YOLO by Prime Lands நிர்மாணமானது 52.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் BOI அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது

Share

Share

Share

Share

Prime Lands (Pvt) Ltd. இன் முக்கிய மைல்கல் திட்டமான ‘YOLO by Prime Lands’, முதலீட்டுச் சபையின் (BOI) அங்கீகாரம் பெற்ற திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக, நகர்ப்புறக் கவர்ச்சியையும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் ஆற்றலையும் கொண்டுள்ள இத்திட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் ஒரு முக்கிய செயற்திட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, 52.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டு உடன்படிக்கையொன்று Prime Lands மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவற்றுக்கிடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது Prime Group இன் வலுவான நிதி நிலை, சிறந்த ஆளுமைத் தரநிலைகள் மற்றும் இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை வலுப்படுத்துவதற்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கிரிபத்கொட, மாகொல பகுதியில் அமைந்துள்ள ‘YOLO by Prime Lands’ உயர்தர நகர்ப்புற வாழ்க்கை முறையை மறுவரையறை செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னோடி குடியிருப்புத் திட்டமாகும். கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலிலிருந்து வெறும் 5 நிமிடப் பயணத் தூரத்தில் அமைந்துள்ள இத்திட்டம், கொழும்பிற்கு 30 நிமிடங்களுக்குள்ளும், கண்டி, குருநாகல், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற பிரதான நகரங்களுக்கு 1½ – 2 மணித்தியாலங்களுக்குள்ளும் இலகுவான போக்குவரத்துத் தொடர்புகளை வழங்குகின்றது. வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயமற்ற வலயத்தில் அமைந்துள்ள YOLO திட்டம், 13 ஏக்கர் நிலப்பரப்பில் 46 கட்டடங்களுடன் 476 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் BBQ மற்றும் உணவுண்ணும் வசதிகளுடன் கூடிய 2,000 சதுர அடி பரப்பளவிலான Rooftop Garden வசதியைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டமானது 2 மற்றும் 3 படுக்கையறைகளைக் கொண்ட பல்வேறுபட்ட அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளதுடன், 100,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் உயர்தரப் பொது வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இதில் 3-வரிசைகளைக் கொண்ட Bowling alley, திரையரங்கு, Coffee shop, Co-working space, Business lounge, Karaoke club, நாணயங்கள் மூலம் இயங்கும் சலவை வசதி மற்றும் மினி சுப்பர்மார்க்கெட் போன்ற வசதிகள் காணப்படுகின்றன. மேலும், Pool bar உடனான நீச்சல் தடாகம், சகல வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் மற்றும் CrossFit உடற்பயிற்சி கூடம், Paddle court, விளையாட்டு கழகம், Jogging path மற்றும் கொண்டாட்ட மண்டபம் போன்ற நவீன வசதிகளையும் YOLO திட்டம் கொண்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் தற்போது திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அனைத்து அலகுகளும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கமைய நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட ‘YOLO by Prime Lands’ திட்டமானது, நவீன மற்றும் எதிர்காலத்திற்கு உகந்த ஒரு கட்டடக்கலை அமைப்பைக் கொண்டுள்ளது. சமகால வடிவமைப்பினைப் புத்தாக்கக் கூறுகளுடன் தடையின்றி ஒன்றிணைப்பதன் ஊடாக, உயர்தர நகர்ப்புற வாழ்க்கை முறையை இது புதிய பரிமாணத்திற்கு இட்டுச் செல்கின்றது.

கட்டடக்கலை மற்றும் வாழ்க்கை முறை சார் ஈர்ப்புகளுக்கு அப்பாற்பட்டு, ‘YOLO by Prime Lands’ திட்டமானது கட்டுமானம், சொத்து முகாமைத்துவம், பராமரிப்பு மற்றும் சேவைத் துறைகளில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது. இது தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கின்றது. வலுவான போக்குவரத்துத் தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுடன் வளர்ந்து வரும் அசையாச் சொத்துத் துறையின் முக்கிய மையமாகத் திகழும் கிரிபத்கொடையில் அமைந்துள்ள இத்திட்டம், உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பை வழங்குகின்றது.

இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் 35 மில்லியன் ரூபா முதல் ஆரம்பமாவதுடன், 1 சதவீத மாதாந்த தவணை மற்றும் 100 சதவீத வட்டியற்ற கொடுப்பனவுத் திட்டங்களையும் கொண்டுள்ளன. மூலதன அதிகரிப்பு மற்றும் வாடகை வருமான சாத்தியப்பாடுகளைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், முதலீட்டாளர்கள் தமது முதலீட்டின் மீது 100 சதவீதம் வரை வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. இலங்கையின் அசையாச் சொத்துத் துறையை வலுப்படுத்துவதிலும், நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவிப்பதிலும் Prime Lands கொண்டுள்ள அர்ப்பணிப்பை YOLO திட்டம் பிரதிபலிக்கின்றது. இது முதலீடு மற்றும் நவீன வாழ்க்கை முறைக்கான ஒரு மையமாக இலங்கையின் நற்பெயரை உலகளவில் மேம்படுத்த வழிவகுக்கும்.

Prime Group பற்றி
Prime Group இலங்கையின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் 30 ஆண்டுகால நீண்டகாலப் பாரம்பரியத்தைக் கொண்ட, நாட்டின் மிகவும் தரம்வாய்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில், குடியிருப்பு, முதலீடு மற்றும் கலப்பு-பயன்பாட்டு (Mixed-use) துறைகளில் வணிகம் மற்றும் கலப்புப் பயன்பாட்டுத் துறைகளில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளையும், 1௦,௦௦௦-க்கும் மேற்பட்ட நில அபிவிருத்திகளையும் வழங்கி, நவீன வாழ்க்கை மற்றும் பணிச் சூழல்களை இலங்கையினூடாக வடிவமைத்து வருகின்றது.

ரியல் எஸ்டேட் துறைக்கு அப்பால், தேசக் கட்டமைப்பு, நிலைபேறான அபிவிருத்தி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றில் Prime Group உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது. சமூக நலன், முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு செயற்திட்டங்களில் இந்நிறுவனம் தொடர்ச்சியாக முதலீடு செய்து வருவதுடன், தனது வியாபார நோக்கங்களுக்கு அப்பால் சமூக மட்டத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

කොකා-කෝලා පදනම සහ හේලීස් වැවිලි...
සම්ප්‍රදාය සහ නවීනත්වය එක්තැන් කළ...
Jazz Powers 1,000 Telecom Sites...
5G-A மற்றும் 6G தொழில்நுட்பத்தில் புதிய...
LankaPay Technnovation Awards 2026 හිදී...
BYD ශ්‍රී ලංකාව තුළ වාහන...
TikTok releases Q4 2025 Community...
ප්‍රවීණ චිත්‍ර ශිල්පී ජයන්ත ප්‍රේමචන්ද්‍රයන්ගේ...
BYD ශ්‍රී ලංකාව තුළ වාහන...
TikTok releases Q4 2025 Community...
ප්‍රවීණ චිත්‍ර ශිල්පී ජයන්ත ප්‍රේමචන්ද්‍රයන්ගේ...
ITC Ratnadipa Presents The Art...