகச் சென்று, விடுதிகளின் தரத்தை ஆய்வு செய்து, உணவை ருசித்து, விலைகளை உறுதிப்படுத்தி, உள்ளூர் மக்களுடன் உரையாடுகிறார்கள். ‘எங்கள் பார்வையாளர்கள் நேர்மையான ஆலோசனைகளுக்காக எங்களை நம்புகிறார்கள்,’ என்கிறார் தாரிகா. ஒரு இடம் தரமற்றதாக இருந்தால், அது எவ்வளவு அழகாகத் தெரிந்தாலும், அவர்கள் அதைப் பரிந்துரைப்பதில்லை. இந்த அர்ப்பணிப்பு குறைந்த செலவில் பயணிக்க விரும்புவோருக்கு அவர்களை நம்பகமான வழிகாட்டிகளாக ஆக்கியுள்ளது.
தாரிகாவும் டிலானும் தங்கள் பயண அனுபவங்களைப் பகிர டிக்டாக்கைத் தேர்ந்தெடுத்தனர். ஏனெனில் இது உண்மையான, எளிமையான உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தளம். ‘விரைவான, நேர்மையான பயண குறிப்புகளைப் பகிர TikTok சரியான இடம்,’ என்கிறார் டிலான். அவர்களது ஒரு நிமிடத்திற்கும் குறைவான வீடியோக்கள் ஒவ்வொரு இடத்தின் சாராம்சத்தையும் – நீர்வீழ்ச்சி ஒலி, உணவின் மணம், இயற்கையின் அழகு – சித்தரிக்கின்றன. TikTok இன் எளிமையான பயன்பாடு, உள்ளமைந்த பதிப்பு கருவிகள், பல்வேறு ஒலி மற்றும் விளைவுகள் அவர்களுக்கு எளிதாக படைப்பாற்றலுடன் உள்ளடக்கத்தை உருவாக்க உதவுகிறது. மேலும், TikTok இன் சமூக அம்சங்களும் ஹாஷ்டேக் அமைப்பும் அவர்களுக்கு பரந்த பார்வையாளர்களைச் சென்றடையவும், ஒரு நெருக்கமான சமூகத்தை உருவாக்கவும் உதவுகின்றன. இவ்வாறாக TikTok அவர்களுக்கு வெறும் ஒரு தளம் மட்டுமல்ல, ஒரு படைப்பாற்றல் கூட்டாளியாகும்.
தாரிகாவும் டிலானும் தங்களின் வளரும் பின்தொடர்பவர்களால் ஊக்கமளிக்கப்பட்டு, இலங்கையில் குறைந்த செலவில் பயணிக்க விரும்புவோருக்காக ஒரு ஹோட்டல் முன்பதிவு தளத்தை உருவாக்கி வருகிறார்கள். ‘எங்கள் இலக்கு பயண திட்டமிடலை எளிதாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுவது,’ என்கிறார் டிலான். இவர்களின் கதை அர்த்தமுள்ள பயணங்களுக்கு அதிக செலவு தேவையில்லை என்பதை நிரூபிக்கிறது. சாகசம் எளிமையாகவும், மலிவாகவும், மனநிறைவு தருவதாகவும் இருக்கலாம் என்பதை அவர்கள் காட்டுகிறார்கள். பயணத்தின் உண்மையான மதிப்பு ஆர்வத்திலும், இணைப்பிலும், ஆராயும் துணிவிலும் உள்ளது. பணத்தில் அல்ல. அவர்களின் செய்தி தெளிவானது. இலங்கையின் அழகு அனைவருக்கும் உரியது, சரியான வழிகாட்டுதலுடன் யாரும் அதைக் கண்டறியலாம்.