TikTok மூலம் இலங்கையின் உணவுக் கலாச்சாரத்தை உலகிற்கு கொண்டு செல்லும் “Travel Today”

Share

Share

Share

Share

இலங்கையின் உணவுக் கலாச்சாரத்தை TikTok தளத்தின் மூலம் உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் முன்னோடியாக “Travel Today” திகழ்கிறது. இதன் நிறுவனர் சந்தரு பண்டார வீரசேகர (பண்டா) இன்று இலங்கையின் முன்னணி உணவு உள்ளடக்க உருவாக்குநராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

‘2018ல் இலங்கையில் உணவு விமர்சனங்களுக்கென பிரத்யேக யூடியூப் அலைவரிசை இல்லாத நிலையில் எங்கள் பயணம் தொடங்கியது,’ என்று சந்தரு பண்டார தெரிவித்தார். அவரது முதல் முயற்சி வீதியோர உணவுகளை ஆவணப்படுத்துவதாக இருந்தது. இது பார்வையாளர்களிடம் உடனடி வரவேற்பைப் பெற்றது.

வாரத்திற்கு குறைந்தது ஒரு வீடியோ என்ற அடிப்படையில் தொடங்கிய இந்த முயற்சி, பின்னர் சமூக ஊடகங்களின் வளர்ச்சியுடன் TikTok தளத்தையும் அணுகியது. ‘TikTok ஆரம்பத்தில் எங்களுக்கு பின்னணி எண்ணம்தான். ஆனால் சில வீடியோக்களை பதிவேற்றியபோது, அவை வைரலாகின. இரண்டே ஆண்டுகளில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைப் பெற்றோம்,’ என அவர் கூறினார்.

‘இலங்கையின் உணவுக் கலாச்சாரம் வளமானது, ஆனால் பெரும்பாலும் ஒரே உணவு வகைகள் எங்கும் காணப்படுகின்றன,’ என்று சந்தரு பண்டார கூறுகிறார். அவரது குழுவின் நோக்கம் சாலையோர கடைகள் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை, உணவின் மூலம் கதைகளைச் சொல்லும் இடங்களைக் கண்டுபிடிப்பதாகும்.
TikTok இன் குறுகிய வீடியோ வடிவம் படைப்பாற்றலை ஊக்குவிப்பதாக சந்தரு பண்டார குறிப்பிடுகிறார். தளத்தின் எளிதான பதிப்பு கருவிகள், ஒலி நூலகம், மற்றும் trending இசை அனைத்தும் ஒவ்வொரு காட்சிக்கும் சூழலையும் தனித்துவத்தையும் சேர்க்க உதவுகின்றன.

சமீபத்தில் யாழ்ப்பாணத்தின் உணவுக் காட்சிகளை ஆராய்ந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘Travel Today தளத்தை இலங்கை எல்லைகளுக்கு அப்பால் கொண்டு செல்வதே எங்கள் பெரிய கனவு. யாரும் ஆவணப்படுத்தாத இடங்களில் உணவு சாகசங்கள், பன்னாட்டு எல்லைகளைக் கடக்கும் தனித்துவமான வீடியோ தொடர்கள், மற்றும் மறைந்துள்ள உணவுக் காட்சிகளை கண்டுபிடிப்பது,’ என சந்தரு பண்டார தெரிவித்தார்.
இன்றைய டிஜிட்டல் உலகில், TikTok போன்ற தளங்கள் சந்தரு பண்டார போன்ற படைப்பாளிகளுக்கு அர்த்தமுள்ள, உண்மையான கதைகளைச் சொல்ல சக்திவாய்ந்த மேடையாக விளங்குகின்றன. அணுகக்கூடிய கருவிகள், உயிரோட்டமான சமூகம், மற்றும் படைப்பு சுதந்திரம் ஆகியவை உணவு அனுபவங்களை உண்மையான இணைப்புகளாக மாற்ற உதவுகின்றன.

Travel Today க்கு TikTok வெறும் சமூக ஊடகத் தளம் மட்டுமல்ல, ஒவ்வொரு உணவையும் ஒரு கதையாக, ஒவ்வொரு விருந்தையும் ஒரு அனுபவமாக, மற்றும் ஒவ்வொரு பார்வையாளரையும் ஒரு சுவையான பயணத்தில் உடன் பயணியாக மாற்றும் படைப்பு கூட்டாளியாகும்.

TikTok, ශ්රී ලංකාව තුළ STEM...
TikTok partners with the Government...
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக...
GlobalData Report Recognizes Huawei 5G...
මිචලින්, ශ්‍රී ලංකා රතු කුරුස...
Sampath Bank Crowned as the...
TikTok மூலம் இலங்கையின் உணவுக் கலாச்சாரத்தை...
AI adoption and threat complexity...
Sampath Bank Crowned as the...
TikTok மூலம் இலங்கையின் உணவுக் கலாச்சாரத்தை...
AI adoption and threat complexity...
Mahindra Ideal Finance, ඉන්ද්‍රා ටේ්‍රඩර්ස්...