TikTok வழியாக இரத்தினக்கல் இரகசியங்களை உலகிற்கு கற்றுக்கொடுக்கும் இலங்கை இளம்பெண் ருவினி

Share

Share

Share

Share

இலங்கையின் இரத்தினக்கல் திரவியங்கள் மற்றும் ஆபரணத் தொழில் துறைக்கு பல நூற்றாண்டுகால உலகளாவிய பெருமையும் பாரம்பரியமும் உண்டு. அரச வம்சங்கள், பெரும் சேகரிப்பாளர்கள் மற்றும் சர்வதேச சொகுசு வர்த்தக நாமங்கள் என பலதரப்பினரையும் ஈர்த்த இலங்கையின் நீல மாணிக்கங்களும் (Blue Sapphires) அரிய வகை இரத்தினகற்களும் உலக சந்தையில் என்றும் தனித்துவமானவை. எனினும், இந்த மின்னும் உலகிற்குப் பின்னால் உள்ள உண்மைகளும் தொழில்நுட்ப அறிவும் சாமானிய மக்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.

வழக்கமாக ஒரு இரத்தினக்கல்லை வாங்குபவர்கள் அதன் அழகை ரசிப்பதோடு சரி; அது ‘சூடாக்கப்பட்டது’ (Heated), ‘இயற்கையானது’ (Natural) அல்லது ‘சான்றளிக்கப்பட்டது’ (Certified) போன்ற தொழில்நுட்ப வார்த்தைகளின் பின்னணியைப் புரிந்து கொள்ள முடியாமல், விற்பனையாளரின் வார்த்தைகளை மட்டுமே நம்பி ஏமாறும் சூழலே நிலவுகிறது. இத்தகைய ஒரு பிரத்தியேகமான மற்றும் இரகசியங்கள் நிறைந்த இத்தொழில்துறையின் போக்கை மாற்றி, இரத்தினக்கல் அறிவியலை உலகளாவிய டிஜிட்டல் சமூகத்திற்கு மிக எளிமையாகக் கொண்டு சேர்த்து வருகிறார் இலங்கையைச் சேர்ந்த இளம் இரத்தினக்கல் நிபுணர் ருவினி.

ருவினி வெறும் இரத்தினக்கல் நிபுணர் மட்டுமல்ல, ஒரு வெற்றிகரமான பெண் தொழிலதிபர் மற்றும் சிறந்த கல்வியாளரும் ஆவார். அவர் தனது ‘ருவினி ஜயரட்ன’ மற்றும் ‘ஃபர்ஸ்ட் சஃபயர்’ (First Sapphire) ஆகிய இரு உள்நாட்டு இரத்தினக்கல் வர்த்தக நாமங்களை அடித்தளத்திலிருந்து கட்டியெழுப்புவதோடு, TikTok தளத்தை ஒரு கல்விப் தளமாக மாற்றிப் பயன்படுத்தி வருகிறார்.

“நான் இலங்கையைச் சேர்ந்த ஒரு இரத்தினக்கல் நிபுணர் மற்றும் ஆபரணத் தொழிலதிபர். இலங்கையின் கலாசாரத்தோடு வளர்ந்த எனக்கு, இரத்தினக்கற்களின் வெளிப்புற அழகை விட, அவற்றுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல், அவற்றின் அரிய தன்மை மற்றும் மனித உழைப்பு ஆகியவையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தின.” என்று கூறும் ருவினி, இத்தொழிலில் இருக்கும் தகவல் சமனற்ற தன்மையைக் குறைக்கவே டிஜிட்டல் தளத்திற்குள் நுழைந்ததாகக் குறிப்பிடுகிறார்.

இரத்தினக்கற்களின் நிறமாற்றம், ஒளிர்வு, உள்ளடக்கத் தன்மைகள் மற்றும் அவை வெட்டி எடுக்கப்படும் விதம் போன்றவற்றை எழுத்து வடிவில் விளக்குவதை விட, காட்சி வடிவில் விளக்குவதே சிறந்தது. அதற்கு TikTok தளத்தின் குறுகிய வடிவ வீடியோக்கள் மிகச் சிறந்த கருவியாக அமைந்தன.

#CeylonSapphire, #SriLankaGems போன்ற ஹேஷ்டேகுகள் மூலம் இலங்கையின் இரத்தினக்கல் பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ருவினி, மிகவும் கடினமான தொழில்நுட்பக் கருத்துக்களை சாமானியர்களும் புரியும் வகையில் எளிய மொழியில் வழங்கி வருகிறார். குறிப்பாக, அவரது Founder Diaries என்ற தொடர் வீடியோக்கள், ஒரு தொழிலை நடத்துவதில் உள்ள சவால்கள், வாடிக்கையாளர் கையாளுதல் மற்றும் உண்மையான கள நிலவரங்களை அப்பட்டமாகப் பேசுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

நவரத்தினத் தொழிலைப் பொறுத்தவரை வாடிக்கையாளரின் ‘நம்பிக்கை’ தான் மிக முக்கியமானது. நேரடி விற்பனை விளம்பரமாக இல்லாமல், கல்வி சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை ருவினி பகிர்வதால், வாடிக்கையாளர்கள் அவரது கடைக்கு வரும் முன்பே அவரது நிபுணத்துவத்தையும், வெளிப்படைத்தன்மையையும் புரிந்து கொள்கிறார்கள். இது உள்நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் வணிகக் கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.

“இன்று வாடிக்கையாளர்கள் வெறும் பொருட்களை மட்டும் வாங்குவதில்லை. அதன்பின்னால் உள்ள நிறுவனரின் உழைப்பு, கதை மற்றும் மதிப்புகளுடன்தான் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.” என்கிறார் ருவினி.

இலங்கையை வெறும் இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்யும் ஒரு நாடாக மட்டும் பார்க்காமல், இரத்தினக்கல் அறிவு, கலைத்திறன் மற்றும் நெறிமுறை சார்ந்த அகழ்வாராய்ச்சி ஆகியவற்றின் உலகளாவிய மையமாக மாற்ற வேண்டும் என்பதே ருவினியின் இலக்காகும்.

இரத்தினக்கற்கள் என்பவை வெறும் ஆடம்பரப் பொருட்கள் அல்ல. அவை மனித நாகரிகத்தின் வரலாறு, கலாசாரம் மற்றும் கைவினைத்திறனின் சான்றுகள் என்பதை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு தூதராக TikTok தளத்தைப் பயன்படுத்தி இரத்தினக்கல் அறிவியலின் எதிர்காலத்தை அவர் மாற்றி வருகிறார்.

2026 ලංකා ප්‍රීමියර් ලීග් තරඟාවලිය...
Prime සමූහය LMD වෙතින් මෙරට...
FACETS Sri Lanka 2027: ஒரு...
Shantha Bandara reappointed SLCPI President...
500 ட்ரோன்கள், முன்னணி கலைஞர்களின் இசை...
“Just a Content Creator?” Tesaarah...
City of Dreams Sri Lanka...
LANKATILES and the Geoffrey Bawa...
“Just a Content Creator?” Tesaarah...
City of Dreams Sri Lanka...
LANKATILES and the Geoffrey Bawa...
உலகளாவிய சைபர் பாதுகாப்புப் தரவரிசையில் Sophos...